Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் வெஞ்சுரினோ ✠(St. Venturino of Bergamo)
   
நினைவுத் திருநாள் : (மார்ச் / Mars- 28)
✠ புனிதர் வெஞ்சுரினோ ✠(St. Venturino of Bergamo)


டொமினிக்கன் துறவி :
(Dominican Friars)

பிறப்பு : ஏப்ரல் 9, 1304
பெர்கமோ, இத்தாலி
(Bergamo, Italy)

இறப்பு : மார்ச் 28, 1346 (வயது 42)
ஸ்மிர்னா, இத்தாலி
(Smyrna, Italy)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

புனிதர் வெஞ்சுரினோ ஒரு இத்தாலிய டொமினிக்கன் (Italian Dominican preacher) மறை பரப்பாளர் ஆவார்.

இத்தாலியின் "பெர்கமோ" என்ற இடத்தில் பிறந்த இவர், 1319ம் ஆண்டு, ஜனவரி மாதம், 22ம் நாளன்று, "பெர்கமோ'வில்" உள்ள "புனிதர் ஸ்டீபன்" (St. Stephen) பள்ளியில் துறவியர் சபை பிரசங்கியாக பணியேற்றார். 1328 முதல் 1335ம் ஆண்டு வரையான காலகட்டத்தில், இத்தாலியின் மேற்குப் பிராந்தியங்கள் முழுதுமுள்ள நகரங்களில் இவர் தமது பிரசங்கங்களால் புகழ் பெற்றார்.

1335ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், இவர், தாம் மனம் மாற்றிய சுமார் முப்பதாயிரம் பேருடன் ரோம் நகருக்கு "தீவினை செய்ததற்காக வருந்துதல் திருயாத்திரை" (Penitential Pilgrimage) செல்ல திட்டமிட்டார். அவரது நோக்கம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதால், அப்போது "அவிக்னான்" (Avignon) நகரில் தங்கியிருந்த திருத்தந்தை "பன்னிரெண்டாம் பெனடிக்ட்" (Pope Benedict XII), வெஞ்சுரினோ தம்மைத்தாமே திருத்தந்தையாக அறிவிக்க விரும்புகிறார் என்று நினைத்தார்.

திருத்தந்தை பன்னிரெண்டாம் பெனடிக்ட், தமது "ஆன்மீக பிரதிநிதியும்" (Spiritual Vicar), "அனாக்னியின்" ஆயருமான (Bishop of Anagni) "கியோவன்னி பக்னோட்டி" (Giovanni Pagnotti) என்பவருக்கும், "புனிதர் பீட்டர்" மற்றும் "புனிதர் ஜான் லடெரன்" (St. Peter's and St. John Lateran's) ஆகியோரது "நியதி'களுக்கும்" (Canons) "ரோம மேல்சபை" உறுப்பினர்களுக்கும் (Roman senators) வெஞ்சுரினோ'வின் திருயாத்திரையை தடுத்து நிறுத்துமாறு கடிதங்கள் எழுதினார்.

டொமினிக்கன் சபையின் பெரிய தலைவரிடம் (Dominican Master General) கொடுக்கப்பட்ட இந்த புகார், 1335ம் ஆண்டு, லண்டன் நகரில் நடந்த பேரவையில் எதிரொலித்தது. இது, வெஞ்சுரினோ'வின் திருயாத்திரையை கண்டனம் செய்தது. எப்படியும், திருத்தந்தையின் கடிதங்களும் உத்தரவுகளும் வெஞ்சுரினோ'வை சென்று சேரவில்லை. அவர், 1335ம் ஆண்டு, மார்ச் மாதம், 21ம் நாளன்று, ரோம் நகர் சென்றடைந்தார். மிகவும் நல்லமுறையில் வரவேற்கப்பட்ட வெஞ்சுரினோ, பல்வேறு தேவாலயங்களில் பிரசங்கம் செய்தார். பன்னிரண்டு நாட்களின் பிறகு எந்தவித விளக்கங்களும் இல்லாமல் ரோம் நகரை விட்டு கிளம்பினார். கடைசியில் இவரது திருயாத்திரை குழப்பத்தில் முடிவடைந்தது.

ஜூன் மாதம், வெஞ்சுரினோ திருத்தந்தை பன்னிரெண்டாம் பெனடிக்ட்டை "அவிக்நானி'ல்" (Avignon) பார்வையாளர்கள் கூட்டமொன்றினை கூட்ட கேட்டுக்கொண்டார். இதனால் இவர் உடனடியாக பிடித்து சிறையிலடைக்கப்பட்டார். 1335 முதல் 1343ம் ஆண்டு வரையான எட்டு வருடம் இவர் சிறையிலிருந்தார்.

திருத்தந்தை "ஆறாவது கிளமென்ட்'டினால் (Pope Clement VI) விடுதலை செய்யப்பட்ட வெஞ்சுரினோ, 1344ம் ஆண்டு, ஜனவரி மாதம், நான்காம் நாளன்று, துருக்கியர்களுக்கெதிரான சிலுவைப் போர் பிரசங்கிக்க நியமிக்கப்பட்டார். இதில் அவர் கண்ட வெற்றி மகத்தானது. இவரது எழுத்துக்கள், சொற்பொழிவுகள் மற்றும் கடிதங்களை உள்ளடக்கியனவாகும். வெஞ்சுரினோ 1346ம் ஆண்டு, மார்ச் மாதம், 28ம் நாளன்று, தமது 42 வயதில் கிரேக்க (Greek city) நகரான "ஸ்மிர்னா" (Smyrna) என்னுமிடத்தில் மரித்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா