✠ புனிதர் மகா கெர்ட்ரூட் ✠ (St.
Gertrude the Great) |
|
|
|
நினைவுத் திருநாள் : நவம்பர்
16 |
St. Gertrude the
Great
* கன்னியர்/
ஆத்ம பலம் கொண்டவர்/ இறையியலாளர் :
(Virgin, Mystic, and Theologian)
*பிறப்பு : ஜனவரி 6, 1256
எய்ஸ்ல்பென், துரிங்கியா, தூய ரோமப் பேரரசு (Eisleben,
Thuringia, Holy Roman Empire)
*இறப்பு : கி.பி. 1302
ஹெல்ஃப்டா, சேக்சொனி, தூய ரோமப் பேரரசு (Helfta, Saxony, Holy
Roman Empire)
*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)
*புனிதர் பட்டம் : 1677
திருத்தந்தை பன்னிரெண்டாம் கிளமென்ட் (Pope Clement XII)
*பாதுகாவல் : மேற்கிந்திய தீவுகள் (West Indies)
"புனிதர் மகா கெர்ட்ரூட்" (St. Gertrude the Great), ஒரு
"ஜெர்மன் பெனடிக்டைன்" (German Benedictine) சபையின் அருட்கன்னியும்,
மறைபொருளாளரும், இறையியலாளருமாவார்.
இவரது ஆரம்ப கால வாழ்க்கையைப் பற்றி சிறிதளவே அறியப்படுகிறது.
1256ம் ஆண்டு, ஜனவரி மாதம், ஆறாம் நாள், தூய ரோமப் பேரரசின்
கீழுள்ள "துரிங்கியாவின்" (Thuringia) "எய்ஸ்ல்பென்"
(Eisleben) எனுமிடத்தில் பிறந்த இவர், தமது நான்கு வயதில் "தூய
மரியாளின் துறவு மடத்தின்" (Monastery of St. Mary) பள்ளியில்
சேர்ந்து கல்வி கற்றார். இத்துறவு மேடம், "பெனடிக்டைன்" அல்லது
"சிஸ்டேர்ஸியன்" (Benedictine or Cistercian) என்று அறியப்படுகிறது.
இவர் சிறு வயதிலேயே, தமது பக்தியுள்ள பெற்றோரால் ஆலயத்திற்கு
நேர்ந்தளிக்கப்பட்டார் என்று யூகிக்கப்படுகிறது. இவரது குழந்தைப்
பருவத்திலேயே இவரது பெற்றோர் மரித்துவிட்டதாயும், இவர் ஒரு அனாதையாகவே
மடாலய பள்ளியில் சேர்ந்ததையும் அறிய முடிகிறது.
1266ம் ஆண்டு, தமது பத்து வயதில் துறவற சமூகத்தில் இணைந்தார்.
அவர் பல்வேறு துறைகளில் முழுமையான கல்வி பெற்றார் என்பது அவரது
எழுத்துக்களிலேயே தெளிவாகிறது.
1281ம் ஆண்டு, தமது இருபத்தைந்தாம் வயதில், முதன்முதலாக தொடர்
திருக்காட்சிகளை கண்டார். அவரது வாழ்நாள் முழுதும் தொடர்ந்த இவை,
அவரது வாழ்வின் போக்கையும் மாற்றியது. அவருடைய முன்னுரிமைகள்
மதச்சார்பற்ற அறிவிலிருந்து விலகி, வேதாகமம் மற்றும் இறையியல்
பற்றிய ஆய்வுக்கு மாறின. தனிப்பட்ட ஜெபம் மற்றும் தியானத்திற்கு
தம்மை தீவிரமாக அர்ப்பணித்துக்கொண்ட கெர்ட்ரூட், தமது துறவற சகோதரியரின்
நன்மைகளுக்காக, ஆன்மீக உபதேசங்கள் எழுத ஆரம்பித்தார். பதின்மூன்றாம்
நூற்றாண்டின் பெரும் உள்ளுணர்வுவாதிகளில் ஒருவரானார்.
1302ம் ஆண்டு, தூய ரோமப் பேரரசிலுள்ள, "எய்ஸ்ல்பென்"
(Eisleben), "சேக்சொனி" (Saxony) அருகிலுள்ள "ஹெல்ஃப்டா" (Helfta)
எனுமிடத்தில் கெர்ட்ரூட் மரித்தார். இவர் மரித்த சரியான தேதி
பற்றிய தகவல்கள் இல்லை. |
|
|