Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

                                                

திருப்பலிச் செபங்கள்

குரு: பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே.
மக்: ஆமென்.

குரு: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும்,
         பரிசுத்த ஆவியின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
மக்: உம்மோடும் இருப்பதாக.

குரு: சகோதர சகோதரிகளே திருப்பலி ஒப்புக் கொடுக்க நாம் தகுதி பெறும்
         பொருட்டு நம் பாவங்களை ஏற்று மனம் வருந்துவோம்.
                               ( சிறிது மௌனத்துக்குப் பிறகு )
எல்லாம் வல்ல இறைவனிடமும் சகோதர சகோதரிகளே, உங்களிடமும் நான் பாவியென்று ஏற்றுக் கொள்கிறேன். ஏனெனில். என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும், கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். என் பாவமே என் பாவமே என் பெரும் பாவமே ஆகையால், எப்போதும் கன்னியான தூய கன்னிமரியாளையும் வானதூதர் புனிதர் அனைவரையும் சகோதரர் சகோதரிகளே உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக் கொள்ள மன்றாடுகிறேன்.

குரு: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக!
மக்: ஆமென்.

குரு: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
மக்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
குரு: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
மக்: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
குரு: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
மக்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.

வானவர் கீதம்:
உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக!  பூவுலகில் நல் மனத்தோருக்கு அமைதியும் ஆகுக. உம்மைப் புகழ்கின்றோம் உம்மை வாழ்த்துகின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம் உம்மை மகிமைப்படுத்துகின்றோம் உமது மேலான மாட்சிமையின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம் ஆண்டவராகிய சர்வேசுரா வானுலக அரசரே, எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரா. ஏக சுதனாய் செனித்த ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே ஆண்டவராகிய சர்வேசுரா, சர்வேசுரனின் செம்மறியே, பிதாவின் சுதனே, உலகின் பாவங்களைப் போக்குபவரே, எங்கள் மேல் இரக்கமாயிரும், உலகின் பாவங்களைப் போக்குபவரே, எங்கள் மன்றாட்டை ஏற்றருளும், பிதாவின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே எங்கள் மேல் இரக்கமாயிரும், ஏனெனில் இயேசுக்கிறிஸ்துவே நீர் ஒருவரே பரிசுத்தர். நீர் ஒருவரே ஆண்டவர் . நீர் ஒருவரே உன்னதர் பரிசுத்த ஆவியோடு பிதாவாகிய சர்வேசுரனின் மாட்சிமையில் இருப்பவர் நீரே. - ஆமென்.
(முதல் வாசகமுடிவில்)

வாசகர் : இது ஆண்டவரின் அருள் வாக்கு!
மக்: இறைவா உமக்கு நன்றி!


(இரண்டாம் வாசகமுடிவில்) அல்லேலூயாப் பாடல் ( எழுந்து நின்று பாடவும் )

நற்செய்தி, திருவுரை:( இறைவன் தம் திருமகன் வழியாகப் பேசுகிறார்.)
  
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
மக்: உம்மோடும் இருப்பாராக.
குரு: புனித லூக்கா எழுதிய பரிசுத்த நற்செய்தியிலிருந்து வாசகம்.
மக்: ஆண்டவரே உமக்கு மகிமை.
       நற்செய்தி முடிவில்
குரு: இது கிறிஸ்துவின் நற்செய்தி !
மக்: கிறிஸ்துவே உமக்குப் புகழ்!


விசுவாச அறிக்கை (ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும்):

ஒரே சர்வேசுரனை விசுவசிக்கிறேன். வானமும் பூமியும், காண்பவை காணாதவை, யாவும் படைத்த எல்லம் வல்ல பிதா அவரே. சர்வேசுரனின் ஏக சுதனாய் செனித்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். இவர் யுகங்களுக்கு எல்லாம் முன்பே பிதாவினின்று செனித்தார் . கடவுளினின்று கடவுளாக, ஒளியின்றி ஒளியாக, மெய்யங் கடவுளினின்று மெய்யங்கடவுளாக செனித்தவர். இவர் செனித்தவார், உண்டாக்கப்பட்டவர் அல்லர். பிதாவோடு ஒரே பொருளானவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன. மானிடரான நமக்காகவும், நம் மீட்புக்காகவும் வானகமிருந்து இரங்கினார். (தலை வணங்கவும்) பரிசுத்த ஆவியினால் கன்னிமரியாளிடம் உடல் எடுத்து மனிதன் ஆனார். மேலும் நமக்காக போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார். வேதாகமத்தின் படியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். வானகத்திற்கு எழுந்தருளி, பிதாவின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார். சீவியரையும், மரித்தவரையும் நடுத்தீர்க்க மாட்சிமையுடன் மீண்டும் வரவிருக்கன்றார். அவரது அரசுக்கு முடிவு இராது. பிதாவினின்றும் சுதனின்றும் புறப்படும் ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான பரிசுத்த ஆவியையும் விசுவசிக்கிறேன். இவர் பிதாவோடும், சுதனோடும் ஒன்றாக ஆராதணையும், மகிமையும் பெறுகின்றார். தீர்க்கத்தரிசிகளின் வாயிலாக பேசியவர் இவரே. ஏக பரிசுத்த, கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன். பாவ மன்னிப்புக்கான ஒரே ஞானஸ்நானத்தையும் ஏற்றுக்கொள்கிறேன். மரித்தோர் உத்தானத்தையும், வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கிறேன். -ஆமென்.

நற்கருணை வழிபாடு

(குரு:அப்பத்தை ஒப்புக்கொடுக்கும் போது)
ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, உம்மைப் போற்றுகிறோம் ஏனெனில் உமது அருட்பெருக்கிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுக்கொண்டோம். நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம் இது எங்களுக்கு வாழ்வளிக்கும் அப்பமாக மாறும்.
மக்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக.

(குரு: இரசத்தை ஒப்புக்கொடுக்கும் போது)
ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, உம்மைப் போற்றுகிறோம் ஏனெனில் உமது அருட்பெருக்கிலிருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுக்கொண்டோம். திராட்சைக் கொடியும், மனித உழைபபும் தந்த இந்த இரசத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம் இது எங்கள் ஆன்மபானமாக மாறும்.
மக்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக.

குரு: சகோதர, சகோதரிகளே, நாம் அனைவரும் ஒப்புக் கொடுக்கும் இத்திருப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி செபியுங்கள்.
மக்: ஆண்டவர் தமது திருப்பெயரின் புகழ்ச்சிக்காகவும், மகிமைக்காகவும், நமது நன்மைக்காகவும், தமது பரிசுத்த திருச்சபை அனைத்தின் நலனுக்காகவும், உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.

காணிக்கை மன்றாட்டு:
குரு: எங்கள் இரக்கம் நிறைந்த தந்தையே நீர் எங்களுக்குக் கொடுத்தவைகளையே நாங்கள் உமக்குக் காணிக்கையாகச் செலுத்துகின்றோம்
இக்காணிக்கைகளை ஏற்று எங்களுக்கு உமது மீட்பைத் தந்தருளும்.
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்
மக்:ஆமென்.


நற்கருணை மன்றாட்டு
குரு:ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
மக்: உம்மோடும் இருப்பாராக.
குரு: இதயங்களை ஆண்டவரிடம் எழுப்புங்கள்.
மக்: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
குரு:நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
மக்:அது தகுதியும் நீதியும் ஆனதே.
          (அந்த நாளுக்குரிய நன்றியுரையைச் சொல்கின்றார்)
தூயவர் தூயவர் தூயவர்! மூவுலகிறைவனாம் ஆண்டவர்
வானமும் வையமும் யாவும்னும் மாட்சிமையால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஓசான்னா! ஆண்டவர் திருப்பெயரால் வருபவர் ஆசி பெற்றவரே
உன்னதங்களிலே ஓசான்னா! உன்னதங்களிலே ஓசான்னா!


எழுந்தேற்றத்திற்குப்பின்
குரு: இது விசுவாசத்தின் மறைபொருள்!
மக்: ஆண்டவரே, தேவரிர் வருமளவும் உமது மரணத்தை அறிக்கையிடுகின்றோம், உமது உயிர்ப்பையும் எடுத்துரைக்கின்றோம்

குரு: இவர் வழியாகவே, இவரோடு, இவரில் எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே, தூய ஆவியின் ஒன்றிப்பில் எல்லாப் புகழும் மாட்சியும் என்றென்றும் உமக்கு உரியதே.
மக்:ஆமென்.

திருவிருந்துச் சடங்கு :
குரு: மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறை படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்.
மக்: பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே,
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக.
உம்முடைய இராட்ச்சியம் வருக.
உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல,
பூலோகத்திலும் செய்யப்படுவதாக.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.
எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல,
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
எங்களைச் சோதனையில் விழவிடாதேயும்.
தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமென்.

குரு: ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து, எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகிறோம் உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமுமின்றி நலமாய் இருப்போமாக! நாங்கள் நம்பியிருக்கும் போரின்ப வாழ்வையும், எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையையும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்
மக்: ஏனெனில், அரசம், வல்லமையும், மாட்சியும் என்றென்றும் உமதே!

குரு:ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.
மக்:  உம்மோடும் இருப்பதாக.

குரு:ஒருவருக்கொருவர் சாமாதானத்தை அறிவித்துக் கொள்வோம்!
(குரு அப்பத்தைப் பிட்டு அதில் ஒரு பகுதியை கிண்ணத்தில போடும் போது) நம் ஆண்டவர் யேசுக்கிறிஸ்துவின் திருஉடலும் இரத்தமும் இங்கு ஒன்றாய் கலந்து இதை உட்கொள்ளும் நமக்கு முடிவில்லா வாழ்வளிப்பதாக.

மக்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல்
        இரக்கமாயிரும்.
        உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல்  
       இரக்கமாயிரும்.
       உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்களுக்கு 
       அமைதியை அளித்தருளும்.


(நற்கருணை வழங்குமுன்)
குரு: இதோ, இறைவனின் செம்மறி! இதோ, உலகின் பாவங்களைப் 
போக்குகின்றவர்! செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றவர் பேறு பெற்றௌர்!
மக்: ஆண்டவரே! தேவரிர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன், ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும் எனது ஆன்மா குணமடையும்.
குரு: கிறிஸ்துவின் திருவுடல்
நன்மை வாங்குபவர்: ஆமென்.


முடிவு
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
மக்: உம்மோடும்இருப்பாராக.
குரு: எல்லாம் வல்ல இறைவன் பிதா, சுதன், பரிசுத்த ஆவி உங்களை 
         ஆசீர்வதிப்பாராக!
மக்: ஆமென்.
குரு:சென்று வாருங்கள், திருப்பலி நிறைவேறிற்று.
மக்: இறைவா உமக்கு நன்றி.

 

"அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல் பல செய்துள்ளார்" (லூக் 1:48-49).