✠ புனிதர் லாசர் ✠(St. Lazarus of Bethany) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(மார்ச்
/
Mars-
27) |
✠ புனிதர் லாசர் ✠(St. Lazarus of Bethany)
✠கிறிஸ்துவின் நண்பர், நான்கு நாட்கள்
மரித்திருந்தவர்:
(Four-days dead, Friend of Christ)
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodox Church)
கிழக்கு கத்தோலிக்க திருச்சபை
(Eastern Catholic Churches)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
லூதரன் திருச்சபை
(Lutheran Church)
இஸ்லாம்
(Islam)
"நான்கு நாட்களின் லாசரஸ்" (Lazarus of the Four Days) என்றும்,
"புனிதர் லாசரஸ்" (Saint Lazarus) என்றும், "பெத்தனியின் லாசரஸ்"
(Lazarus of Bethany) என்றும் அழைக்கப்படும் புனிதர் லாசர்,
நான்கு நாட்கள் மரித்தோருள் இருந்தவரும், கிறிஸ்து இயேசுவின்
நண்பரும், புனிதர்கள் "மார்த்தா" (Martha) மற்றும்
"மரியாவின்" (Mary) சகோதரருமாவார். இவரது நண்பரான இயேசு, இவரை
தமது கண்முன்னே மரித்தோரிலிருந்து உயிர்ப்பித்ததைக் கண்ட
யூதர்கள், "பாருங்கள், இவர் தம் நண்பர் மீது எவ்வளவு அன்பு
வைத்திருக்கிறார்?" என்றனர்.
இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் பின்னர், லாசரின்
வாழ்க்கையைப்பற்றி வெவ்வேறு புராணங்கள் உள்ளன. அவர்
வாழ்க்கையில் மீண்டும் அழைக்கப்படுவதன் முன்னர், அடுத்த
உலகத்தைப் பற்றி அவர் ஏதாவது எழுதி வைத்துவிட்டு சென்றிருக்க
வேண்டுமென்று சிலரும், வேறு சிலரோ, அவர் புனிதர் பேதுருவைப்
பின்தொடர்ந்து சிரியா (Syria) சென்றிருக்க வேண்டுமென்றும்,
மற்றொரு கதையானது, இஸ்ரேலின் (Israel) மத்திய தரைக்கடல்
கடற்கரையிலுள்ள "ஜாஃபா" கடலில், கசிவுள்ள படகில் யூதர்களால்
ஏற்றிவிடப்பட்டும், அவரும், அவரது சகோதரிகளும், மற்றும்
பிறரும் "சைப்ரஸில்" (Cyprus) பாதுகாப்பாக கரை இறங்கியுள்ளனர்
என்கிறது. அங்கே, 30 ஆண்டுகளாக ஆயராக பணியாற்றிய பின்னர் அவர்
அமைதியாக மரித்தார் என்கிறது.
"கான்ஸ்டண்டினோபில்" (Constantinople) நகரில், இவரைக்
கௌரவிக்கும் விதமாக, ஒரு தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. இவரது
புகழ்பெற்ற மிச்சங்கள் அனைத்தும் கி.பி. 890ம் ஆண்டு, இங்கே
கொண்டுவரப்பட்டன. அங்கே அவர் "மார்ஸிலீஸின்" (Marseilles)
ஆயராகப் பணியாற்றினார். எண்ணற்ற மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு
மனம் மாற்றியபின்னர், மறைசாட்சியாக மரித்த இவர், ஒரு குகையில்
அடக்கம் செய்யப்பட்டார். கிழக்கு ஃபிரான்சிலுள்ள (Eastern
France) "ஆடம்ன்" (Autun) நகரில் ஒரு புதிய பேராலயம்
கட்டப்பட்டு இவரது மிச்சங்கள் 1146ம் ஆண்டு, இங்கே
கொண்டுவரப்பட்டன.
இப்புனிதருக்கு ஆரம்ப காலத்திலேயே பக்தி இருந்தது என்பது
நிச்சயம். கி.பி. சுமார் 390ம் ஆண்டுகளில், "எதேரியா"
(Etheria) எனும் பெண் திருயாத்திரி, லாசர்
மரித்தோர்களிடமிருந்து எழுந்திருந்த கல்லறையில், ஆண்டுதோறும்
குருத்து ஞாயிற்றுக் கிழமைக்கு முந்தின சனிக்கிழமையன்று
நடக்கும் ஊர்வலம் பற்றி பேசுவதை கேட்க முடிந்தது. மேற்கத்தைய
நாடுகளில், தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறை (Passion Sunday)
"டொமினிகா டி லாஸரோ" (Dominica de Lazaro) என்பர். மற்றும்,
ஆபிரிக்காவில் (Africa), லாசர் உயிருடன் எழுப்பப்பட்ட
நற்செய்தி, தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறன்று (Passion Sunday)
வாசிக்கப்படுவதாக புனிதர் அகுஸ்தினார் (St. Augustine)
கூறுகின்றார். |
|
|