✠ புனிதர் சில்வெஸ்டர்
அசிசி✠ (St. Sylvester of Assisi) |
|
|
|
நினைவுத் திருநாள் :
மார்ச்
4 |
✠ புனிதர் சில்வெஸ்டர்
அசிசி✠ (St. Sylvester of Assisi)
*கடவுளின் ஊழியர்/ ஃபிரான்சிஸ்கன்
சபையின் முதல் குரு :
(The Servant of God/ First Priest in the Franciscan Order)
*பிறப்பு : 1175
அசிசி (Assisi)
*இறப்பு : மார்ச் 6, 1240
*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கடவுளின் ஊழியர் (The Servant of God) என்றழைக்கப்படும் புனிதர்
சில்வெஸ்டர், பன்னிரெண்டாம் நூற்றாண்டின் இறுதியில், பெருஜியா
மாகாணத்திலுள்ள (Province of Perugia) ஊம்ப்ரியா (Umbria
region) பிராந்தியத்தின் அசிசி (Assisi) நகரில் பிறந்தவர் ஆவார்.
சில்வெஸ்டர், நகரின் பிரபுக்கள் குடும்பங்களின் சந்ததியைச்
சேர்ந்தவர் ஆவார். புனிதர் கிளாராவின் (St. Clare of Assisi)
தந்தையான "ஃபேவரோன் டி மொநேல்டோ'வின்" (Favarone di Monaldo)
சகோதரரான, "ரோசன் டி மொநேல்டோ" (Rosone di Monaldo), சில்வெஸ்டரின்
தந்தையார் ஆவார்.
புனிதர் ஃ பிரான்சிஸின் (St. Francis of Assisi) முதல் 12 சீடர்களில்
சில்வெஸ்டர் ஒருவர் ஆவார். இவரே ஃபிரான்சிஸ்கன் சபையின் முதல்
குருவும் ஆவார். குருத்துவம் பெற்ற சில்வெஸ்டர், அசிசி நகரின்
"சேன் ரூஃபினோ" (Cathedral of San Rufino) தேவாலயத்தில்
பொறுப்பேற்றார்.
அவருடைய வாழ்க்கையின் மாற்றம் 1209ம் ஆண்டில் தொடங்கியது.
சில்வெஸ்டர் ஒருமுறை, தேவாலயம் ஒன்றினை மறுசீரமைப்பு செய்யும்
பணிகளுக்காக, ஃபிரான்சிஸுக்கு செங்கற்களை விற்றதாக கூறப்படுகிறது.
ஃபிரான்சிஸ், தமது குடும்பத்தின் வியத்தகு மறுமலர்ச்சிக்கு
பின்னர், அசிசி நகரின் புறநகர்ப் பகுதிகளிலுள்ள சீர்கேடுற்ற
நிலையிலிருந்த தேவாலயங்கள் மற்றும் சிற்றாலயங்களை சீரமைக்கும்
சீரிய பணிகளில் ஈடுபட்டிருந்தார். சிறிது காலம் கழித்து, உள்ளூர்
பிரபுவான "பெர்னார்ட்" (Bernard of Quintavalle),
ஃபிரான்சிசையும் அவரது வாழ்க்கை முறையையும் பின்பற்ற
தீர்மானித்து ஃபிரான்சிஸின் பின்சென்றதைக் கண்டார். மற்றும்
"பெர்னார்ட்" ஃபிரான்சிஸுடன் சேர்ந்து, பெர்னார்டின் செல்வத்தை
ஏழைகளுக்கு விநியோகித்ததைக் கண்டார். பேராசைக்கு இரையாக
விழுந்த சில்வெஸ்டர், தாம் முன்னர் விற்ற தமது செங்கற்களுக்கு
மிகவும் குறைந்த அளவு பணமே தரப்பட்டதாக புகார் கூறினார். தமக்கு
நஷ்ட ஈடாக இன்னும் அதிக பணம் வேண்டுமென்று கேட்டார்.
ஃபிரான்சிஸ் கடமைப்பட்டிருந்தாலும், அவர் கை நிறைய கொடுத்த பணம்,
பின்னர் சில்வெஸ்டரை குற்ற உணர்வுகளால் நிரப்பியது. அவர் தம்முள்
இருந்த பேராசை குணங்களைக் கண்டுணர்ந்து, வருத்தப்பட்டார். தமது
சொத்துக்களை விற்ற சில்வெஸ்டர், ஃபிரான்சிஸ் மற்றும் அவரது
துணைவர்களுடன் இணைந்து, ஒரு தவ வாழ்க்கையை தொடங்கினார். பழமையான
சகோதரத்துவ ஃபிரான்சிஸ்கன் இயக்கத்தின் முதல் குருவான சில்வெஸ்டர்,
ஒரு புனிதமான மற்றும் பிரார்த்தனை செய்யும் மனிதராகவும்,
ஃபிரான்சிஸின் விருப்பமானவராகவும் ஆனார். எளிமை மற்றும் தியானம்
ஆகியவற்றை கடுமையாக கடைபிடித்தார். சில்வெஸ்டர், ஃபிரான்சிஸின்
பயணங்களில் ஒரு துணைவராக ஆனார். ஃபிரான்சிஸ், ஆலோசனைகளுக்கும்
சில்வெஸ்டரையே நாடினார்.
பிரார்த்தனைக்குத் தம்மை அர்ப்பணிப்பதைவிட, மறைபிரசங்கிப்பதற்காக
வெளியே செல்வதன்மூலம் கடவுளுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற
பதிலையே சில்வெஸ்டரும், புனிதர் கிளாராவும் (St. Clare of
Assisi) ஃபிரான்சிஸின் வினவலுக்கு பதிலாக ஆனார்கள். இருவரும்
கடவுளின் சித்தத்தை அறிந்துகொள்வதற்காக தொடர் பிரார்த்தனைகளை
செய்தனர்.
ஒருமுறை, நகரில் சிவில் யுத்தம் வெடித்துச் சிதறிப்போயிருந்த
சமயத்தில், பிசாசுகளை நகரை விட்டு வெளியேற்றுமாறு ஃபிரான்சிஸ்
சில்வெஸ்டருக்கு கட்டளையிட்டார். சில்வெஸ்டர், நகர
நுழைவாயிலில் நின்றுகொண்டு, "சர்வ வல்லமையுள்ள கடவுளின் பெயரால்,
அவருடைய ஊழியரான ஃபிரான்சிஸின் கட்டளையின்பேரில் அனைத்து தீய
பிசாசுகளையும் இங்கிருந்து துரத்துகிறேன்" என்றார். பிசாசுகள்
நகரைவிட்டு புறப்பட்டுச் சென்றன. நகரத்திற்கு சமாதானம்
திரும்பியது.
புனிதர் "பொனவேன்சுர்" (St. Bonaventure), ஒரு சிறப்பான வழியில்,
சில்வெஸ்டர் பிரான்சிஸைக் குறித்த தரிசனங்களைக்
குறிப்பிடுகிறார்.
ஃபிரான்சிஸ் மரித்ததன் பின்னர், பதினாலு வருடங்கள் வாழ்ந்திருந்த
சில்வெஸ்டர், 1240ம் ஆண்டு, அசிசி நகரில் மரித்தார். அவருடைய
உடல், "ஃபிரான்சிஸ் பேராலயத்தில்" (Basilica of St. Francis)
அவருக்கு அருகாமையிலேயே அடக்கம் செய்யப்பட்டது. |
|
|