✠ புனிதர் ஃபிரான்சிஸ் அந்தோணி ஃபசானி
✠ (St.Francis Anthony Fasani) |
|
|
|
நினைவுத் திருநாள் : நவம்பர்
27 |
✠ புனிதர்
ஃபிரான்சிஸ் அந்தோணி ஃபசானி ✠(St. Francis Anthony Fasani)
*
இத்தாலிய துறவி : (Italian Friar)
*பிறப்பு : ஆகஸ்ட் 6, 1681
லுசேரா, ஃபோக்கியா, நேபிள்ஸ் அரசு (Lucera, Foggia, Kingdom of
Naples)
*இறப்பு : நவம்பர் 29, 1742
லுசேரா, ஃபோக்கியா, நேபிள்ஸ் அரசு (Lucera, Foggia, Kingdom of
Naples)
*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)
*முக்திபேறு பட்டம் : ஏப்ரல் 15, 1951
திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ் (Pope Pius XII)
*புனிதர் பட்டம் : ஏப்ரல் 13, 1986
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் (Pope John Paul II)
*பாதுகாவல் : லுசேரா (Lucera)
"கியோவன்னியெல்லோ ஃபசானி" (Giovanniello Fasani) எனும் இயற்பெயர்
கொண்ட புனிதர் ஃபிரான்சிஸ் அந்தோணி ஃபசானி, (Order of
Conventual Friars Minor) என்றழைக்கப்படும், "பள்ளிகளைச்
சார்ந்த இளநிலை ஃபிரான்சிஸ்கன் சபையைச்" சேர்ந்த ஒரு இத்தாலிய
துறவியாவார்.
1681ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 6ம் தேதி, அன்றைய "நேப்பில்ஸ்"
அரசின் (Kingdom of Naples) "ஃபோக்கியா" (Foggia) பிராந்தியத்தின்
"லுசேரா" (Lucera) எனுமிடத்தில் பிறந்த இவரது தந்தையின் பெயர்,
"கியுசெப் ஃபசானி" (Giuseppe Fasani) ஆகும். தாயாரின் பெயர்,
"இசபெல்லா டெல்லா மொனாக்கா" (Isabella della Monaca) ஆகும்.
தமது ஊரிலேயே உள்ள (Conventual friary) துறவற மடத்தில் ஆரம்ப
கல்வி கற்க தொடங்கிய இவர், அங்கேயே சபையில் இணைந்து, புனிதர்கள்
"ஃபிரான்சிஸ்" மற்றும் "அந்தோனியார்" (Saints Francis and
Anthony) ஆகியோரின் பெயர்களை தமது ஆன்மீக பெயராக ஏற்றுக்கொண்டார்.
தமது சத்தியப்பிரமான உறுதிப்பாடுகளை 1696ம் ஆண்டு ஏற்றுக்கொண்டார்.
தென் இத்தாலியின் "மொலிஸ்" (Molise region) பிராந்தியத்திலுள்ள
"அக்னோன்" (Agnone) எனுமிடத்தில் தமது இறையியல் கல்வியை தொடங்கிய
ஃபசானி, இத்தாலியின் அடிப்படை நிர்வாக நகரான "அசிசியில்"
(Assisi), புனிதர் ஃபிரான்சிசின் கல்லறைக்கு அருகிலுள்ள "பொது
ஆய்வு மையத்தில்" (General Study Centre) தொடர்ந்தார். 1705ம்
ஆண்டு, அசிசி நகரிலேயே குருத்துவ அருட்பொழிவு பெற்ற இவர், இன்னும்
இரண்டு ஆண்டுகள் அங்கேயே தங்கியிருந்து 1707ம் ஆண்டு தமது இறையியல்
கல்வியை பூர்த்தி செய்தார்.
1707ம் ஆண்டுமுதல், 1742ம் ஆண்டு அவர் மரிக்கும்வரை தமது சொந்த
ஊரான லுசேராவிலேயே (Lucera) கழித்த ஃபசானி, அந்த நகரத்தின் உண்மையுள்ளவர்களிடம்
தன்னைப் பிரியப்படுத்தினார். 1709ம் ஆண்டு, "இறையியலில் முனைவர்
பட்டம்" (Doctor of Theology) வென்றார். "அறிவார்ந்த தத்துவ" (Scholastic
Philosophy) கல்வியின் மதிப்புமிக்க ஆசிரியராக, ஃபிரான்சிஸ்கன்
சபையின் பல்வேறு கடமைகளை நிறைவேற்றினார். புதுமுக பயிற்சி துறவியரின்
தலைவர் (Master of Novices) பதவி மற்றும் பயிற்சி நிறைவு செய்த
இளம் துறவியரின் தலைமைப் (Master of Novices) பொறுப்பையும்
(Junior Professed Friars) ஏற்றிருந்தார்.
ஃபசானி, ஆழ்ந்த செபம் மற்றும் ஆன்ம பலம் கொண்டவராயிருந்தார்.
வேண்டுவோருக்கு நல்ல ஒப்புரவாளராகவும் போதகராகவும் விளங்கினார்.
பங்குகளில் அவரது தொடர்ந்த மறை பிரசங்கங்கள் பிரபலமாக இருந்தன.
தமது பங்கிலும், பிற பங்குகளிலும் தியானங்களையும் தவ முயற்சிகளையும்
நவநாள் செபங்களையும் முன்னின்று நடத்தினார். அவர் செபிக்கும்
வேளைகளில், உயரத்தில், அல்லது உயர வானில், அல்லது மாயாஜால சக்தியால்,
குறிப்பாக காற்று மூலம் மிதப்பது போல உணர்வதாக பரவலாக மக்கள்
கூறுவதுண்டு. அதேவேளை, அவர் ஏழைகளின் இணைபிரியாத நண்பனாய் இருந்தார்.
தேவைப்படுவோருக்கு நிதி உதவிகளும் செய்துவந்தார்.
லுசேரா (Lucera) நகரில் மரித்த ஃபசானி, அங்குள்ள பங்கு தேவாலயத்தில்
அடக்கம் செய்யப்பட்டார். அவர் மரித்த செய்தியறிந்த அந்நகரத்து
சிறுவர்கள், "புனிதர் இறந்துவிட்டார்; புனிதர் இறந்துவிட்டார்"
எனக் கூவியபடி நகர தெருக்களில் ஓடினார்கள். |
|
|