✠
புனிதர் ஊர்சினஸ் ✠(St.Ursinus
of Bourges) |
|
|
|
நினைவுத் திருநாள் : நவம்பர்
9 |
✠ புனிதர் ஊர்சினஸ் ✠(St.
Ursinus of Bourges)
✠ பௌர்க்ஸ் முதல்
ஆயர் :
(First Bishop of Bourges)
✠பிறப்பு : ----
✠இறப்பு : மூன்றாம் நூற்றாண்டு
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கத்தோலிக்க திருச்சபையினால் புனிதராக வணக்கம் செலுத்தப்படும்
புனிதர் ஊர்சினஸ், பிரான்ஸ் நாட்டிலுள்ள இன்றைய "பௌர்க்ஸ்"
உயர்மறைமாவட்டத்தின் (Archdiocese of Bourges) அந்நாள் முதல்
ஆயராக கருதப்படுகின்றார்.
"தூர் நகர" (Bishop of Tours) ஆயரான "புனிதர் கிரகோரியின்"
(Saint Gregory of Tours) பண்டைய புகழ்பெற்ற கணக்குகள், அவரை
அப்போஸ்தலரான தூய "பிலிப்புவின்" (Philip the Apostle) நண்பரும்,
கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவருமான "நதானியேல்" உடன்
(Nathaniel) தொடர்புபடுத்துகிறது. இவர் கிறிஸ்துவின் இறுதி இரவுணவில்
(Last Supper) பங்குபெற்றதாகவும், அங்கே ஒரு பாடத்தை வாசித்ததாகவும்
கூறுகிறது. புனிதர் "ஸ்தேவானின்" (Saint Stephen) மறைசாட்சியத்தின்போது,
இவர் உடனிருந்ததாகவும் கூறப்படுகிறது. "தூய பேதுரு" (Saint
Peter) இவரை கற்கால "மேற்கு ஐரோப்பாவின்" (Western Europe)
"கௌல்" (Gaul) எனும் பிராந்தியத்துக்கு மறைப்பணியாற்ற அனுப்பினார்
என்றும் கூறப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டின் கண்டறியப்பட்ட ஆயர்கள் மத்தியில் ஊர்சினஸ்
தனியாளாக இல்லை. அவர் வளர்ச்சியடைந்த காலம் அப்போஸ்தலிக்க காலத்திற்கு
திரும்பியது ஆகும். ஆயரவைகளின் முதன்மைக் கூற்றுகளை இங்ஙனம் அதிகரிக்கிறது:
"பெல்ஜியம் இயேசுசபை குருவும்" (Belgian Jesuit) சரித்திர வல்லுனருமான
"ஹிப்போலைட்" (Hippolyte Delehaye), பின்வருமாறு எழுதுகிறார்.
"இரட்சகரை மிக நெருக்கமாக பின்பற்றியவர்களிடையே வாழ்ந்திருந்தவர்கள்
கௌரவம் பெற்றவர்களாவர்; மற்றும், திருச்சபையின் ஆதி பாதுகாவலர்கள்
சிலர், நற்செய்திகளில் அடையாளம் காணப்படுகின்றனர்; மற்றும் சிலர்,
கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்திருந்த காலத்தில் அவருடன்
வாழ்ந்திருந்தனர்." |
|
|