✠ புனிதர் லூட்கர் ✠(St. Ludger) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(மார்ச் /
Mars -
26) |
✠ புனிதர் லூட்கர்
✠(St. Ludger)
✠'முன்ஸ்டர்' மறை மாவட்ட முதல்
ஆயர் :
(First Bishop of Mnster)
✠சக்ஸனி நகர அப்போஸ்தலர் :
(Apostle of Saxony)
✠பிறப்பு : கி. பி. 742
ஸுய்லேன், நெதர்லாந்து
(Zuilen, Netherlands)
✠இறப்பு : மார்ச் 26, 809
பில்லர்பெக், ஜெர்மனி
(Billerbeck, Germany)
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
✠நினைவுத் திருநாள் : மார்ச் 26
✠பாதுகாவல் : க்ரோநின்ஜென்
(Groningen),
நெதர்லாந்து (Netherlands), டேவெண்டேர் (Deventer),
கிழக்கு ஃபிரிஸியா (East Frisia), வேர்டேன் (Werden), முன்ஸ்டர்
மறைமாவட்டம் (Diocese of Mnster),
ஜெர்மனி (Germany).
புனிதர் லூட்கர், "ஃப்ரீசியன்ஸ்" (Frisians) மற்றும் "சக்ஸன்ஸ்"
(Saxons) ஆகிய மாநிலங்களில் மறைப் பணியாற்றிய மறைப்பணியாளரும்,
"வெர்டேன்" (Werden Abbey) துறவு மடத்தின் நிறுவனரும், "முன்ஸ்டர்"
(Mnster) மறை மாவட்டத்தின் முதல் ஆயரும் ஆவார்.
இவரது பெற்றோர், "தியாட்க்ரிம்" (Thiadgrim) மற்றும் "லியாஃபர்க்"
(Liafburg) ஆவர். இவர்கள் செல்வம் படைத்த ஒரு கிறிஸ்தவக்
குடும்பத்தினராவர்.
கி.பி. 753ம் ஆண்டு, லூட்கர் ஜெர்மனியின் பெரிய அப்போஸ்தலரான (great
Apostle of Germany) புனிதர் "போனிஃபேஸ்" (Saint Boniface) அவர்களைச்
சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அதனைத் தொடர்ந்த சம்பவமாக அப்புனிதர்
மறை சாட்சியாக கொல்லப்பட்டது, அவரில் ஆழ்ந்த பெரும் தாக்கத்தினை
ஏற்படுத்தியது.
கி.பி. 756 அல்லது 757ம் ஆண்டு, இவர் புனிதர் "கிரகோரி" (Saint
Gregory of Utrecht) அவர்கள் நிறுவிய பேராலய பள்ளியில் இணைந்து
கல்வி கற்றார். கல்வியில் நல்ல முன்னேற்றம் கண்ட இவர், 767ம்
ஆண்டு, இங்கிலாந்திலிருந்து வந்து "யோர்க்" (York) மறை மாவட்டத்தின்
ஆயராக பொறுப்பேற்கச் சென்ற "அலுபெர்ட்" (Alubert) என்பவருடன்
துணையாகச் சென்ற இவர், அங்கேயே பேராயர் "எதெல்பெர்ட்"
(Ethelbert of York) என்பவரால் திருத்தொண்டராக அருட்பொழிவு
பெற்றார். அங்கேயே ஆங்கிலேய அறிஞர் "அல்ஸுய்ன்" (Alcuin) என்பவரின்
கீழ் கல்வியைத் தொடர்ந்தார். லூட்கர், "அல்ஸுய்ன்" ஆகிய இருவரும்
வாழ்நாள் நண்பர்களானார்கள்.
லூட்கர், 777ம் ஆண்டு, ஜூலை மாதம், ஏழாம் நாளன்று, கொலோனில்
(Cologne) குருத்துவ அருட்பொழிவு பெற்றார். பிறகு சாக்சன்
சென்று மறைப் பணியாற்றினார். கற்பிக்கும் பணியையும் செய்தார்.
இங்ஙனம் சுமார் ஏழு வருடங்கள் பணியாற்றினார். 784ம் ஆண்டு,
"விடுல்கைன்ட்" (Widukind) என்பவன் "ஃபிரிஸியா" மாகான மக்களை
துன்புறுத்த ஆரம்பித்தான். மறைப் பணியாளர்களை அங்கிருந்து விரட்டுவதற்காக
அவர்களை கொன்றும், கிறிஸ்தவ ஆலயங்களை தீயிட்டு எரித்தும்
துன்புறுத்தினான். ஆலயங்களில் பாகன் கடவுளர்களை கொண்டுவந்து
வைத்தான்.
இத்தீவிர துன்புருத்தல்களிளிருந்து தமது சீடர்களுடன் தப்பி ஓடிய
லூட்கர் 785ல் ரோம் நகர் சென்றார். அங்கே திருத்தந்தை முதலாம்
"அட்ரியான்" (Pope Adrian I) அவர்களால் வரவேற்கப்பட்ட அவருக்கு
திருத்தந்தை நிறைய ஆலோசனைகள் வழங்கினார். பின்னர் அங்கிருந்து
"மான்டே கஸினோ" (Monte Cassino) சென்ற லூட்கர், அங்கே "பெனடிக்ட்
சட்ட விதிகளின்"படி (Rule of Saint Benedict) வாழ ஆரம்பித்தார்.
787ம் ஆண்டு, லூட்கர் "லாவெர்ஸ்" (Lauwers) நதியின் கிழக்குக்
கரையோரமுள்ள ஐந்து மாவட்டங்களுக்கு மறைப் பணியாளராக நியமிக்கப்பட்டார்.
மிகவும் சிரமமான இப்பணியை செய்ய தொடங்கிய இவருக்கு உள்ளூர்
மொழியும் உள்ளூர் மக்களின் பழக்கவழக்கங்களும் அறிந்திருந்தபடியால்
அவரது பணிகள் சற்றே இலகுவாக இருந்தன. லூட்கர் பல்வேறு இடங்களில்
பணியாற்றினார். புனிதர் "வில்லிப்ரார்ட்" (Saint Willibrord)
மறைப்பணியாற்றிய இடமான "ஹெலிகோலேண்ட்" (Heligoland) சென்றார்.
அங்கேயிருந்த பாகன் கோவில்களை அழித்தார். கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றினை
கட்டினார். பின்னர் அங்கிருந்து திரும்பும் வழியில், கண்
பார்வையற்ற கவிஞரான "பெர்ன்லெஃப்" (Bernlef) என்பவரை சந்தித்தார்.
கண் பார்வை திரும்பவேண்டுமென இறைவனை நோக்கி உருக்கமாக இவர்
செபித்ததால் "பெர்ன்லெஃப்" மீண்டும் பார்வை பெற்றார். அத்துடன்
முழு விசுவாசமுள்ள கிறிஸ்தவராக மாறினார்.
தூய ரோமப் பேரரசர் முதலாம் சார்லசின் (Charlemagne)
வேண்டுகோளுக்கிணங்க, 805ம் ஆண்டு, மார்ச் மாதம், 30ம் நாளன்று,
ஆயராக அருட்பொழிவு செய்விக்கப்பட்டார். லூட்கருக்கு அருட்பொழிவு
செய்வித்தவர் "கொலோன்" பேராயர் "ஹில்டேபோல்ட்" (Hildebold,
Archbishop of Cologne) ஆவார்.
லூட்கரின் அமைதியான மறை போதனை, பேரரசர் சார்லசின் சூழ்ச்சி
முறைகளை விட கிறிஸ்தவத்தை பரப்புவதில் அதிக வெற்றியைத் தந்தது.
தேவாலயங்களுக்கு நகைகளாக போய்ச் சேரவேண்டிய பணத்தை தானமாக
கொடுப்பதாக இவர் மீது குற்றச்சாட்டுகளும் எழுந்தன. ஆனால், அதில்
தவறேதுமில்லை என்று எடுத்துரைத்து அவர் பேரரசரை சமாதானம்
செய்வித்தார்.
809ம் வருடம், "கொயேஸ்ஃபெல்ட்" (Coesfeld) என்ற இடத்தில், தவக்காலத்தின்
ஐந்தாம் ஞாயிறன்று, (Passion Sunday) அதிகாலை தேவாலயத்தில் மறையுரையாற்றி
திருப்பலி நிறைவேற்றினார். பின்னர் மீண்டும் காலை ஒன்பது மணி
பூஜையிலும் மறையுரையாற்றி தமது கடைசி திருப்பலி
நிறைவேற்றினார். அன்று மாலையே அவர் அமைதியாக மரித்துப் போனார்.
|
|
|