Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ அருளாளர் மரிய ஃபோர்ச்சுனட்டா விட்டி ✠
(Blessed Maria Fortunata Viti)
   
நினைவுத் திருநாள் : (நவம்பர்  /nov- 20)
✠ அருளாளர் மரிய ஃபோர்ச்சுனட்டா விட்டி ✠
(Blessed Maria Fortunata Viti)

இத்தாலிய பெனடிக்டைன் கன்னியர்:
(Italian Benedictine Nun)

பிறப்பு: பிப்ரவரி 10, 1827
வெரோலி, இத்தாலி
(Veroli, Italy)

இறப்பு: நவம்பர் 20, 1922 (வயது 95)
வெரோலி, இத்தாலி (Veroli, Italy)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
முக்திப்பேறு பட்டம்: அக்டோபர் 8, 1967
திருத்தந்தை ஆறாம் பவுல்
(Pope Paul VI)

நினைவுத் திருநாள்: நவம்பர் 20
பாதுகாவல்:

சோதனைக்கு எதிராக; வறுமை; பெற்றோரின் இழப்பு; மனநோய்
"அன்னா ஃபெலிசியா விட்டி" (Anna Felicia Viti) எனும் இயற்பெயர் கொண்ட அருளாளர் மரிய ஃபோர்ச்சுனட்டா விட்டி (Maria Fortunata Viti), ஒரு இத்தாலிய பெனடிக்டைன் (Benedictine) சபையின் கன்னியாஸ்திரி (Nun) ஆவார், இவர், ரோமன் கத்தோலிக்க திருச்சபையால் முக்திப்பேறு பட்டம் பெற்றவர்.

அன்னா ஃபெலிசியா விட்டி, கி.பி. 1827ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 10ம் தேதி, இத்தாலியின் ( Italy) ஃப்ரோசினோன் மாகாணத்தில் (Province of Frosinone) உள்ள வெரோலியில் (Veroli) பிறந்தார். அவரது தந்தை "லூய்கி விட்டி" (Luigi Viti), ஒரு நில உரிமையாளர் ஆவார். சூதாட்டத்திற்கு அடிமையான அவர், அதிக குடிப்பழக்கம் கொண்டவர். அவரது தாயார் "அன்னா, நீ போனோ விட்டி" (Anna, ne Bono Viti) இறந்தபோது, அன்னா ஃபெலிசியாவுக்கு பதினான்கு வயதாக இருந்தது.
இவரது பெற்றோருக்குப் பிறந்த ஒன்பது குழந்தைகளில் மூன்றாவது குழந்தையான அன்னா ஃபெலிசியா, தனது தாயின் மரணத்திற்குப் பிறகு மற்ற குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பில் இருந்தார். குடும்பத்தை ஆதரிப்பதற்காக, அவர் ஒரு வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்தார். அவரது தந்தையின் குடிப்பழக்கம் மோசமாகியது. அதனால் விட்டியின் வேலையே குடும்பத்தின் வருமானத்தில் பெரும்பகுதியாக இருந்தது. சிறிது காலத்தின் பிறகு, அலட்ரியைச் சேர்ந்த ஒரு இளைஞன் ஒருவனால் அவர் ஈர்க்கப்பட்டார். ஆனால், அவர் அதற்கு பதிலாக ஆன்மீக வாழ்க்கையில் நுழைய முடிவு செய்தார்.

விட்டி கி.பி. 1851ம் ஆண்டு, மார்ச் மாதம், 21ம் நாளன்று, தனது 24 வயதில், வெரோலியில் (Veroli) உள்ள சான் மரியா டி ஃபிராங்கோனி மடாலயத்தில் (Monastery of San Maria de'Franconi) சேர்ந்து, பெனடிக்டைன் (Benedictine) சபையில் இணைந்தார். ஆன்மீக பிரமாணங்களை ஏற்றத்தான் பிறகு, அவர் "மரியா ஃபோர்டுனாட்டா" (Maria Fortunata) என்ற பெயரை ஏற்றார். எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக சபையில் இருந்தபோதிலும், அவர் வீட்டுப் பணிப்பெண் வேலைகளைத் தாண்டி முன்னேறவில்லை. மடாலயத்தில். நூற்பு, தையல், துவைத்தல் மற்றும் ஆடைகளை சரிசெய்தல், ஆகிய வேலைகளை சேவையாக செய்தார். விட்டி தன் வாழ்நாள் முழுவதும் படிப்பறிவில்லாமல் இருந்தார். ஆனால், அவள் ஆசீர்வதிக்கப்பட்ட நற்கருணையின்மீது அளவுகடந்த மிகுந்த பக்தி கொண்டிருந்தார்.

1922ம் ஆண்டு, நவம்பர் மாதம், 20ம் தேதியன்று, தமது 95 வயதில், விட்டி, வெரோலியில் (Veroli) இயற்கை எய்தினார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா