Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் லியாண்டர் ✠(St. Leander of Seville)
   
நினைவுத் திருநாள் : மார்ச் 13
 ✠ புனிதர் லியாண்டர் ✠(St. Leander of Seville)

*ஆயர் : (Bishop)


*பிறப்பு : கி,பி, 534
கார்டகெனா, ஸ்பெயின்
(Cartagena, (in modern Spain)


*இறப்பு : மார்ச் 13, 600
செவில், ஸ்பெயின்
(Seville, Spain)


*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)


புனிதர் லியாண்டர், "செவில்" நகரின் கத்தோலிக்க ஆயரும் (Catholic Bishop of Seville) தற்போதைய ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் நாடுகளை ஒன்றிணைத்த அப்போதைய "ஐபீரிய தீபகற்பத்தின்" (Iberian Peninsula) மன்னர்களை கத்தோலிக்க திருச்சபைக்கு மனம் மாற தூண்டுகோலாய் இருந்தவரும் ஆவார்.
("ஐபீரிய தீபகற்பம்" - "Iberian Peninsula" ஐரோப்பாவின் தென்மேற்கு கோடியில் அமைந்துள்ள வளைகுடாவாகும்)


இவர், புனிதர் இஸிதோரி'ன் (St. Isidore of Seville) சகோதரர் ஆவார். இவரது சகோதரர்கள் அவைவருமே புனிதர்கள் ஆவர். இவர்கள் உயரடுக்கு "ஹிஸ்பானோ-ரோமன்" (Hispano-Roman) குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களது தந்தை "செவரியனஸ்" (Severianus) "கார்ட்டஜெனாவின்" ஆளுநர் (Governor of Cartagena) ஆவார். சுமார் கி.பி. 554ல் செவில் (Seville) நகருக்கு குடிபெயர்ந்தனர். புனிதர்கள் லியாண்டர் மற்றும் இசிதோர் இருவரும் செவில் நகரின் ஆயர்களாவர். இவர்களது சகோதரியான புனிதர் ஃப்ளோரின்டினா" (Saint Florentina) ஒரு மடாதிபதியும், சுமார் நாற்பதுக்கு மேற்பட்ட பள்ளிகளை நிறுவியவருமாவார். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் துறவியர்கள் இவரது மடத்தில் இருந்தனர். மூன்றாவது சகோதரரான "புனிதர் ஃபுல்ஜென்ஷியஸ்" (St. Fulgentius of Cartagena) "எஸிஜா" மறைமாவட்ட ஆயர் (Bishop of Écija) ஆவார்.


புனிதர் லியாண்டர், கிறிஸ்துவை கடவுள் என்பதை நம்பாமல் மறுத்துவந்த ஆரியனிச நாத்திகவாதிகளுக்கு எதிராக (heresy of Arianism) மக்களை மனம் திருப்புவதில் பெரும் வெற்றி கண்டவர் ஆவார். இவரது மரணம் சம்பவித்த காலத்தில், அரசியல் மற்றும் மத எழுச்சி கொண்டிருந்த ஸ்பெயின் நாட்டில் கிறிஸ்தவ சமயம் வளமையடைய பெரிதும் உதவினார்.


தமது இளமையில் துறவறம் புகுந்த லியாண்டர், மூன்று வருடங்களை கல்வியிலும் செபத்திலும் செலவிட்டார். அந்த சாந்தமான காலத்தின் பின்னர் அவர் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். பின்வந்த அவரது வாழ்நாள் முழுவதும் நாத்திகத்திற்கு எதிராக விடாமுயற்சியுடன் போராடிப் பணியாற்றினார். கிறிஸ்தவத்திற்கெதிரான அரசன் கி.பி. 586ம் ஆண்டு, மரணமடைந்ததும் லியாண்டரின் கனவுகள் நனவாக காரணமாயின. அதன்பின்னர் முடிசூடிய அரசனும், லியாண்டரும் கிறிஸ்தவ மரபுகளை மீட்கவும் அறநெறி உணர்வுகளை புதுப்பிக்கவும் கைகோர்த்து பணியாற்றினார். ஆரியனிச ஆயர்கள் பலர் தமது விசுவாசத்தினை மாற்றிக்கொள்ள இணங்கவைப்பதில் லியாண்டர் பெரும் வெற்றி கண்டார்.


கி.பி. சுமார் 600ம் ஆண்டு, மரணமடைந்த லியாண்டர், ஸ்பெயின் நாட்டில் திருச்சபையின் மறைவல்லுனராக போற்றப்படுகின்றார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா