Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 குரு பெர்னார்டு லிஸ்டன்பெர்க் Bernhard Lichtenberg
   
நினைவுத் திருநாள் : நவம்பர் 5
 *குரு பெர்னார்டு லிஸ்டன்பெர்க் Bernhard Lichtenberg

*பிறப்பு: 3 டிசம்பர் 1875,  ஓலாவ் Ohlau, போலந்த்

*இறப்பு: 5 நவம்பர் 1943,  ஹோஃப் Hof, ஜெர்மனி

*முத்திபேறுபட்டம்: 1964

இவர் மிக தைரியத்துடன் யூதர்களிடையே கிறிஸ்துவ விசுவாசத்தைப் பற்றி போதித்தார். 1899 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 1928 ஆம் ஆண்டு பெர்லினில் யூதர் கூட்டம் ஒன்றில் கிறிஸ்துவ மறையைப் பற்றி பேசினார். இவர் மற்ற குருக்களுக்கு முன்மாதிரிகையாக திகழ்ந்தார். இவர் ஓர் சிறந்த ஆன்ம குரு என்ற பெயர் பெற்றார். இவர் 1941-1942 ஆம் ஆண்டுவரை கிறிஸ்துவ மறையைப் பற்றி பொது இடத்தில் பேசினார் என்பதற்காக சிறைபிடித்து செல்லப்பட்டார். அப்போது இவர் மீது சாட்டப்பட்ட அனைத்து பழிகளையும் மிகப் பொறுமையுடன் ஏற்றுக்கொண்டார். சாகும் வரை இவர் சிறையில் பல விதங்களில் கொடுமைப்படுத்தப்பட்டார். கசப்பான மற்றும் புளிப்பற்ற காடியை குடிக்க கட்டாயப்படுத்தப்பட்டார். கெட்டுப்போன அழுகிய உணவுப்பொருட்களை உண்ண வற்புறுத்தப்பட்டார். இதனால் உடல் நலம் குன்றி நோய்வாய்ப்பட்டார்.

அப்போது இவர் ஏறக்குறைய 70 ஆம் வயதை அடைந்தார். முதியவரான இவரை அச்சிறையிலிருந்து, டாஹவ்(Dachau) வதை முகாமிற்கு மாற்றினர். அங்கு அவர் மிக மோசமாக நோய்வாய்ப்படவே, மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு சென்ற சில நாட்களில் மருத்துவப் பலனின்றி உயிர் இழந்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா