Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் பீட்டர் டி ரிகலடோ ✠(St. Peter de Regalado)
   
நினைவுத் திருநாள் : (மார்ச் / Mars- 30)
✠ புனிதர் பீட்டர் டி ரிகலடோ ✠(St. Peter de Regalado)

ஃபிரான்சிஸ்கன் துறவி, சீர்திருத்தவாதி :
(Franciscan (Friar Minor) and Reformer)

பிறப்பு : கி.பி. 1390
வல்லடோலிட், ஸ்பெயின்
(Valladolid, Spain)

இறப்பு : மார்ச் 30, 1456
ஸ்பெயின்
(Spain)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

அருளாளர் பட்டம் : மார்ச் 11, 1684
திருத்தந்தை பதினோராம் இன்னொசென்ட்
(Pope Innocent XI)

புனிதர் பட்டம் : ஜூன் 29, 1746
திருத்தந்தை பதினான்காம் பெனடிக்ட்
(Pope Benedict XIV)

நினைவுத் திருநாள் : மார்ச் 30

"புனிதர் பீட்டர் டி ரிகலடோ" (St. Peter de Regalado), ஒரு ஃபிரான்சிஸ்கன் துறவியும் சீர்திருத்தவாதியும் ஆவார்.

சரித்திரத்தில் மிகவும் பரபரப்பாகக் காணப்பட்ட காலகட்டத்தில் பீட்டர் வாழ்ந்தார். 1378 முதல் 1417ம் ஆண்டு வரையான "பெரும் மேற்கத்திய பிளவு" (The Great Western Schism), 1414-1418ம் ஆண்டு, "கான்ஸ்டன்ஸ் சபையில்" (Council of Constance) தீர்வு காணப்பட்டது.

"கான்ஸ்டண்டினோபிள்" (Constantinople) துருக்கியர்களிடம் (Turks) தோற்றுப்போனதால், "பைஸன்டைன் பேரரசு" (Byzantine Empire) சுத்தமாக துடைத்தெறியப்பட்டது. இங்கிலாந்து மற்றும் ஃபிரான்ஸ் நாடுகளுக்கிடையே நடந்த நூறு வருட கால யுத்தம் முடிவுக்கு வந்தது.

ஸ்பெயின் நாட்டின் "வல்லடோலிட்" (Valladolid) என்ற இடத்தில் செல்வ செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்த பீட்டர், தமது 13 வயதில் "ஃபிரான்சிஸ்கன் பள்ளிகளில்" (Conventual Franciscan) சேர அனுமதிக்கப்பட்டார். அவரது குருத்துவ அருட்பொழிவின் பின்னர், அவர் "அகிலர்" (Aguilar) என்னுமிடத்திலுள்ள துறவு மடத்தின் தலைவராக பொறுப்பேற்றார். ஏழ்மை மற்றும் தவம் ஆகியவற்றை குறிக்கோளாகக்கொண்டு வாழும் துறவியர் குழுவொன்றில் இணைந்தார். 1442ம் ஆண்டு, அவரது சீர்திருத்த குழுவிலுள்ள அனைத்து ஸ்பேனிஷ் ஃபிரான்சிஸ்கன் தலைமைப் பொறுப்பேற்றார்.

பீட்டர் தமது துறவியர்க்கு தாமே முன்மாதிரியாகக் கொண்டு வாழ்ந்தார். ஏழைகள் மற்றும் நோயாளிகளிடம் விசேட அன்பு காட்டினார். அவர் நிகழ்த்திய அற்புதங்கள் பற்றின கதைகள் பலவும் சொல்லப்படுகின்றன. உதாரணத்திற்கு, ஏழைகளுக்கு அவர் கொடுக்கும் ரொட்டியானது, அவர் அனைத்து ஏழைகளுக்கும் கொடுத்து தீரும்வரை தீருவதில்லை. தனது வாழ்நாளின் பெரும்பகுதியை பசியுடனேயே கழித்தார். வெறும் ரொட்டியும் தண்ணீருமே அவரது அன்றாட உணவாக இருந்தன.

1456ம் ஆண்டு, பீட்டர் மரித்த காலத்திலேதான், அச்சுக்கலை ஜெர்மனி நாட்டில் தொடங்கியது. சுமார் நாற்பது வருட காலத்தின் பின்னரே "கொலம்பஸின்" (Columbus) வருகை இருந்தது. அவர் மரித்த உடனேயே அவரது கல்லறை யாத்திரை ஸ்தலமாக மாறிப்போனது. பீட்டர் 1746ம் ஆண்டு, புனிதராக அருட்பொழிவு செய்யப்பட்டார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா