Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் லூஸி ஃபிலிப்பினி ✠(St. Lucy Filippini)
   
நினைவுத் திருநாள் : மார்ச் 25
✠ புனிதர் லூஸி ஃபிலிப்பினி ✠(St. Lucy Filippini)

 
*நிறுவனர் : (Foundress)

 *பிறப்பு : ஜனவரி 16, 1672
கொர்நெடோ-டர்குய்நியா, இத்தாலி
(Corneto-Tarquinia, Italy)

 *இறப்பு : மார்ச் 25, 1732 (வயது 60)
மோண்டேஃபியாஸ்கோன், இத்தாலி
(Montefiascone, Italy)

 *ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

 *அருளாளர் பட்டம் : ஜூன் 13, 1926
திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்
(Pope Pius XI)

 *புனிதர் பட்டம் : ஜூன் 22, 1930
திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்
(Pope Pius XI)

 *முக்கிய திருத்தலம் :
மோண்டேஃபியாஸ்கோன் பேராலயம்
(Montefiascone Cathedral)


ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரான லூஸி ஃபிலிப்பினி, இத்தாலியின் "மோண்டேஃபியாஸ்கோன்" (Corneto-Tarquinia) எனுமிடத்தில் பிறந்தவர். இவரது தந்தை பெயர் "ஃபிலிப்போ ஃபிலிப்பினி" (Filippo Filippini) ஆகும். தாயாரின் பெயர் "மட்டலேனா பிச்சி" (Maddalena Picchi) ஆகும். தமது பெற்றோரின் ஐந்தாவது - கடைக்குட்டி குழந்தையாகப் பிறந்த இவர், சிறு வயதிலேயே அனாதையானார்.

தமது ஆறு வயதில் பிரபுத்துவ வசதி படைத்த தமது அத்தை மாமன் வீட்டிலிருந்து கல்வி கற்க சென்றார். அவர்கள் அவரை ஆன்மீக கல்வி கற்க பரிந்துரை செய்தனர். லூஸியும் "சான்ட லூஸியா" (Santa Lucia) "பெனடிக்டைன் அருட்சகோதரியர்" (Benedictine nuns) இல்லத்தில் இணைந்தார்.

புனிதர் லூஸி ஃபிலிப்பினியின் பணிகள் கர்தினால் "மார்கண்டோனியோ பார்பாரிகோ" (Marcantonio Barbarigo) என்பவரின் பாதுகாவலுடன் தொடங்கின. அவர், லூஸியை ஏழை இளம் பெண்களுக்கான பள்ளிகளை நிறுவ உந்தினார். புனிதர் "ரோஸ் வெனேரினியுடன்" (St. Rose Venerini) இணைந்து இளம்பெண்களுக்கு ஆசிரியர் பயிற்சியளிக்கும் பள்ளியொன்றையும் தொடங்கினார். நகரின் ஏழைப்பெண்களுக்கு உள்நாட்டுக் கலை, நெசவு, எம்ப்ராய்டரி, வாசிப்பு, மற்றும் கிறிஸ்தவ கோட்பாடுகளை கற்பித்தனர்.

பன்னிரண்டு வருடங்களின் பிறகு, கர்தினால் இவர்களுக்கான ஆன்மீக விதிகளின் தொகுப்பை திட்டமிட்டு உருவாக்கி கொடுத்தார். லூஸி தமது வாழ்நாளில் மொத்தம் ஐம்பத்திரண்டு பள்ளிகளை கட்டி, நிறுவி, நடத்தினார். 1707ம் ஆண்டு, திருத்தந்தை பதினொன்றாம் கிளமென்ட் (Clement XI) லூஸியை ரோம் நகருக்கு அழைத்தார். திருத்தந்தை அவர்கள் தாமே நிறுவி தமது விசேஷ பாதுகாப்பில் வைத்திருந்த பள்ளிகளை நடத்திட லூஸியை அழைத்தார்.

இவர் நிறுவிய பள்ளிகள் 1910ம் ஆண்டிலிருந்து திருத்தந்தையின் ஒப்புதல் பெற்ற பள்ளிகளாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டது.

தமது அறுபது வயதில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட லூஸி 1732ம் ஆண்டு, மார்ச் மாதம், 25ம் நாளன்று மரணமடைந்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா