✠ புனித லியோனார்ட் ✠ St. Leonard of Noblac |
|
|
|
நினைவுத் திருநாள் : நவம்பர்
06 |
✠ புனிதர்
லியோனார்ட் ✠(St. Leonard of Noblac)
✠நோப்லேக் துறவுமட மடாதிபதி :
(Abbot of Noblac)
✠பிறப்பு : 5ம் நூற்றாண்டு
ஃபிரான்ஸ் மே 19
✠இறப்பு : கி. பி. 559
லிமோகெஸ் ஃபிரான்ஸ்
(Limoges, France)
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஆங்கிலிக்கன் திருச்சபை
(Anglican Church)
✠பாதுகாவல் :
அரசியல் கைதிகள், சிறையிலடைக்கப்பட்ட மக்கள், யுத்த கைதிகள்,
சிறைப்பிடிக்கப்பட்டவர்கள், உழைக்கும் பெண்கள், அதேபோல் உழைக்கும்
குதிரைகள்
✠நினைவுத் திருநாள் : நவம்பர் 6
புனிதர் லியோனார்ட், ஒரு ஃபிராங்கிஷ் (Frankish) புனிதரும்,
ஃபிரான்ஸ் நாட்டிலுள்ள நோப்லாக் (Noblac) எனும் இடத்திற்கும்,
அங்கேயுள்ள துறவு மடத்திற்கும் நெருக்கமானவராவார்.
பாரம்பரிய சுயசரிதம்:
இவர், Merovingian வம்சத்தை தோற்றுவித்த (Founder of the
Merovingian dynasty) அரசன் 'முதலாம் க்லோவிஸ்' (Clovis I) என்பவரது
அரண்மனையில் உயர்ந்த பதவியில் இருந்தார். இவரும் அரசன் 'முதலாம்
க்லோவிஸும்' "ரெய்ம்ஸ்" ஆயரான "புனித ரெமிஜியுஸ்" (Saint
Remigius, Bishop of Reims) அவர்களால் மனந்திருப்பினர். கி.பி.
496ல் கிறிஸ்துமஸ் தினத்தன்று இவர்களிருவரும் கிறிஸ்தவர்களாக
மதம் மாறினர். பின்னர், இவர் அரசன் முதலாம் க்லோவிஸிடமிருந்து,
தண்டனை பெற்று சிறையிலிருந்த பொருத்தமான சிறைக் கைதிகளை விடுதலை
செய்யும் அதிகாரத்தை கேட்டு வாங்கினார். அரசன் அளித்த பிரபுக்களுக்கான
சிறப்புச் சலுகைகளை தாழ்மையுடன் மறுத்தார். இவரது புனிதத் தன்மையை
அறிந்த அரசர், இவரது வேண்டுகோளுக்கு இணங்கி, சிறைப்பட்டோரை
விடுவித்தார்.
இவ்வித சலுகை, அக்காலத்தில் தூயவரான ஆயர்களுக்கும் இவரைப் போன்றவர்களுக்குமே
அளிக்கப்பட்டிருந்தது. கைதிகள் தங்கள் பாவங்களின் தோஷத்தை கண்டு
உணரச் செய்தார். அவர்கள் தங்கள் பாவங்களுக்காக துயரப்பட்டு,
தவம் செய்து, வாழ்வை திருத்தியமைக்க உதவி செய்தார்.
பின் இவர் "ரெய்ம்ஸ்" ஆயர் "புனித ரெமிஜியுஸின்" சீடரானார்.
சிறிது காலம் வேதம் போதித்தார். இவர் அரண்மனைக்குத் திரும்பி
வரவேண்டுமென்று அரசர் நச்சரித்துக் கொண்டிருந்தமையால், "ஒர்லியான்"
என்ற இடத்திற்கருகே இருந்த "மைஸி" (Micy near Orlans) எனும்
இடத்திலிருந்த ஒரு மடத்திற்குப் போய் அங்கு துறவறம்
பெற்றுக்கொண்டார். பெரியவர்களது அனுமதியுடன் ஊர் ஊராய்ப்
போய்ப் பிரசங்கித்து, அநேகரை மனந்திருப்பினார்.
பின் ஒரு சிற்றாலயத்தை அமைத்து, அங்கு வாழ்ந்து வந்தார். இலைகளும்
கனிகளுமே இவரது உணவு. தனிமையில் மறைவான வாழ்வு நடத்தினாலும்,
அருகில் இருந்த கோயிலுக்குச் சென்று மறையுரைகள் நிகழ்த்துவார்.
போர்க்கைதிகள் மீதும், சிறைப்பட்டோர் மீதும் அதிக இரக்கம்
காண்பித்தார். தம்மால் இயன்ற அளவு ஆன்ம சரீர உதவிகளை அவர்களுக்குச்
செய்தார்.
சுமார் கி. பி. 559ல் மரித்த இவரது நினைவுத் திருநாள் நவம்பர்
ஆறாம் நாள் கொண்டாடப்படுகின்றது. |
|
|