Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் கொலம்பனஸ் ✠ (St. Columbanus)
   
நினைவுத் திருநாள் : நவம்பர் 24
* ✠ புனிதர் கொலம்பனஸ் ✠ (St. Columbanus)

*மறைப்பணியாளர்/ நிறுவனர் : (Missionary and Founder)

*பிறப்பு : கி.பி. 543
லேய்ன்ஸ்டர், மீத் அரசு (Leinster, Kingdom of Meath)

*இறப்பு : நவம்பர் 21, 615
போபியம், லொம்பார்ட்ஸ் அரசு (Bobium, Kingdom of the Lombards)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church)

*பாதுகாவல்: மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் (Motorcyclists)

புனிதர் கொலம்பனஸ், சுமார் கி.பி. 590ல், "ஃபிரான்கிஷ்" மற்றும் "லொம்பார்ட்" (Frankish and Lombard kingdoms) அரசுகளில், பல துறவற மடங்களை நிருவிய "ஐரிஷ் மறைப்பணியாளர்" (Irish missionary) ஆவார். தற்போதைய ஃபிரான்ஸ் (France) நாட்டிலுள்ள "லக்சியுலி மடாலயம்" (Luxeuil Abbey), மற்றும் தற்போதைய இத்தாலி (Italy) நாட்டிலுள்ள "பாபியோ மடாலயம்" (Bobbio Abbey) இரண்டும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

பாவங்களுக்கான மனந்திரும்புதலுக்காக ஒரு ஐரிஷ் துறவி ஆளுமை மற்றும் பழக்கவழக்க நடைமுறைகளை கொலம்பனஸ் கற்றுக் கொடுத்தார், இது ஒரு குருவுக்கு, தனிப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை வலியுறுத்தியது. கொலம்பனஸ் முதன்முதலாக கண்டறியப்பட்ட "ஹிபெர்னோ - லத்தீன்" (Hiberno-Latin) எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார்.

கொலம்பனஸ், தற்போதைய அயர்லாந்தின் கிழக்குப் பிராந்தியமான "மீத் அரசில்" (Kingdom of Meath), கி.பி. 543ம் ஆண்டு பிறந்தவர் ஆவார். கொலம்பனஸ், இலக்கணம், சொல்லாட்சிக் கலை, வடிவவியல் மற்றும் பரிசுத்த வேதாகமம் ஆகியவற்றில் நன்கு பயிற்றுவிக்கப்பட்டார்.

கொலம்பனஸ், வடக்கு அயர்லாந்திலுள்ள "லாஃப் எர்ன்" (Lough Erne) எனுமிடத்திலுள்ள "குலுவனினிஸ்" (Cluaninis) எனும் மடத்தின் மடாதிபதியான "சினெல்" (Sinell) என்பவரிடம் கல்வி கற்பதற்காக வீட்டை விட்டு சென்றார். அவரது கற்பித்தலின்பேரில், "திருப்பாடல்கள்" (Psalms) பற்றிய விளக்கவுரை எழுதினார். பின்னர் அவர் கடலோரப் பிராந்தியமான "பங்கோர்" (Bangor) எனுமிடத்திலுள்ள மடத்திற்கு சென்றார். அப்போது, அம்மடத்தின் மடாதிபதியாக "புனிதர் கொம்கால்" (Saint Comgall) இருந்தார். தமது நாற்பது வயதுவரை அங்கேயே தங்கியிருந்த கொலம்பனஸ், பெருநிலப்பகுதிக்கு பயணிக்க மடாதிபதியின் அனுமதி பெற்றார்.

கொலம்பனஸ், "புனிதர் ஆட்டலா" (Saint Attala), "இளைய கொலம்பனஸ்" (Columbanus the Younger), "கும்மைன்" (Cummain), "டோம்கள்" (Domgal (Deicolus), "இயோகெய்ன்" (Eogain), "யூனன்" (Eunan), "புனிதர் கால்" (Saint Gall), "குர்கானோ" (Gurgano), "லிப்ரான்" (Libran), "லுவா" (Lua), "சிகிஸ்பெர்ட்" (Sigisbert), மற்றும் "வால்டொலேனோ" (Waldoleno) ஆகிய பன்னிரு துணைவர்களுடன் கடல் மார்க்கமாக பெருநிலப் பகுதிக்கு பயணித்தார். பிரிட்டனில் (Britain) சுருக்கமாக நிறுத்தி ஓய்வெடுத்ததன் பிறகு, ஸ்காட்லாந்து கடலோரமாக (Scottish coast), ஆங்கிலேய கால்வாயை கடந்த இவர்கள், கி.பி. 585ம் ஆண்டில் வடமேற்கு பிராந்தியத்திலுள்ள "பிரிட்டனி" (Brittany) சென்றடைந்தார்கள்.

பிரிட்டனி சென்றடைந்த கொலம்பனஸ் குழுவினரை "பர்கண்டியின் அரசன் கோன்ட்ராம்" (King Gontram of Burgundy) வரவேற்றார். பின்னர் அங்கிருந்து விரைவிலேயே கிழக்கு ஃபிரான்சிலுள்ள "அன்னக்ரே" (Annegray) பிராந்தியத்துக்கு பயணித்தனர். அங்கே, கைவிடப்பட்ட ரோமன் கோட்டையில் ஒரு துறவற மடத்தினை நிறுவினர். 590ம் ஆண்டு, இவர்களுக்கு அரசனிடமிருந்து "லக்செய்ல்-லெஸ்-பெய்ன்ஸ்" (Luxeuil-les-Bains) என்றழைக்கப்படும் ஒரு ரோமன் கோட்டை கிடைத்தது. அடர்ந்த தேவதாரு மரக்காடுகள் நிறைந்த பகுதியிலுள்ள அந்த கோட்டையை அவர்கள் விரைவிலேயே துறவு மடமாக மாற்றினார்கள். கொலம்பனஸ், கிழக்கு ஃபிரான்ஸ் பிராந்தியத்திலுள்ள "ஃபோன்டேய்ன்-லெஸ்- லக்செய்ல்" (Fontaine-ls-Luxeuil) எனுமிடத்தில் மூன்றாவது துறவு மடத்தை நிறுவினார்.

தாம் இருபது வருடங்கள் கழித்த "கௌல்" (Gaul) (தற்போதைய ஃபிரான்சிலுள்ளது) எனுமிடத்தில் கொலம்பனஸ் ஃபிராங்க்ஷ் ஆயர்களுடன் ஒரு சர்ச்சையில் ஈடுபட்டார். அவர்கள் கொலம்பனஸ் மற்றும் அவரது துணைவர்களின் வளர்ச்சி கண்டு பயம் கொண்டனர்.

கொலம்பனஸ் அரச குடும்பத்துடனும் பிரச்சினைகளில் சிக்கிகொண்டார். "பர்கண்டியின் அரசன் கோன்ட்ராம்" மரித்ததும் அரச பதவிக்கு அடித்துக்கொண்ட அவர்களது உறவினர்களிடையே சர்ச்சையில் சிக்கினார். இறுதியில், கொலம்பனஸ் அங்கிருந்து நாடுகடத்தப்பட்டார். முதலில் மத்திய ஃபிரான்சிலுள்ள "நெவேர்ஸ்" (Nevers) பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் "லொய்ர்" (Loire river) ஆற்றில் படகுப் பயணம் மேற்கொண்டு, ஃபிரான்சின் மத்திய மேற்கு பிராந்தியமான "டூர்ஸ்" (Tours) சென்றடைந்தனர்.

இங்ஙனம் பல்வேறு நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் பயணித்த கொலம்பனஸ், இறுதியில் இத்தாலி வந்தடைந்தார். வாழ்க்கை முழுதும் பயணங்களிலேயே கழித்த கொலம்பனஸ், தமது வாழ்க்கையின் இறுதி ஆண்டில், "டிரேப்பியா" (Trebbia river) நதி இறங்கியோடும் மலையிலுள்ள குகைகளில் தனிமையில் செப வாழ்வு வாழ்ந்தார். 615ம் ஆண்டு, நவம்பர் மாதம், 21ம் தேதி, கொலம்பனஸ் மரித்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா