Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் மெனாஸ் ✠(St. Menas)
   
நினைவுத் திருநாள் : (நவம்பர் / Nov - 11)
✠ புனிதர் மெனாஸ் ✠(St. Menas)

மறைசாட்சி - அற்புதங்கள் செய்பவர் :
(Martyr & Wonder-worker)

பிறப்பு : கி.பி. 285
நைசோஸ், எகிப்து
(Niceous, Egypt)

இறப்பு : கி.பி. 309
ஃ பிர்ஜியா, அனடோலியா (தற்போதைய துருக்கி)
(Phrygia, Anatolia (Modern-day Turkey)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodoxy)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

முக்கிய திருத்தலம் :
தூய மினா மடாலயம், தூய மெனாஸ் ஆலயம் (கெய்ரோ)
(Monastery of Saint Mina, Church of Saint Menas (Cairo)

நினைவுத் திருநாள் : நவம்பர் 11

பாதுகாவல் :
பொய்க்குற்றம் சாட்டப்பட்ட மக்கள் (Falsely accused people)
பயணம் செய்யும் வியாபாரிகள் (Traveling merchants)
ஹெராக்லியன் (Heraklion)

புனிதர் மினாஸ் (Saint Minas), மினா (Mina), மெனாஸ் (Menas), மற்றும் மெனா (Mena) என பல பெயர்களால் அறியப்படும் இப்புனிதர், தமது காலத்திலும், தமது மரணத்தின் பிறகும் அற்புதங்கள் பல புரிந்தவரும், தமது கிறிஸ்தவ விசுவாசத்திற்காக மறைசாட்சியாக மரித்தவரும் ஆவார். கீழ் திசையிலும் மேற்கிலும், மிகவும் அறியப்பட்ட எகிப்திய புனிதர்களுள் ஒருவர் ஆவார். அவரது பரிந்துரை மற்றும் பிரார்த்தனை காரணமாக பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. ரோம இராணுவத்தின் எகிப்திய சிப்பாயாக இருந்த இவர், தமது கிறிஸ்தவ விசுவாசத்தை மறுபரிசீலனை செய்ய மறுத்துவிட்ட காரணத்தால், மறைசாட்சியாக படுகொலை செய்யப்பட்டார்.

அவருடைய பெயரின் தோற்றம்:
மினா அவரது அசல் பெயர் ஆகும். கதையின்படி, அவரது தாயார் அவரை "மெனா" என்று அழைப்பாராம். ஒரு அசரீரி, ஆமென் (கிரேக்க மொழியில் - Mēna) என்று கேட்டதனால், அவர் அங்ஙனம் அழைப்பாராம்.

வாழ்க்கையும் மறைசாட்சியமும் :
"கோயின் கிரேக்கம்" (Koine Greek), "காப்டிக்" (Coptic), "பழைய நுபியான்"(Old Nubian), "கீஸ்" (Ge'ez), "இலத்தீன்"(Latin), "சிரியாக்" (Syriac), மற்றும் "ஆர்மேனியன்" (Armenian) ஆகிய பல்வேறு மொழிகளில் பல்வேறுதரப்பட்ட கதைகள் இவரைப்பற்றி எழுதப்பட்டுள்ளன.

மெனாஸ், கி.பி. 285ம் ஆண்டு, எகிப்து நாட்டின் பண்டைய நகரான "மெம்ஃபிஸ்" (Memphis) அருகாமையிலுள்ள "நைசோஸ்" (Niceous) எனுமிடத்தில் பிறந்தார். அவரது பெற்றோர், சன்மார்க்க கிறிஸ்தவர்கள் ஆனாலும், நீண்ட காலமாக எந்த குழந்தைகளும் இல்லாதிருந்தனர். அவரது தந்தையின் பெயர் "யுடோக்ஸியஸ்" (Eudoxios) மற்றும் அவருடைய தாயின் பெயர் "யூஃபேமியா" (Euphemia) ஆகும். கடவுளின் அன்னை தூய மரியாளின் திருவிழா நாளன்று, "யூஃபேமியா" (Euphemia), அன்னையின் திருச்சொரூபத்தின் முன்னே கண்ணீர் மல்க குழந்தை வரம் வேண்டி செபித்தார். அன்னையின் திருச்சொரூபத்திலிருந்து "ஆமென்" என்ற சொல் கேட்ட "யூஃபேமியா", சில மாதங்களின் பின்னர் ஒரு ஆண் மகவை ஈன்றார். அதற்கு மெனாஸ் என்று பெயரிட்டார்.

எகிப்தின் நிர்வாகப் பகுதிகளுள் ஒன்றின் ஆளுநராக பதவி வகித்த "யுடோக்ஸியஸ்" (Eudoxios) மெனாஸ் பதினான்கு வயதாகையில் மரித்துப் போனார். பதினைந்து வயது ஆனா மெனாஸ், ரோம இராணுவத்தில் சேர்ந்தார். அவரது தந்தையின் புகழ் காரணமாக அவருக்கு ஒரு உயர் பதவிக்கு வழங்கப்பட்டது. பெரும்பாலான ஆதாரங்கள் அவர் "ப்ரிஜியாவில்" (Phrygia) உள்ள "கோட்யாஸில்" (Cotyaeus) பணியாற்றியதாகக் கூறுகின்றன என்றாலும், அவருடைய நியமனம் அல்ஜீரியாவில் (Algeria) இருந்தது என்றும் சிலர் கூறுகின்றனர். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இராணுவத்திலிருந்து வெளிவந்த அவர் தனது முழு வாழ்க்கையையும் கிறிஸ்துவிற்கு அர்ப்பணிக்கவும், வித்தியாசமான வாழ்க்கை வாழவும் விரும்பி, பாலைவனம் நோக்கி சென்றார்.

ஐந்து வருடங்கள் துறவியாக வாழ்ந்ததன் பின்னர், தேவதூதர்கள் மறைசாட்சிகளுக்கு போற்றத்தக்க தெய்வீக கிரீடங்களை சூட்டுவதை வெளிப்படுத்தும் திருக்காட்சிகளை கண்ட மெனாஸ், தாமும் அத்தகைய ஒரு மறைசாட்சியாக தெய்வீக கிரீடம் சூட்டப்படும் நாளுக்காக ஏங்கத்தொடங்கினார். இதுபற்றிய சிந்தனைகளிலேயே வாழ்ந்திருந்த அவருக்கு, ஒருநாள் ஒரு அசரீரி கேட்டது. அது, "மேனாஸ், குழந்தைப் பருவம் முதலே பக்தியான வாழ்க்கை வாழ அழைக்கப்பட்ட நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்; மூன்று நித்திய கிரீடங்கள் உனக்கு வழங்கப்படும்; ஓன்று உமது பிரம்மச்சரியத்திற்காகவும், இரண்டாமவது, உமது துறவறத்துக்காகவும், மூன்றாவது உமது மறைசாட்சியத்துக்காகவும் வழங்கப்படும். பின்னர், உடனடியாக ஆட்சியாளரிடம் விரைந்த மெனாஸ், அவரிடம் தமது கிறிஸ்தவ விசுவாசத்தை அறிவித்தார்.

மெனஸை தூக்கிலிட்ட சிப்பாய்கள், மூன்று நாட்களாக அவரது உடலை தீயிட்டுக் கொளுத்தினர்; ஆனால் அவரது உடலில் சிறிதளவும் காயங்கள் ஏற்படவில்லை. மெனஸின் சகோதரி, சிப்பாய்களுக்கு லஞ்சம் கொடுத்து விட்டு உடலை அங்கிருந்து எடுத்துச் செல்ல முடிந்தது. அலெக்ஸாண்ட்ரியாவுக்குச் செல்லும் ஒரு கப்பலில் புறப்பட்ட அவர், அங்குள்ள ஒரு தேவாலயத்தில் துறவியின் உடலை வைத்தார்.

கிறிஸ்தவ துன்புறுத்தல்கள் முடிவுக்கு வந்ததன் பின்னர், திருத்தந்தை அதனாசியஸ் (Pope Athanasius of Alexandria) அவர்களுக்கு திருக்காட்சியளித்த தேவதூதர் ஒருவர், மெனாசின் உடலை ஒரு ஒட்டகத்தின் மீது ஏற்றி, லிபிய பாலைவனத்தை (Libyan Desert) நோக்கி ஒட்டிச் செல்ல கட்டளையிட்டார். அதன்படியே மெனாசின் உடலை ஒட்டகமொன்றின் மீது ஏற்றி, லிபிய பாலைவனம் நோக்கி சென்றபோது, அவ்வொட்டகம் அலெக்ஸாண்ட்ரியாவின் அருகாமையில், "மரியவுட்" (Lake Mariout) ஏரியினருகேயுள்ள ஒரு கிணற்றினருகில் நின்றுவிட்டது. அங்கிருந்து கிளம்ப மறுத்துவிட்டது. இச்சம்பவத்தை கடவுளின் ஒரு அடையாளமாக எடுத்துக்கொண்ட கிறிஸ்தவ மக்கள், மெனஸின் உடலை அங்கேயே அடக்கம் செய்தனர்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா