Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் ரஃபேல் கலினோவ்ஸ்கி ✠ (St. Raphael Kalinowski)
   
நினைவுத் திருநாள் : நவம்பர் 19
✠ புனிதர் ரஃபேல் கலினோவ்ஸ்கி ✠(St. Raphael Kalinowski)

*போலிஷ் தீவிர கார்மேல் துறவி/ மடாலயங்களின் நிறுவனர் :
(Polish Discalced Carmelite Friar and Founder of Carmelite Monasteries)

*பிறப்பு : செப்டம்பர் 1, 1835
வில்னியஸ், ரஷிய பேரரசு (Vilnius, Russian Empire)

*இறப்பு : நவம்பர் 15, 1907 (வயது 72)
வாடோவிஸ், ரஷிய பேரரசு (Wadowice, Russian Empire)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

*அருளாளர் பட்டம் : 1983
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் (Pope John Paul II)

*புனிதர் பட்டம் : நவம்பர் 17, 1991
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் (Pope John Paul II)

புனிதர் ரஃபேல் கலினோவ்ஸ்கி, ரஷியாவிலிருந்து பிரிந்த போலிஷ்-லித்துவானிய ஜனநாயக குடியரசிலுள்ள (Russian partition of Polish-Lithuanian Commonwealth) "விலினியஸ்" (Vilnius) எனும் இடத்தைச் சார்ந்த ஒரு "போலிஷ் தீவிர கார்மேல் துறவி" (Polish Discalced Carmelite friar) ஆவார். ஆதி கத்தோலிக்க கார்மேல் துறவு சபையைச் சார்ந்த இவர்கள், அக்காலத்தில் பாதங்களில் காலணிகள் கூட அணியாது தம்மைத் தாமே துன்புருத்திக்கொண்டு இறை சேவை புரிந்தவர்கள் ஆவார்கள். இவர், "புனிதர் ஜோசப் கலினோவ்ஸ்கியின் ரஃபெல்" (Raphael of St. Joseph Kalinowski) என்றும் அழைக்கப்படுகிரார்.

ஆசிரியர், பொறியாளர், போர்க்கைதி, அரச ஆசிரியர், குரு ஆகிய பன்முகம் கொண்ட புனிதர் ரஃபேல் கலினோவ்ஸ்கி, ரஷிய ஒடுக்குதலின் பின்னர், போலந்து முழுதும் பல கார்மலைட் துறவு மடங்களை நிறுவியவர் ஆவார்.

இவரது இயற்பெயர் "ஜோசெஃப் கலினோவ்ஸ்கி" (Jzef Kalinowski ) ஆகும். இவரது தந்தை "ஆண்ட்ரூ கலினோவ்ஸ்கி" (Andrew Kalinowski) ஒரு "துணை கண்காணிப்பாளர் கணித பேராசிரியர்" (Assistant Superintendent Professor of Mathematics) ஆவார். இவரது தாயார் "ஜோசஃபின் போலோன்ஸ்கா" (Josephine Połońska), இவர் பிறந்த சில மாதங்களிலேயே இவரையும் இவரது மூத்த சகோதரர் "விக்டரையும்" (Victor) தாயற்ற குழந்தைகளாக விட்டு மரித்துப் போனார்.

எட்டு வயதிலிருந்து கல்வி கற்க ஆரம்பித்த ரஃபேல் கலினோவ்ஸ்கி, விவசாய கல்லூரியில் கற்று பட்டம் பெற்றார். அந்நாளில் ரஷியாவில் கல்விக்கும் பணிகளுக்கும் கட்டுப்பாடுகள் இருந்தபடியால் இவர் 1853ல் "ரஷிய பேரரசின் இராணுவத்தில்" (Imperial Russian Army) இணைந்து பொறியியல் கற்றார். பின்னர், அங்கேயே பொறியியல் பேராசிரியராகவும் பணி புரிந்தார். பின்னர், ஒரு பொறியாளராக ரெயில்வேயை வடிவமைக்க உதவினார். 1862ல் ரஷிய ராணுவம் அவருக்கு கேப்டனாக பதவியுயர்வு தந்தது. இருப்பினும் அவருக்கு போலந்தின் மீதிருந்த பரிவும் அன்பும் அப்படியே இருந்தது. போலந்தின் "வில்னியஸ்" பகுதியில் போலிஷ் எழுச்சியின் "ஜனவரி கிளர்ச்சிக்கு" உதவும் பொருட்டு, 1863ம் ஆண்டு, இம்பீரியல் ரஷிய ராணுவத்திலிருந்து அவர் வெளிவந்தார்.

எவரொருவருக்கும் மரண தண்டனை கொடுப்பதில்லை என்றும் எந்தவொரு போர்க்கைதியையும் தூக்கிலிடுவதில்லை என்றும் தீர்மானித்திருந்தார். 1863ம் ஆண்டு, போலிஷ் மக்கள் ரஷியாவுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தபோது, ரஃபெல் அவர்களுடன் இணைந்தார்.

ஆனால் விரைவிலேயே 24 மார்ச் 1864ல் ரஷிய ராணுவத்தால் அவர் போர்க்கைதியாக சிறை பிடிக்கப்பட்டார். தப்பிப் பிழைத்த ஒருசிலரும் அடிமைத் தொழிலாளர்களாக "சைபீரியா" (Siberia) பிராந்தியத்துக்கு அனுப்பப்பட்டனர். ரஃபேல் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டார். அவரது விசுவாசம் காரணமாக, அவர் சிறைக் கைதிகளின் ஆன்மீக தலைவரானார்.

1864ம் ஆண்டு, மார்ச் மாதம், 24ம் தேதி, ரஷிய அதிகாரிகள் அவரை கைது செய்தனர். ஜூன் மாதம் அவருக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டது. ரஃபெலின் குடும்பத்தினரின் தலையீட்டால் ரஷிய ராணுவம் யோசித்தது. அவர் கொல்லப்பட்டால் அவர் அரசியல் தியாகியாக மதிக்கப்படலாம் என்ற பயம் அவர்களிடையே எழுந்தது. அவருடைய மரண தண்டனையை பத்து வருட சிறைத் தண்டனையாக குறைத்தனர். சைபீரிய தொழிலாளர் முகாமுக்கு அனுப்ப தீர்மானித்தனர். அவரும் இன்னும் பல போர்க்கைதிகளும் "சைபீரியாவிலுள்ள" (Siberia) அடிமை கூலித் தொழிலாளர்களாக வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டனர். உப்புச் சுரங்கங்களினூடே ஒன்பது மாதங்களாக பயணித்த அவர்களில் அநேகர் வழியிலேயே மரித்துப் போயினர். ஆனால், தமது இறை விசுவாசத்தின் காரணமாக உயிர் பிழைத்த ரஃபேல், அங்குள்ள சிறைக்கைதிகளின் மத தலைவராக உருவெடுத்தார். பத்து ஆண்டு சிறைவாசத்தின் பிறகே அவர் விடுவிக்கப்பட்டார்.

1872ம் ஆண்டு, ரஷிய புவியியல் அமைப்பின் சைபீரிய உட்பிரிவுக்காக ரஃபெல் வளிமண்டலவியல் ஆராய்ச்சி செய்தார். 1873ம் ஆண்டு அவரை விடுதலை செய்த அதிகாரவர்க்கம், லித்துவானியாவிலிருந்து (Lithuania) நாடு கடத்தியது. அதன்பின் அவர் ஃபிரான்ஸின் பாரிஸ் நகருக்கு சென்றார்.

1874ம் ஆண்டு, போலந்து நாட்டின் தலைநகரான "வார்சாவ்" (Warsaw) திரும்பிய ரஃபேல், அங்கே அரசவை ஆசிரியராக பணியமர்த்தப்பட்டார். பதினாறே வயதான இளவரசர் "ஆகஸ்ட் க்ஸர்டொரிஸ்கி" (Prince August Czartoryski) என்பவருக்கு கல்வி கற்பிக்கும் பணியாற்றினார். சிறிது காலத்தில், இளவரசர் காசநோயால் (Tuberculosis) பாதிக்கப்பட்டார். இளைஞனான இளவரசரின் மருத்துவத்திற்காக "ஃபிரான்ஸ்" (France), "ஸ்விட்சர்லாந்து" (Switzerland), "இத்தாலி" (Italy) மற்றும் "போலந்து" (Poland) ஆகிய நாடுகளுக்கு இளவரசருடன் ரஃபேல் உடன் சென்றார். ரஃபேல் மீது இளவரசருக்கு பெரும் அபிமானம் ஏற்பட்டிருந்தது. (பின்னாளில், இளவரசர் ஆகஸ்ட் துறவறம் பெற்று, குருத்துவ அருட்பொழிவு பெற்று ஆன்மீக பணியாற்றினார். "சலேசிய டோன் போஸ்கோ" (Salesians of Don Bosco) சபையைச் சேர்ந்த இவருக்கு, திருத்தந்தை "இரண்டாம் ஜான் பவுல்" (Pope John Paul II) 2004ம் ஆண்டு, முக்திபெறு பட்டம் வழங்கினார்.)

1877ம் ஆண்டு, கலினோவ்ஸ்கி "லின்ஸ்" (Linz) நகரிலுள்ள கார்மேல் துறவியர் மடத்தில் இணைந்தார். அங்கே அவருக்கு "புனிதர் ஜோசஃபின் சகோதரர் ரஃபெல்" (Brother Raphael of St. Joseph) என்ற ஆன்மீக பெயர் சூட்டப்பட்டது.

1882ம் ஆண்டு, ஆயர் "ஆல்பின் டுனாஜேவ்ஸ்கி" (Bishop Albin Dunajewski) ரஃபேலுக்கு குருத்துவ அருட்பொழிவு செய்வித்தார். 1883ல் ரஃபெல் "ஸ்செர்னா" (Czerna) நகரின் துறவியர் மடத்தின் தலைவர் ஆனார். "போலந்து" மற்றும் "உக்ரைனில்" (Poland and Ukraine) பல்வேறு கத்தோலிக்க நிறுவனங்களை நிறுவினார். 1884 மற்றும் 1888ல் கார்மேல் அருட்சகோதரியருக்கான துறவு மடங்களை நிறுவினார். 1892 முதல் 1907 வரையான காலகட்டத்தில், பதினேழாம் நூற்றாண்டின் கார்மேல் சபை துறவியான "அன்னை தெரெசா மார்ச்சொக்கா"வின் (Mother Theresa Marchocka) முக்திபேறு பட்டத்துக்கான வாழ்க்கை வரலாறு சம்பந்தமான ஆவன தயாரிப்பில் ஈடுபட்டிருந்தார்.

காசநோயால் (Tuberculosis) கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த ரஃபேல் கலினோவ்ஸ்கி 1907ம் ஆண்டு, "வடோவிக்" (Wadowice) நகரில் மரணமடைந்தார்.

(பின்னாளில், இவருக்கு 1983ம் ஆண்டு முக்திபேறு பட்டமும், 1991ம் ஆண்டு புனிதர் பட்டமும் வழங்கிய (கரோல் வோஜ்டிலா - Karol Wojtyła), திருத்தந்தை "இரண்டாம் ஜான் பால்" (Pope John Paul II) பதினான்கு வருடங்களின் பின்னர் அதே நகரில் பிறந்தார்.)

புனிதர் ரஃபேல் கலினோவ்ஸ்கி, "ரோமன் கத்தோலிக்கம்" (Roman Catholic) மற்றும் "ரஷிய மரபுவழி" (Russian Orthodox) ஆகிய திருச்சபைகளின் பிரபலமான ஆன்மீக வழிகாட்டியாக இருந்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா