Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் எளிய பவுல் ✠(St. Paul the Simple)
   
நினைவுத் திருநாள் : மார்ச் 7
 ✠ புனிதர் எளிய பவுல் ✠(St. Paul the Simple)

*துறவி :(Hermit)

*பிறப்பு : கி.பி. 225
எகிப்து (Egypt)

*இறப்பு : கி.பி. 339
எகிப்து (Egypt)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Churches)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodox Churches)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)

எகிப்தின் புனிதர் எளிய பவுல் (St. Paul the Simple of Egypt), ஒரு துறவியும், புனிதர் வனத்து அந்தோனியாரின் (St. Anthony the Great) சீடருமாவார். இவர், ஆட்சி மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட எளிமை ஆகியவற்றில் நமக்கு சிறந்த முன்னுதாரணம் என்று, சினாய் மடாதிபதியான புனிதர் ஜான் (St John, the Abbot of Sinai) எழுதி வைத்துள்ளார். புனிதர் எகிப்தின் பவுல் (St. Paul of Egypt), இவரது சம காலத்தவராவார்.

புனிதர் எளிய பவுல், ஒரு விவசாயி ஆவார். தமது அழகிய மனைவி, வேறு ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்ததை அறிந்த இவர், தமது அறுபது வயதில், குடும்ப வாழ்வை துறந்து, துறவியாகும் எண்ணத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றார்.

புனிதர் வனத்து அந்தோனியாரை அணுகி, தாம் ஒரு துறவி ஆக விரும்பியதைக் கூறினார். வனத்து அந்தோனியாரும், அறுபது வயதான ஒருவர், தீவிர துறவு வாழ்வைப் பின்பற்றுவது மிகவும் சாத்தியமற்றது என்று கூறி பதிலளித்தார். அதற்கு பதிலாக, நன்றியுணர்வோடு, பயபக்தியுள்ளவராய் இருப்பதன் மூலம் திருப்தியடையும்படி பவுலை அவர் ஊக்கப்படுத்தினார். இந்த பதிலால் திருப்தியடையாத பவுல், அவருடைய சித்தத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம், கற்றுக்கொள்வதாக கூறினார். இத்துடன், பவுலை வெளியே நிறுத்தி, வனத்து அந்தோனியார் கதவைச் சாத்தினார். நான்காம் நாள், இவர் செத்துப் போவாரோ என பயந்துபோன வனத்து அந்தோனியார், அவரை உள்ளே அழைத்தார். அவர், எளிய பவுலை, பனை இலைகளில் இருந்து ஒரு கயிற்றை நெசவு செய்யும்படி கூறினார். பின்னர், நெய்த கையிற்றை அவிழ்க்க கூறினார். பின்னர், அதனை மீண்டும் நெய்ய சொன்னார்.

கடுமையான உழைப்பு, உண்ணாவிரதம், இரவில் விழித்திருத்தல், தொடர்ந்து சங்கீதங்கள் பாடுதல் போன்றவை மூலம், பவுலின் சகிப்புத் தன்மை மற்றும் பணிவு ஆகியவற்றை வனத்து அந்தோனியார் தொடர்ந்து பரீட்சித்தார். பவுலின் தன்னடக்கம் மற்றும் அர்ப்பணம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட வனத்து அந்தோனியார், அங்கிருந்து சில மைல் தொலைவிலுள்ள ஒரு சிறு அறையை இவருக்கு அளித்தார். இறுதியில், பசாசுக்களை ஓட்டும் சக்தியை பவுல் பெற்றிருந்தார் என்று கூறப்படுகிறது.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா