Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠புனிதர் வில்ஹேட் ✠(St. Willehad)
  Limage contient peut-tre : 1 personne, debout  
நினைவுத் திருநாள் : ( நவம்பர் / Nov - 08)
✠புனிதர் வில்ஹேட் ✠(St. Willehad)

மறைப்பணியாளர்/ திருயாத்திரீகர்/ ஆயர்:
(Missionary, Pilgrim and Bishop of Bremen:)

பிறப்பு : கி.பி. 735
நார்த்தும்ப்ரியா, இங்கிலாந்து
(Northumbria, England)

இறப்பு : நவம்பர் 8, 789
வெஸ்ஸெர் மீதுள்ள ப்லெக்ஸன், ஜெர்மன்
(Blexen upon Weser, Germany)

ஏற்றுக்கொள்ளும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

முக்கிய திருத்தலம் :
எக்டெர்னாக், லக்ஸம்பர்க்
(Echternach, Luxembourg)

பாதுகாவல் : சாக்ஸனி (Saxony)

புனிதர் வில்ஹேட், ஒரு கிறிஸ்தவ மறைப்பணியாளரும், திருயாத்திரீகரும், ஆயரும் ஆவார்.

தற்போதைய வடக்கு இங்கிலாந்து (North England) மற்றும் தென்கிழக்கு ஸ்காட்லாந்து ((South East Scotland)) பகுதிகளை உள்ளடக்கிய பிராந்தியமான நார்த்தும்ப்ரியாவில் ((Northumbria)) பிறந்த இவர், யார்க் (York) பேராயரான "எக்பேர்ட்" (Ecgbert) என்பவரின் மேற்பார்வையின் கீழே கல்வி கற்றார். ஆங்கிலேய கல்வியாளரும், இறையியலாளருமான "அல்குயின்" (Alcuin) நண்பரான அவர், கல்வியின் பின்னர் குருத்துவ அருட்பொழிவு பெற்றார். தற்போதைய நெதர்லாந்தின் (Netherlands) பெரும்பகுதியும், ஃபிரீஸ்லாந்து (Friesland) நாட்டின் சிறு பகுதியுமான "ஃபிரீசியா" (Frisia) என்னும் இடத்துக்கு கி.பி. 766ம் ஆண்டு பயணித்த இவர், கி.பி. 754ம் ஆண்டு, "ஃபிரீசியன்" (Frisian) இனத்தவரால் படுகொலை செய்யப்பட்டு, மறைசாட்சியாக மரித்த புனிதர் "போனிஃபேஸ்" (Boniface) என்பவரின் மறைப்பணிகளை தொடரும் நோக்கில், டச்சு வலுவூட்டப்பட்ட "டோக்கும்" (Dokkum) நகரம், மற்றும் நெதர்லாந்தின் மத்திய கிழக்கு பிராந்திய நகரான "ஓவரிஜ்செல்" (Overijssel) நகரங்களில் மதபோதனை செய்தார். கி.பி. 777ம் ஆண்டு, "பேட்ர்பார்னில்" (Paderborn) நடந்த ஒரு மாநாட்டில், சாக்சனி (Saxony) மிஷனரி மண்டலங்களாக (Missionary Zones) பிரிக்கப்பட்டது. வடமேற்கு ஜெர்மனியிலுள்ள (Northwestern Germany) "வெஸ்ஸர்" (Weser) எனும் நதி, மற்றும் மத்திய ஐரோப்பாவின் (Central Europe) முக்கிய பெரும் நதியான "எல்பி" (Elbe) ஆகிய இரண்டின் இடையேயுள்ள "விக்மோடியா" (Wigmodia) பிராந்தியம் வில்ஹேடுக்கு தரப்பட்டது.

வில்ஹேட், கி.பி. 780ம் ஆண்டு முதல், ஃபிராங்க்ஸ் அரசரும் (king of the Franks), தூய ரோமப் பேரரசருமான (Holy Roman Emperor) சார்லிமகன் (Charlemagne) அல்லது முதலாம் சார்லஸ் (Charles I) அவர்களின் ஆணையின் கீழ், "லோவர் வெஸ்ஸர்" (Lower Weser River) ஆற்றின் பிராந்தியங்களில் பிரசங்கித்தார்.

"ஃபிரீசியன்" (Frisian) இனத்தவர் அவரை கொலை செய்ய தேடியபோது, அங்கிருந்து தப்பியோடி மத்திய நெதர்லாந்தின் நகரான "உட்ரெட்ச்" (Utrecht) சென்றார். உள்ளூர் கோயில்கள் சிலவற்றை அழிப்பதற்காக அவர்களை கொள்வதற்காக பாகன் இனத்தவர்கள் தேடியபோது, அவரும் அவரது சக மிஷனரிகளை உயிர்தப்பி ஓடிப்போனார்கள். கடைசியாக, கி.பி. 780ம் ஆண்டு, சாக்ஸன் இனத்தவரிடையே மறைப்பணியாற்றுவதற்காக அவரை பேரரசர் முதலாம் சார்லஸ் அனுப்பினார். அவர் அங்கெ சாக்ஸன் இனத்தவரிடையே இரண்டு வருடங்கள் வரை மறைபோதகம் செய்தார். ஆனால், கி.பி. 782ம் ஆண்டு, சாக்ஸன் இன மக்களுள் சிலர், பேரரசர் முதலாம் சார்லஸின் எதிர்ப்பாளரான "விடுகைண்ட்"(Widukind) என்பவரது தலைமையில் கூடி, பேரரசருக்கு எதிராக கலகம் விளைவித்தனர். இதனால், வில்ஹேட் ஃபிரீசியாவுக்கு (Frisia) ஓடிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர் இந்த வாய்ப்பை ரோம் நகருக்கு பயணிக்க பயன்படுத்திக்கொண்டார். அங்கே, திருத்தந்தை முதலாம் அட்ரியன் (Pope Adrian I) அவர்களிடம் பணியாற்றினார்.

ரோம் நகரிலிருந்து திரும்பியதும், வில்ஹேட், தற்போதைய "லக்ஸம்பர்க்" (Luxembourg) நகரிலுள்ள "எக்டர்னாக்" (Monastery of Echternach) துறவுமட்டத்தில் சில காலம் ஒய்வு பெற்றார். அங்கே, தமது மிஷனரி குழுக்களை ஒன்றிணைக்க இரண்டு ஆண்டுகள் செலவிட்டார்.

பேரரசர் முதலாம் சார்லஸ் சாக்ஸன்களை வெற்றிகொண்டதும், வில்ஹேட் "லோவர் எல்பி" (Lower Elbe) மற்றும் "லோவர் வெஸ்ஸர்" நதிகளின் பிராந்தியங்களில் மறைபோதகம் செய்தார். கி.பி. 787ம் ஆண்டு, வில்ஹேட் ஆயராக அருட்பொழிவு செய்விக்கப்பட்டார். வெஸ்ஸர் நதியின் முகத்துவாரப் பகுதியான சக்ஸனி மற்றும் ஃ பிரீஸ்லாந்து பகுதிகள் (part of Saxony and Friesland) இவரது மறைமாவட்ட பகுதிகளாக இவருக்கு தரப்பட்டன. அவர், "ப்ரெம்மன்" (Bremen) நகரை தமது மறைமாவட்ட தலைமையகமாக தேர்வு செய்தார். கி.பி. 782ம் ஆண்டு, முதன்முதலாக ஆவணங்களில் "ப்ரெம்மன்" (Bremen) மறைமாவட்டமாக குறிக்கப்பட்டது. அங்கேயே ஒரு ஆலயமும் கட்டப்பட்டது. புனித அன்ஸ்கர் (Saint Ansgar) அவர்களால் அதன் அழகுக்காக புகழப்பட்ட இவ்வாலயம், கி.பி. 789ம் ஆண்டு, அர்ச்சிக்கப்பட்டது.

வில்ஹேட், கி.பி. 789ம் ஆண்டு, நவம்பர் மாதம், எட்டாம் தேதி, ஜெர்மன் நாட்டின் வெஸ்ஸெர் மீதுள்ள ப்லெக்ஸன் நகரில் மரித்தார். புதிதாய் கட்டப்பட்டு, தாம் மரிப்பதற்கு சிறிது காலம் முன்னால், தம்மால் அர்ச்சிக்கப்பட்ட ஆலயத்தில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா