Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் விக்டோரினஸ் ✠(St. Victorinus of Pettau)
   
நினைவுத் திருநாள் : (நவம்பர் / Nov - 02)
✠ புனிதர் விக்டோரினஸ் ✠(St. Victorinus of Pettau)

ஆயர்/ மறைசாட்சி :
(Bishop of Poetovio and Martyr)

பிறப்பு : ----
கிரேக்கம்
(Likely in Greece)

இறப்பு : கி.பி. 303 அல்லது 304
போயட்டோவியோ
(Poetovio)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
மரபுவழி திருச்சபை
(Orthodox Church)

நினைவுத் திருநாள் : நவம்பர் 2

புனிதர் விக்டோரினஸ், கி.பி. 270களில் பிரசித்தி பெற்ற ஆதி கிறிஸ்தவ திருச்சபை எழுத்தாளர் ஆவார். இவர், பேரரசன் "டயக்லேஷியன்" (Emperor Diocletian) காலத்தைய கிறிஸ்தவர்களின் துன்புறுத்தல்களில் மறைசாட்சியாக மரித்தார். இவர், ரோமப் பேரரசின் பண்டைய பிராந்தியமான, "பன்னோனியா" (Pannonia) எனுமிடத்திலுள்ள "போயட்டாவியோ" (Poetovio) மறை மாவட்ட ஆயர் ஆவார்.

அனேகமாக, கிரேக்கத்தின் கிழக்கு மற்றும் மேற்கத்திய அரசுகளின் எல்லைப்பகுதியான போயட்டாவியோ'வில் பிறந்ததாகக் கருதப்படும் இவர், இலத்தீன் மொழியை விட கிரேக்க மொழியை சிறப்பாக பேசினார் என்பது புனிதர் ஜெரோம் அவர்களின் எழுத்துக்களில் தெளிவாகிறது.

ஆனால், தமது விவிலிய விளக்கவுரைகளில் இலத்தீன் மொழியை பயன்படுத்திய முதல் இறையியலாளர் விக்டோரினஸ் ஆவார். அவரது படைப்புகள் மதிப்பீடு செய்யப்படுவதற்கு திருத்தந்தை முதலாம் ஜெலாசியஸ் (Pope Gelasius I) முக்கிய காரணம் என்று அறியப்படுகிறது.

புனிதர் ஜெரோம் அவர்கள் தமது "திருச்சபை எழுத்தாளர்கள் பட்டியலில்" விக்டோரினசுக்கு ஒரு கெளரவமான இடத்தை கொடுத்திருக்கிறார்.

விக்டோரினஸ், தமது காலத்தைய ராஜதுரோகம் சம்பந்தமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை தவிர்த்து, பல்வேறு புனித எழுத்தாளர்கள் எழுதிய "ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், ஏசாயா, எசேக்கியேல், ஆபகூக், பிரசங்கி, Canticles என்ற Canticle, புனித மத்தேயு, கடவுள் அருள் வெளிப்பாடு" (Holy Scripture, such as Genesis, Exodus, Leviticus, Isaiah, Ezekiel, Habakkuk, Ecclesiastes, the Canticle of Canticles, St. Matthew, and the Apocalypse) ஆகிய தூய நூல்களின்மேல் வர்ணனை எழுதியுள்ளார். அவரது படைப்புகளும் வர்ணனைகளும் காணாமல் போயுள்ளன.

கடவுள் அருள் வெளிப்பாடு விளக்கவுரை:
திருச்சபையின் அருட்தந்தையருள் விக்டோரினஸ் மிகவும் வெளிப்படையான ஒருவராக விளங்கினார்.

மீண்டும் அடிப்படை கருத்தை அறிந்துகொள்ளவும், 'கடவுள் அருள் வெளிப்பாடு' தடையின்றி மற்றும் தீர்க்கதரிசனப்படி வளரும் ஒன்றாகும் என்றும், ஆனால் பல்வேறு உட்பிரிவுகளாக ஒன்றுக்கொன்று இணையாக இயக்கமுறும் என்றும் முதன்முதலில் எழுதிய திருச்சபையின் அருட்தந்தை விக்டோரினஸ் ஆவார். அத்துடன், இரண்டாம் வருகையின் கரு வெளிப்படுத்தல் முழுவதும் சிந்தனை ஒரு தொடர்ச்சியானது என்றும் கண்டார்.

அவர் திருச்சபையில் உள்ள கிரிஸ்தவர்களின் ஏழு வகுப்புகளைக் குறிக்கும் வகையில், ஏழு சபைகளில் எழுதினார். உலகம் முழுதும் சுவிசேஷம் பரவுதல் தொடர்பான தீர்க்கதரிசனத்தின் ஏழு முத்திரைகள் பற்றி விளக்கினார். இரண்டாம் வருகை மற்றும் உலக முடிவு தொடர்பாக வரும் யுத்தம், பஞ்சம், கொள்ளை நோய்கள் மற்றும் திருச்சபையினுள்ளேயே ஏற்படும் துன்புறுத்தல்கள் பற்றியும் விளக்கினார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா