Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ அருளாளர் ஜான் ஃபிரான்சிஸ் புர்ட் மற்றும் தோழர்கள்✠
(Blessed John Francis Burté and Companions)
   
நினைவுத் திருநாள் : (செப்டம்பர் / Sep 02)
✠ அருளாளர் ஜான் ஃபிரான்சிஸ் புர்ட் மற்றும் தோழர்கள்✠
(Blessed John Francis Burté and Companions)

 மறைசாட்சிகள் :(Martyres)

பிறப்பு : ----

இறப்பு : செப்டம்பர் 2, 1792 மற்றும் ஜனவரி 21, 1794

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

நினைவுத் திருநாள் : செப்டம்பர் 2

இந்த குருக்கள் ஃபிரெஞ்ச் புரட்சியால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். மறைசாட்சியாக மரித்த இவர்கள் அனைவரும் வெவ்வேறு காலகட்டங்களில் மரித்திருந்தாலும், இவர்களது ஒரே சிந்தனை, இலட்சியம் மற்றும் கொள்கையால் திருச்சபையின் நினைவில் நிற்கின்றனர். 1791ம் ஆண்டு, பிரெஞ்ச் தேசத்தின் சிவில் அரசியலமைப்பானது, கிறிஸ்தவ குருக்களை கிறிஸ்தவ விசுவாசத்திற்கு மாறாக சத்திய பிரமாணம் எடுத்துக்கொள்ள வலியுறுத்தியது. ஆனால், இதனை மறுதலித்த குருக்கள் அனைவரும் தூக்கிலடப்பட்டனர்.

தமது பதினாறு வயதினிலேயே ஃபிரான்சிஸ்கன் சபையில் குருத்துவம் பெற்ற ஜான் ஃபிரான்சிஸ் புர்ட்டே, இளம் துறவியருக்கு இறையியல் கற்பித்தார். பின்னர், கைது செய்யப்பட்டு அங்குள்ள கார்மேல் சபையின் பள்ளியில் சிறை வைக்கப்படும்வரை, பாரிஸ் நகரின் பழம்பெரும் துறவியர் மடத்தின் பாதுகாவலராக இருந்தார்.

1739ம் ஆண்டு, ஸ்விட்சர்லாந்து (Switzerland) நாட்டில் பிறந்த "அபொல்லினரிஸ்" (Appolinaris of Posat) என்பவர் "கபுச்சின்" (Capuchins) சபையில் இணைந்தார். இவர், மறைபோதனை, ஒப்புரவு, அருட்பணியாளர்களுக்கு கற்பித்தல் ஆகியவற்றில் புகழ் பெற்று சிறந்து விளங்கினார். தூரகிழக்கு நாடுகளுக்கு மறைப்பணியாளராக செல்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த இவர், அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டிருந்தார். பாரிஸ் நகரில் "கீழ்த்திசை மொழிகளை" (Oriental languages) கற்றுக்கொண்டிருக்கையில் ஃபிரெஞ்ச் புரட்சி வெடித்தது. கிறிஸ்தவ விசுவாசத்திற்கு மாறாக சத்திய பிரமாணம் எடுத்துக்கொள்ள மறுத்த இவர் உடனடியாக கைது செய்யப்பட்டு கார்மேல் சபையின் பள்ளியில் சிறை வைக்கப்பட்டார்.

"மூன்றாம் நிலை சபையின்" (Third Order Regular) உறுப்பினரான குருவானவர் "செவெரின் கிரௌல்ட்" (Severin Girault) என்பவர், பாரிஸ் நகரில் அருட்சகோதரியர் குழுவொன்றிற்கு குருவாக இருந்தார். இவரும் கைது செய்யப்பட்டு கார்மேல் சபையின் பள்ளியில் அடைக்கப்பட்டார். கார்மேல் பள்ளியில் நடந்த வதையில், முதல் நபராக கொல்லப்பட்டவரும் இவரேயாவார்.

மேற்கண்ட மூவருடன், பல்வேறு ஆயர்கள், மறைப்பணியாளர்கள், மறைமாவட்ட குருக்கள், உள்ளிட்ட 182 பேர் 1792ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி, பாரிஸ் நகரிலுள்ள கார்மேல் சபையின் பள்ளியில், படுகொலை செய்யப்பட்டனர். 1926ம் ஆண்டு, அவர்கள் அருளாலர்களாக அருட்பொழிவு செய்விக்கப்பட்டனர்.

1737ம் ஆண்டு பிறந்த பிரான்சிஸ்கன் மறைப்பணியாளர் "ஜான் பாப்டிஸ்ட் ட்ரிகுரி" (John Baptist Triquerie), மூன்று நகரங்களில் இருந்த "எளிய கிளாரா" (Poor Clare monasteries) துறவற மடங்களில் குருவாகவும், ஒப்புரவாளராகவும், பணியாற்றினார். கிறிஸ்தவ விசுவாசத்திற்கு மாறாக சத்திய பிரமாணம் எடுத்துக்கொள்ள மறுத்த காரணத்திற்காக இவர் கைது செய்யப்பட்டார். இவரும், இவருடன் மறைமாவட்ட குருக்கள் பதின்மூன்று பேரும், 1794ம் ஆண்டு, ஜனவரி மாதம் 21ம் தேதி, "லாவல்" (Laval) நகரில் மறைசாட்சியாக கொல்லப்பட்டனர். அவர்களனைவரும் 1955ம் ஆண்டு, அருளாலர்களாக அருட்பொழிவு செய்விக்கப்பட்டனர்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா