புனித எலிசபெத் ✠ (St. Elizabeth) |
|
|
|
நினைவுத் திருநாள் : நவம்பர்
05 |
✠ புனிதர் எலிசபெத்
✠(St. Elizabeth)
*நன்னெறியாளர் : (Righteous)
*பிறப்பு : கி. மு. முதலாம் நூற்றாண்டு எபிரோன் (ஜோஷுவா 21:11)
*இறப்பு : கி. மு. முதலாம் நூற்றாண்டு (அநேகமாக எபிரோன்)
*ஏற்கும் சமயம் :ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic
Church)
*கீழ் ஆர்த்தோடாக்ஸ் திருச்சபை (Eastern Orthodox Church)
*ஓரியண்ட்டல் ஆர்த்தோடாக்ஸ் திருச்சபை (Oriental Orthodox
Church)
*ஆங்கிலிக்கன் திருச்சபை (Anglican Church)
*லூதரன் திருச்சபை (Lutheran Church)
*பாதுகாவல் : கர்ப்பிணிப் பெண்கள்
எலிசபெத், லூக்கா நற்செய்திகளின்படி செக்கரியாவின் மனைவியும், திருமுழுக்கு
அருளப்பரின் தாயாரும் ஆவார்.
திருவிவிலிய சரிதம் :
லூக்கா நற்செய்திகளின்படி, எலிசபெத் "ஆரோனின்" மகளாவார். இவரும்
இவரது கணவரான செக்கரியாவும் இறைவனின் பார்வையில் நன்னெறியாளர்களாய்
வாழ்ந்தனர். ஆனால், குழந்தைகளில்லாதவர்களாய் வாழ்ந்தனர். செக்கரியா
ஆலய பணிகளில் இருந்தபோது இறைதூதர் காபிரியல் அவர்முன்னே தோன்றி
கூறியதாவது :
"செக்கரியாவே பயப்படாதே; உமது இறைவேண்டல்கள் கேட்கப்பட்டன; உமது
மனைவி கருத்தாங்கி, ஒரு ஆண் மகவை ஈன்றெடுப்பாள்; நீர் அதற்கு
யோவான் என்று பெயரிடுவீர்; அவன் உங்களுக்கு ஒரு சந்தோஷமும் மகிழ்ச்சியுமாய்
இருப்பான்; அவர் இறைவனின் பார்வையில் பெரியவனாய் இருப்பதால் அநேகர்
அவரது பிறப்பால் மகிழ்ச்சியில் திளைப்பார்கள்; அவர் திராட்சை
இரசமும் வேறு பானங்களையும் அருந்தார். அவர் பிறப்பின் முன்பே
பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவார். - லூக்கா 1:1315
தாமும், தமது மனைவி எலிசபெத்தும் முதிர் வயதினர் என்ற காரணத்தால்
செக்கரியா, இறைதூதர் காபிரியேலின் வார்த்தைகளில் நம்பிக்கை
வைக்கவில்லை. இதையறிந்த காபிரியேல் தூதர், செக்கரியாவை நோக்கி,
"உமது விசுவாசமின்மையால் நீர் வாய் பேச இயலாத ஊமையாவீர்; எமது
வாக்கு நிறைவேறும்வரை நீர் ஊமையாக இருப்பீர்" என்று இயம்பி மறைந்தார்.
- லூக்கா 1:16-23
மற்றும், லூக்கா நற்செய்திகள் (1:2425), (1:26-40),
(1:4145), (1:46-55), (1:5664), (1:65-80) ஆகியவற்றில் எலிசபெத்
பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.
அதிகாரப்பூர்வமற்ற திருமறை ஏடுகள் (Apocrypha) :
எலிசபெத் மேலும் பல அதிகாரப்பூர்வமற்ற திருமறை ஏடுகளிலும்
குறிப்பிடப்படுகிறார்.
இஸ்லாம் மத திருமறை நூலாகிய "திருக்குர்ஆனிலும்" இவர்
கௌரவிக்கப்படுகிறார். |
|
|