Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் டிடாக்கஸ் ✠(St. Didacus of Alcalá)
   
நினைவுத் திருநாள் : (நவம்பர் / Nov - 07)
✠ புனிதர் டிடாக்கஸ் ✠(St. Didacus of Alcala)

 ஸ்பேனிஷ் ஃபிரான்சிஸ்கன் பொதுநிலை அருட்சகோதரர் :
(Spanish Franciscan Lay Brother)

பிறப்பு : கி.பி. 1400
சேன் நிக்கோலஸ் டெல் புயேர்டோ, செவில் அரசு, கேஸ்டில் கிரீடம்
(San Nicolás del Puerto, Kingdom of Seville, Crown of Castile)

இறப்பு : நவம்பர் 12, 1463 (வயது 62-63)
அல்காலா டி ஹெனெரெஸ், டோலிடோ அரசு, கேஸ்டில் கிரீடம்
(Alcalá de Henares, Kingdom of Toledo, Crown of Castile)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

புனிதர் பட்டம் : கி.பி. 1588
திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்டஸ்
(Pope Sixtus V)

முக்கிய திருத்தலம் :
எர்மிட்டா டி சான் டியாகோ, சான் நிக்கோலா டெல் பியூர்டோ, செவில், ஸ்பெய்ன்
(Ermita de San Diego, San Nicolás del Puerto, Seville, Spain)

நினைவுத் திருநாள் : நவம்பர் 6

பாதுகாவல் :
சான் டியாகோ ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டம் (Roman Catholic Diocese of San Diego),
ஃபிரான்சிஸ்கன் பொதுநிலை அருட்சகோதரர்கள் (Franciscan Lay Brothers)

"டியேகோ டி சேன் நிக்கோலஸ்" (Diego de San Nicolás) என்ற பெயரிலும் அறியப்படும் புனிதர் டிடாக்கஸ், புதிதாய் வெற்றிகொள்ளப்பட்டிருந்த "கனரி தீவுகளில்" (Canary Islands) பணியாற்றிய முதல் குழுவினருடன் மறைப்பணியாற்றிய "ஸ்பேனிஷ் ஃபிரான்சிஸ்கன் பொதுநிலை அருட்சகோதரரும்" (Spanish Franciscan Lay Brother), ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புனிதருமாவார்.

கி.பி. 1400ம் ஆண்டு, "செவில்" அரசிலுள்ள (Kingdom of Seville) "சேன் நிக்கோலஸ் டெல் புயேர்டோ" (San Nicolás del Puerto) எனும் நகராட்சிப் பகுதியில் பக்தியான ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவரது பெற்றோர் இவருக்கு, ஸ்பெயின் நாட்டின் பாதுகாவலரான புனிதர் "சந்தியாகுவின்" (Santiago/ St. James) பெயரிலிருந்து மருவிய பெயரான "டியாகோ" (Diego) என்ற பெயரிட்டிருந்தனர். சிறு வயதிலேயே ஒதுங்கி வாழும் துறவு வாழ்க்கையை தழுவினார். பின்னர், அலைந்து திரியும் துறவு வாழ்வில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். ஆன்மீக வாழ்க்கைக்கு தாம் அழைக்கப்படுவதை உணர்ந்த இவர், "அல்பைதா" (Albaida) எனும் இடத்திலுள்ள "ஃபிரான்சிஸ்கன்" (Order of Friars Minor) சபையின் "விழிப்புடன் கூர்ந்து கவனிக்கும் அல்லது சீர்திருத்த" (Observant (or Reformed) கிளைகளில் இணைய விண்ணப்பித்தார். தென் ஸ்பெயின் நாட்டின் "அண்டலூசியாவின்" (Andalusia) "கொரொடோபா" (Córdoba) பிராந்தியத்திலுள்ள "அர்ருசஃபா" (Arruzafa) எனுமிடத்திலுள்ள துறவு மடத்திற்கு அனுப்பப்பட்டார். அங்கே இவர் "பொதுநிலை அருட்சகோதரராக" (Lay Brother) ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

டிடாக்கஸ், அங்கே வாழ்ந்த காலத்தில், தமது பிராந்தியத்தின் "கொரொடோபா", "காடிஸ்", மற்றும் "செவில்" (Córdoba, Cádiz and Seville) ஆகிய சுற்றுப்புற கிராமங்களில் அலைந்து திரிந்து பயணித்து பிரசங்கித்தார். இன்றும் அப்பகுதிகளில் அவர் மீதான பக்தி பரவியுள்ளது.

"கனரி" (Canary Islands) தீவுகளின் ஒரு பகுதியான "லேன்ஸரோட்" (Lanzarote) தீவின் "அர்ரஸிஃப்" (Arrecife) எனுமிடத்திலுள்ள சபையின் புதிதாய் அமைக்கப்பட்ட துறவு மடத்துக்கு டிடாக்கஸ் அனுப்பப்பட்டார். சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் ஸ்பேனிஷ் இராணுவத்தால் வெற்றிகொள்ளப்பட்ட அத்தீவுகளின் மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு அறிமுகம் செய்விக்கும் நடைமுறைப் பணிகளே இன்னமும் நடந்துகொண்டிருந்தன. அவர் போர்ட்டர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

கி.பி. 1445ம் ஆண்டு, "ஃபியூர்டேவெஞ்சுரா" (Fuerteventura) தீவிலுள்ள "ஃபிரான்சிஸ்கன் சமூகத்தினரின்" (Franciscan community) பாதுகாவலராக டிடாக்கஸ் நியமிக்கப்பட்டார். அங்கேயிருந்த "ஃபிரான்சிஸ்கன்" (Order of Friars Minor) சபையின் "விழிப்புடன் கூர்ந்து கவனிக்கும் கிளையினர்", (Observant Franciscans) "தூய பொனவெஞ்சுரா" (Friary of St. Bonaventure) துரவுமடத்தை நிறுவினார்கள். இந்த நிலைப்பாட்டிற்கு ஒரு "பொதுநிலை அருட்சகோதரராக" சாதாரண விதிகள் விதிவிலக்காக இருந்தபோதிலும், அவருடைய ஆர்வமும், விவேகமும், பரிசுத்தமும் இந்த விருப்பத்தை நியாயப்படுத்தின.

கி.பி. 1450ம் ஆண்டு, ஸ்பெயின் அழைக்கப்பட்ட டிடாக்கஸ், திருத்தந்தை "ஐந்தாம் நிக்கோலஸ்" (Pope Nicholas V) அறிவித்திருந்த "ஜூபிலி ஆண்டில்" (Jubilee Year) பங்கேற்கவும், ஃபிரான்சிஸ்கன் துறவியான "பெர்னார்டின்" (Bernardine) என்பவரது புனிதர் பட்ட அருட்பொழிவு விழாவில் பங்குபெறவும் ரோம் நகருக்கு அனுப்பப்பட்டார். ஜூபிலி ஆண்டில் பங்குபெற வந்திருந்த பெரும் திருப்பயணியர் கூட்டமும், தமது சபையின் தூண்களில் ஒருவரான "பெர்னார்டினுடைய" (Bernardine) புனிதர் பட்ட விழாவில் பங்கேற்க வந்திருந்த ஆயிரக்கணக்கான துறவியர் கூட்டமும் சேர்ந்து, ரோம் நகரில் பல்வேறு நோய்த்தொற்றுகளை வரவழைத்தது. டிடாக்கஸ், மூன்று மாதங்கள் அங்கே தங்கியிருந்து நோயுற்றோருக்கு சேவை செய்வதிலும், தமது செப வல்லமையினால் அவர்களை குணமாக்குவதிலும் ஈடுபட்டிருந்தார்.

பின்னர், ஸ்பெயின் நாட்டுக்கு திரும்ப வரவழைக்கப்பட்ட டிடாக்கஸ், "அல்காலா" (Alcalá) நகரிலுள்ள "சான்ட மரியா டி ஜீசஸ்" (Friary of Santa María de Jesús) எனும் துறவு மடத்துக்கு அனுப்பட்டார். அங்கேயே தமது வாழ்நாளின் மீதமுள்ள நாட்களை தவம், தனிமை, மற்றும் ஆழ்ந்த சிந்தனைகள் தந்த மகிழ்வில் கழித்தார். அங்கே, கி.பி. 1463ம் வருடம், நவம்பர் மாதம், 12ம் நாள், "டியேகோ" என்றழைக்கப்பட்ட "டிடாக்கஸ்" மரித்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா