Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் ஒலேகரியஸ் ✠(St. Olegarius)
   
நினைவுத் திருநாள் : மார்ச் 6
 ✠ புனிதர் ஒலேகரியஸ் ✠(St. Olegarius)

*டர்ரகொனா பேராயர் :
(Archbishop of Tarragona)

*பிறப்பு : 1060
பார்சிலோனா (Barcelona)

*இறப்பு : மார்ச் 6, 1137

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

*புனிதர் பட்டம் : 1675
திருத்தந்தை பதினான்காம் பெனடிக்ட்
(Pope Benedict XIV)

*முக்கிய திருத்தலம் :
லேபெண்டோவின் கிறிஸ்து சிற்றாலயம், பார்சிலோனா தேவாலயம்
(Side chapel of Christ of Lepanto, Cathedral of Barcelona)

புனிதர் ஒலேகரியஸ், 1116ம் ஆண்டுமுதல், "பார்சிலோனா" (Bishop of Barcelona) ஆயராகவும், 1118ம் ஆண்டுமுதல், 1137ம் ஆண்டில் தாம் மரிக்கும்வரை "டர்ரகொனா" (Archbishop of Tarragona) பேராயராகவும் பணியாற்றியவராவார்.

இவர், பார்சிலோனாவின் (Count of Barcelona) கோமகனான "மூன்றாம் பெரங்குர்" (Ramon Berenguer III) என்பவரின் மிக நெருங்கியவராக இருந்தார். அடிக்கடி இராணுவ நடவடிக்கைகளில் அவருடன் உடன்சென்றார்.

பார்சிலோனாவின் உன்னதமான குடும்பமொன்றில் பிறந்த இவரது தந்தையார், பார்சிலோனாவின் (Count of Barcelona) கோமகனான "முதலாம் பெரங்குர்" (Ramon Berenguer I) என்பவரைப் பின்பற்றுபவராவார். இவரது தாயாரின் பெயர், "கியூலியா" (Giulia) ஆகும்.

ஒலேகரியஸ், தமது பத்து வயதில் பார்சிலோனா தேவாலயத்தின் குருக்களின் சமூகத்தில் இணைந்தார். பின்னாளில், அவர் அதே குருக்களின் சமூகத்தின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றிருந்தார். பின்னர், 11131118 ஆண்டு காலத்தில், "அவிக்னான்" (Avignon) நகரிலுள்ள "தூய ரூஃபுஸ்" (Saint Rufus) "அகுஸ்தீனிய" (Augustinian monastery) துறவு மடத்தின் மடாதிபதியுமாகவும் பணியாற்றினார்.

"அகுஸ்தீனிய" துறவு மடாதிபதியாக, "பலேரீக்" (Balearic Islands) தீவுகளின் அடிப்படையில் "அல்மோராவிட்" கடல் கொள்ளையர்களுக்கு (Almoravid pirates) எதிராக "பிஸா" (Republic of Pisa) குடியரசு, "காக்லியரி" (Kingdom of Cagliari) இராச்சியம், "ப்ரோவென்ஸ் மாகாணம்" (County of Provence) மற்றும் பார்சிலோனா (Barcelona) ஆகிய நாடுகளுக்கு இடையே உள்ள மத்தியதரக் கூட்டணியை ஒலெகாரியஸ் மத்தியஸ்தம் செய்தார், இதன் விளைவாக 1113-15 ஆண்டுகளில் படையெடுப்பு நிகழ்ந்தது.

"மூன்றாம் பெரங்குர்" (Ramon Berenguer III), 1116ம் ஆண்டு, இவரை பார்சிலோனா ஆயராக நியமித்தார். "செயின்ட் அனஸ்டாசியாவின் கர்தினால் போசோ" (Cardinal Boso of Sant'Anastasia), இவருக்கு அருட்பொழிவு செய்வித்தார். 1117ம் ஆண்டு, திருத்தந்தை "இரண்டாம் கெலாசியசுக்கு" (Pope Gelasius II) மரியாதை செலுத்துவதற்காக ஒலேகரியஸ், ரோம் சென்றார்.

ஒரு திருச்சபை தந்தையான காரணத்தால், ஒலேகரியஸ் சீர்திருத்த பாரம்பரியம் கொண்டவராக இருந்தார். அவர் அடிக்கடி திருத்தந்தையர் ஆலோசனை சபைகளில் பங்குகொண்டார். இவர், பின்வரும் ஆலோசனை சபைகளில் பங்குகொண்டார்:
1119ம் ஆண்டில், "டௌலோஸ்" (Toulouse)
1120ம் ஆண்டில், "ரெய்ம்ஸ்" (Rheims)
1123ம் ஆண்டில், "முதலாம் இலாத்தரன்" (First Lateran)
1129ம் ஆண்டில், "நர்போன்" (Narbonne)
1130ம் ஆண்டில், "கிலேர்மொன்ட்" (Clermont)
1131ம் ஆண்டில், "ரெய்ம்ஸ்" (Rheims)

"முதலாம் இலாத்தரன்" (First Lateran) ஆலோசனை சபையில், "புதிய கேடலோனியாவில்" (New Catalonia) நடந்த சிலுவைப் போரின் (Crusade) திருத்தந்தையர் தூதராக (Legate) இவர் நியமிக்கப்பட்டார்.

1120ம் ஆண்டுகளில், பார்சிலோனா நகரின் புறநகரிலுள்ள "தூய யூலேலியா" துறவு மடத்தை (Monastery of Santa Eullia) சீர்திருத்தி அகுஸ்தீனிய மடமாக மாற்றினார். உண்மையில், அவர் "கேடலான்" (Catalan monasteries) மடாலயங்களின் அகஸ்டீன் சீர்திருத்தத்தில் பரவலாக தொடர்பு கொண்டிருந்தார். 1132ம் ஆண்டில் அவர் மடாலய நிலத்தில் நடந்த குற்றங்களுக்கு நீதி செய்யும் உரிமை மீது "சாண்டா மரியா டி ரிபோல்" (Santa Maria de Ripoll) மடாலயத்தை அகற்றினார். 1133ம் ஆண்டில், இறந்துபோன குருக்கள் அனைவரின் விரிப்புகளையும், படுக்கைகளையும், பார்சிலோனாவிலுள்ள "என் குய்டார்ட்" (En Guitard Hospital) மருத்துவமனைக்கு வழங்கினார்.

டர்ரகொனா (Tarragon) இஸ்லாமியர்களிடமிருந்து மீண்டும் வெற்றிகொண்டதன் பின்னர், ஒலேகரியஸ் டர்ரகொனா (Tarragon) பேராயராக அருட்பொழிவு செய்விக்கப்பட்டார். 1126 மற்றும் 1130ம் ஆண்டுகளுக்கு இடையில், ஒலேகரியஸ் டர்ரகொனா, மற்றும் அதன் தேவாலயங்களை மீண்டும் கட்டியெழுப்புவதில் மிகவும் தீவிரமாக இருந்தார்.

1129ம் ஆண்டு, ஒலேகரியஸ் முதலீட்டிற்கான சர்ச்சைகளில் சிக்கினார். பின்னர், திருத்தந்தைக்கும் பேரரசுக்கும் இடையில் மோதலில் ஈடுபட்டார். அதன்பின்னர், நாடு கடத்தப்பட்டிருந்த திருத்தந்தை "இரண்டாம் ஹொனொரியஸ்" (Pope Honorius II) உடனிருப்பதற்காக தென்ஃபிரான்ஸ் திரும்பினார்.

ஒலேகரியஸ், 1137ம் ஆண்டு, மார்ச் மாதம், ஆறாம் நாள், மரித்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா