Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் லூடோவிகோ ✠(St. Ludovico of Casoria)
   
நினைவுத் திருநாள் : (மார்ச் / Mars- 30)
✠ புனிதர் லூடோவிகோ ✠(St. Ludovico of Casoria)

 குரு, நிறுவனர் :
(Priest, Founder)

பிறப்பு : மார்ச் 11, 1814
நேப்பிள்ஸ், இத்தாலி அரசு
(Naples, Kingdom of Italy)

இறப்பு : மார்ச் 30, 1885 (வயது 71)
நேப்பிள்ஸ், இத்தாலி அரசு
(Naples, Kingdom of Italy)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

அருளாளர் பட்டம் : ஏப்ரல் 18, 1993
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)

புனிதர் பட்டம் : நவம்பர் 23, 2014
திருத்தந்தை ஃபிரான்சிஸ்
(Pope Francis)

பாதுகாவல் : கசோரியா (Casoria)

நினைவுத் திருநாள் : மார்ச் 30

புனித லூடோவிகோ இத்தாலிய ஃபிரான்சிஸ்கன் (Italian Franciscan) துறவி ஆவார். அதிசிறந்த சமூக சீர்திருத்தவாதியான இவர், "சாம்பல் நிற துறவியர் கருணை இல்லம்" (Grey Friars of Charity) மற்றும் "புனிதர் எலிசபெத்தின் சாம்பல்நிற அருட்சகோதரிகள்" (Grey Sisters of Saint Elizabeth) ஆகிய இரண்டு சபைகளை தோற்றுவித்தார்.

"அர்ச்சாஞ்செலோ பல்மென்ட்டியேரி" (Arcangelo Palmentieri) எனும் இயற்பெயர் கொண்ட இவர், தச்சுப் பணியில் பயிற்சி பெற்றவர் ஆவார். 1832ம் ஆண்டு, ஜூலை மாதம், முதல் தேதியன்று, "லூடோவிகோ" என்ற ஆன்மீக பெயரை ஏற்றவாறு "ஃபிரான்சிஸ்கன்" இளம் துறவிகள் மடத்தில் இணைந்தார். ஐந்து வருடங்களின் பின்னர் குருத்துவ அருட்பொழிவு பெற்ற சிறிது காலத்திலேயே இவர் 'நேப்பிள்ஸ்' நகரிலுள்ள புனித பேதுருவின் 'ஃபிரான்சிஸ்கன்' துறவு மடத்தின் இளம் துறவிகளுக்கு கணிதம், வேதியியல் மற்றும் தத்துவ இயல் கற்பிக்க நியமிக்கப்பட்டார்.

1847ம் ஆண்டு, இவர் கொண்ட ஒரு இறை அனுபவம், இவரை வாழ்நாள் முழுதும் ஏழைகளுக்கும் தேவையிலிருப்பவர்களுக்காகவும் சேவை செய்வதில் தம்மை அர்ப்பணித்துக்கொண்டதாக கூறப்படுகின்றது. இவர், மருந்தகங்களையும் அநாதை இல்லங்களையும் உருவாக்குவதில் விரைந்து செயல்பட்டார். 1852ம் ஆண்டு, அடிமைத்தளையிலிருந்து மீட்கப்பட்ட ஆபிரிக்க இளம் சிறுவர் சிறுமிகளுக்காக பள்ளிக்கூடம் ஒன்றினையும் நிறுவினார்.

இவர் ஏழைகளையும், வயது முதிர்ந்தோரையும், நோயாளிகளையும், தன் இதயத்தில் தாங்கி பராமரித்தார். எண்ணிலடங்கா மருத்துவமனைகளையும், வயோதிகர் இல்லங்களையும், சாகும் தருவாயில் உள்ளவர்களுக்கென இல்லங்களையும், பள்ளிக்கூடங்களையும் கட்டினார். காதுகேளாதோர் மற்றும் பேசும் திறன் இல்லாதோருக்கும் பள்ளிகளை நிறுவினார். அவர்களை பராமரிப்பதற்கென இல்லங்களையும் கட்டினார். அவரது பிராந்தியத்தின் துறவியர்க்கு உதவும் வகையில் மருத்துவமனை மட்டுமல்லாது, "நேப்பிள்ஸ்" (Naples), ஃப்ளோரன்ஸ்" (Florence) மற்றும் "அஸிஸி" (Assisi) ஆகிய இடங்களில் தொண்டு நிறுவனங்களை நிறுவினார்.

1859ம் ஆண்டு, இவர் ஆண்களுக்கான ஃபிரான்சிஸ்கன் மூன்றாம் சபை ஒழுங்குகளைக் கடைப்பிடிக்கும் சபை ஒன்றினை துவக்கினார். அது, "சாம்பல் நிற துறவியர் கருணை இல்லம்" (Grey Friars of Charity) என்று அறியப்பட்டது. மூன்று வருடங்களின் பிறகு, பெண்களுக்கான துறவு மடம் ஒன்றினையும் துவக்கினார். அது, "புனிதர் எலிசபெத்தின் ஃபிரான்சிஸ்கன் அருட்சகோதரிகள்" (Franciscan Sisters of Saint Elizabeth) எனும் பெயரில் அறியப்பட்டது.

ஆண் துறவியர் சபையின் பணிகள் ஐக்கிய அமெரிக்க நாடுகளிலும் (United States) பரவின. அங்கே அவர்கள், "நியு ஜெர்சியில்" (New Jersey) "இத்தாலிய - அமெரிக்க சமூகத்தினருக்கு (Italian American community) சேவையாற்றினார். தற்போது, அச்சபையின் துறவியர் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததால், திருத்தந்தையகம் அந்த சபையை 1971ம் ஆண்டு கலைத்தது.

"புனிதர் எலிசபெத்தின் ஃபிரான்சிஸ்கன் அருட்சகோதரிகள்" (Franciscan Sisters of Saint Elizabeth) சபை, தற்போதும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் (United States of America), எத்தியோப்பியா (Ethiopia), இந்தியா (India), பனாமா (Panama) மற்றும் ஃபிலிப்பைன்ஸ் (Philippines) ஆகிய நாடுகளில் சேவை புரிகின்றது.

1876ம் ஆண்டு, தீராத பெரும் நோயொன்றால் பாதிக்கப்பட்ட லூடோவிகோ, ஒன்பது வருடங்களின் பின்னர், 1885ம் ஆண்டு, மார்ச் மாதம், 30ம் நாளன்று, தமது 71 வயதில் மரித்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா