| 
					    நீங்கள் 
					ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்ககூடாதா ?" | 
			 
			
				
					ஜெப நேரத்தில் தூங்கிய சிஷர்களை பார்த்து இயேசு 
					கேட்ட கேள்வி "நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட 
					விழித்திருக்ககூடாதா ?" இதன் மூலம் குறைந்தது 1 மணி நேரம் 
					ஜெபிக்க வேண்டும் என்பதை கர்த்தர் கற்று கொடுத்தார்....!! 
					 
					சிலர் காலையில், இரவில் படுக்கையில் 5 நிமிடம் ஜெபிப்பார்கள். 
					இது போதாது....!!ஜெபம் நமது வாழ்க்கையில் குறைகிறதா கூடுகிறதா...!! 
					நமது வருமானத்தில் தசமபாகம் கொடுத்தால் மட்டும் போதாது. நமது 
					நேரத்திலும் தசமபாகம் கொடுக்க வேண்டும். 2 மணி 40 நிமிடம் கர்த்தருக்கு 
					கொடுக்க வேண்டும்... எடுத்தவுடன் 2 மணி நேரம் ஜெபிப்பேன் என்று 
					முடிவு எடுக்க கூடாது. காலை அரை மணி நேரம், மாலை அரை மணி நேரம் 
					என்று ஆரம்பித்து படிப்படியாக ஜெபத்தை கூட்ட வேண்டும்...!! 
					 
					ஜெபிக்க இயேசு கற்று கொடுத்தார்...!!   (மத்-6:9) 
					 
					ஜெபம் குறைந்து வருகிற காலம் இது. ஜெபம் பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர் 
					களாயிருங்கள். (1 பேதுரு 4:7) 
					 
					கலகம் இல்லா ஜிவியம் பண்ண ஜெபம் அவசியம்....!!  (1 தீமோ 
					2:2) 
					 
					ஜெப ஜிவியம் இருந்தால்தான் இயேசுவின் இரகசிய வருகையில் பங்கு 
					பெற முடியும்...!!  (லூக் 21:36) 
					 
					இந்துக்கள் வீடு கட்டும் போது பூஜை அறை வைத்து வீடு கட்டுகிறார்கள். 
					ஆனால் எத்தனை கிறிஸ்தவ வீட்டில் ஜெபிக்க ஜெப அறை உள்ளது. ஆத்தும 
					நேசரோடு பேச தனி அறை உண்டா...?? 
					 
					ஜெபம் இல்லாவிட்டால் பின்வாங்கி போவோம். விழுந்து விடுவோம்..! 
					 
					ஜெபிக்க ஆரம்பித்தால் போராட்டம் வரும். உடனே ஜெபத்தை வீட்டு விடக்கூடாது. 
					ஜெபம் பிசாசுக்கு பிடிக்காத ஒன்று... 
					 
					"ஜெபிக்க" சில ஆலோசனைகள்...!! 
					 
					1) ஜெபிக்க குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும்...!! 
					(தானியேல்) 
					 
					2) ஜெப குறிப்பு எடுத்து வைத்து கொள்ள 
					வேண்டும்...!!(யாருக்காக, எதற்காக ஜெபிக்க வேண்டும் என்று) 
					 
					3) ஜெபிக்கும் முன்னால் 5 நிமிடம் ஸ்தோத்திரம் செய்து பின்பு 
					ஜெபத்திற்குள் செல்ல வேண்டும்...!! (பிலி 4:6) 
					 
					4) ஆவியினால் நிறைந்து ஜெபிக்க வேண்டும்...!!  (எபேசி 
					6:18) 
					 
					
					"ஜெபம் என்பது"  
					 
					*தன்னுடைய நீதிகளை காட்டும் இடமல்ல,அவருடைய 
					கிருபைக்காய் வேண்டி நிற்கும் இடமே ஜெபம்...!! 
					 
					*தன்னுடைய சத்தமாயிராமல்,அவருடைய 
					சித்தமாயிருப்பதே ஜெபம்...!! 
					 
					*நம்முடைய சத்தத்தை நம்பி அல்ல,அவருடைய 
					ரத்தத்தை நம்பி ஏறெடுப்பதே ஜெபம்...!! 
					 
					* தேவனை நம்முடைய எல்லைக்குள் இழுப்பதல்ல, 
					நாம் அவருடைய எல்லைக்குள் போவதே ஜெபம்...!! 
					 
					* நாம் அவரை கெஞ்சி நிற்பதல்ல, 
					நாம் அவரை கொஞ்சி உயர்த்துவதே ஜெபம்...!! 
					 
					* மற்றவர்களை குற்றப்படுத்தும் 
					இடமல்ல,மற்றவர்களின் குற்றங்களை அவரிடமிருந்து தீர்வுக்கு 
					கொண்டுவருவதே ஜெபம்...!! 
					 
					*நம்முடைய தேவைக்காக அவரிடம் வருவதல்ல,அவரே 
					நமது தேவையாய் இருப்பதே ஜெபம்...!! 
					                            
				 | 
			 
			 
		
						 | 
					 
				 
			   |