Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

  ✠ புனிதர் சிலுவையின் ஜான் ஜோசப் ✠(St. John Joseph of the Cross)
   
நினைவுத் திருநாள் : மார்ச் 5
     ✠ புனிதர் சிலுவையின் ஜான் ஜோசப் ✠(St. John Joseph of the Cross)

*குரு :(Priest)

*பிறப்பு : ஆகஸ்ட் 15, 1654
இஸ்ச்சியா தீவு, நேப்பிள்ஸ் அரசு
(Ischia, Kingdom of Naples)

*இறப்பு : மார்ச் 5, 1739 (வயது 84)
இஸ்ச்சியா தீவு, நேப்பிள்ஸ் அரசு
(Ischia, Kingdom of Naples)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

*அருளாளர் பட்டம் : மே 24, 1789
திருத்தந்தை ஆறாம் பயஸ்
(Pope Pius VI)

*புனிதர் பட்டம் : மே 26, 1839
திருத்தந்தை பதினாறாம் கிரகோரி
(Pope Gregory XVI)

*பாதுகாவல் : இஸ்ச்சியா தீவு (Ischia)

"கார்லோ கெடானோ கலோஸிர்டோ" (Carlo Gaetano Calosirto) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் சிலுவையின் ஜான் ஜோசப், ஒரு இத்தாலி நாட்டு கத்தோலிக்க குருவாவார். இவர், "ஃபிரான்சிஸ்கன் இளம் துறவியர் சபையின்" (Order of Friars Minor) ஒப்புக்கொள்ளப்பட்ட உறுப்பினர் (Professed Member) ஆவார். அதிசயங்கள் செய்வதிலும் எளிய வாழ்க்கையாலும் பிரசித்தி பெற்ற இவர், துறவறப் புகுநிலையினரின் தலைவராக (Master of Novices) நியமனம் செய்யப்பட்டார். இவர், தமது பிறப்பிடமான இஸ்ச்சியா தீவின் (Ischia) பாதுகாவலர் ஆவார்.

"கார்லோ கெடானோ" நேப்பில்ஸின் (Naples) கடல் பகுதியான இஸ்ச்சியா (Ischia) தீவில் பிறந்தவர் ஆவார். தமது பதினாறு வயதின் முன்பே "சிலுவையின் ஜான் ஜோசப்" என்ற மதப் பெயரை ஏற்றவாறு, கட்டுப்பாடுகளைக் கடுமையாக கடைபிடிக்கும் "ஃபிரான்சிஸ்கன் இளம் துறவியர் சபையில்" (Order of Friars Minor) இணைந்தார். இவர், "புனிதர் அல்கான்டரா நகரின் பீட்டர்" (Saint Peter of Alcantara) என்பவரின் "சீர்திருத்த இயக்கத்தினைப்" பின்பற்றிய முதல் இத்தாலியர் ஆவார்.

இவரது தூய்மையின் புகழானது, இவர் குருத்துவ அருட்பொழிவு பெறுமுன்னரே "அஃபிலா" (Afila) என்னுமிடத்தில் புதிய துறவியர் மடம் ஒன்றினைக் கட்டும் பணிகளைக் கண்காணிக்கும் பொறுப்பினை இவருக்குத் தர இவரது மடத்தின் தலைமைத் துறவியரை தூண்டியது.

1674ம் ஆண்டு, இவர் கத்தோலிக்க குருவாக குருத்துவ அருட்பொழிவு பெற்றார். இவரது கீழ்ப்படிதலும், தாழ்ச்சியும் இவருக்கு பல பதவிகளைப் பெற்றுத் தந்தது. துறவறப் புகுநிலையினரின் தலைவராகவும் பாதுகாவலராகவும் பொறுப்புகள் இவரைத் தேடி வந்தன. துறவு மட தலைவராக இருப்பினும் அவர் சமையலறையில் உதவிகளோ பணிகளோ செய்வதிலும், விறகு கொண்டுவருவதிலும், துறவியரின் தேவைகளுக்கு தண்ணீர் கொண்டு வருவதிலும் தயக்கம் காட்டியதில்லை. மாறாக அனைத்துப் பணிகளையும் செய்தார்.

இஸ்ச்சியா தீவில் உள்ள ஆர்கோனீஸ் கோட்டையில் (Aragonese Castle) இவர் பெயரால் சிறு தேவாலயம் உள்ளது.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா