✠
புனிதர்கள் ஃபகுண்டஸ் மற்றும் பிரிமிடிவஸ் ✠(Saints Facundus and Primitivus) |
|
|
|
நினைவுத் திருநாள் : நவம்பர்
27 |
✠ புனிதர்கள் ஃபகுண்டஸ்
மற்றும் பிரிமிடிவஸ் ✠
(Saints Facundus and Primitivus)
* மறைசாட்சியர் :
(Martyrs)
*பிறப்பு : -
லியோன், ஸ்பெயின்
(Leon, Spain)
*இறப்பு : கி. பி. 300
தற்போதைய "சஹாகுன்" என்ற இடத்திற்கு அருகில், ஸ்பெயின்
(Near present-day Sahagun, Spain)
*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கீழ் மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
புனிதர்கள் ஃபகுண்டஸ் மற்றும் பிரிமிடிவஸ் ஆகிய இருவரும்
கிறிஸ்தவ மறைசாட்சிகளாகவும் புனிதர்களாகவும் அருட்பொழிவு செய்யப்பட்டவர்களாவர்.
பாரம்பரியப்படி, ஸ்பெயின் நாட்டின் லியோன் (Leon) பகுதியின்
கிறிஸ்தவ பூர்வீக குடிகளாகிய இவர்கள், "சியா" (River Cea) நதிக்கரையில்
சித்திரவதை செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.
அவர்களது தியாகத்தின் தகவல்களின் அடிப்படையில், அவர்களது தலை
துண்டிக்கப்பட்ட வேளையில், அவர்கள் இருவரதும் கழுத்துப்
பகுதியில் இருந்து பாலும் இரத்தமும் பீரிட்டதாக கூறப்படுகிறது.
"சஹாகுன்" (Sahagun) நகரைச் சுற்றியுள்ள "பெனடிக்டைன் துறவு
மடம்" (Benedictine monastery) இவ்விரு புனிதர்களின் பெயரில்
அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. |
|
|