Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 புனிதர் இக்னேஸியா வெர்செரி ✠ (St. Ignazia Verzeri)
   
நினைவுத் திருநாள் : மார்ச் 3
   ✠ புனிதர் இக்னேஸியா வெர்செரி ✠ (St. Ignazia Verzeri)

*அருட்சகோதரி/ நிறுவனர் : (Nun and Foundress)

*பிறப்பு : ஜூலை 31, 1801
பெர்கமோ, கிஸால்பைன் குடியரசு
(Bergamo, Cisalpine Republic)

*இறப்பு : மார்ச் 3, 1852 (வயது 50)
பிரேஸியா, லொம்பார்ட-வெநீஷியா அரசு
(Brescia, Kingdom of Lombardy-Venetia)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

*முக்திபேறு பட்டம் : அக்டோபர் 27, 1946
திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ் (Pope Pius XII)

*புனிதர் பட்டம் : ஜூன் 10, 2001
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் (Pope John Paul II)


*பாதுகாவல் :
இயேசுவின் திருஇருதயத்தின் மகள்கள்
(Daughters of the Sacred Heart of Jesus)
கல்வியாளர்கள் (Educators)

புனிதர் இக்னேஸியா வெர்செரி, ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் இத்தாலிய பெனடிக்டைன் சபையின் (Benedictine Nun) அருட்சகோதரியும், "இயேசுவின் திருஇருதயத்தின் மகள்கள்" (Daughters of the Sacred Heart of Jesus) எனும் கத்தோலிக்க நிறுவனத்தின் நிறுவனருமாவார். இதன் உறுப்பினர்கள், கற்பு, எளிமை, கீழ்ப்படிதல் ஆகியவற்றிற்காக பொது உறுதிப்பாடுகளை எடுத்துக்கொண்டவர்கள் ஆவர். இளைஞர்களின் கல்வி, நோய்வாய்ப்பட்டவர்களை கவனித்தல் மற்றும் மறைப்பனிகள் ஆகியவையும் அவர்களது அர்ப்பணிக்கப்பட்ட பணிகளாகும். பெண்களின் தேவைகளுக்காக தம்மை அர்ப்பணித்துக்கொண்ட இவர், அவர்களது கல்விக்கும் முன்னுரிமை தந்தார். அனாதை இல்லங்களை நிறுவிய அவர், முதியோர் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் உதவியளித்தார். அவர், பெனடிக்டைன் துறவியானதன் பிறகு, "தெரேசா யூஸ்டோச்சியோ" (Teresa Eustochio) என்ற பெயரை தமது ஆன்மீக பெயராக ஏற்றுக்கொண்டார்.

1801ம் ஆண்டு, வட இத்தாலியின் லொம்பார்டி (Lombardy) பிராந்தியத்தின் "பெர்கமோ" (Bergamo) நகரில் பிறந்த இக்னேஸியா வெர்செரியின் தந்தை "அன்டோனியோ வெர்செரி" (Antonio Verzeri) ஆவார். இவரது தாயார், "எலெனா பெட்ரொக்கா-க்ருமெல்லி" (Elena Pedrocca-Grumelli) ஆவார். இக்னேஸியா வெர்செரி, தமது பெற்றோருக்குப் பிறந்த ஏழு குழந்தைகளில் மூத்த குழந்தை ஆவார்.

ஃபிரான்சிஸ்கன் எளிய கிளாரா" (Franciscan Poor Clare) சபையின் அருட்சகோதரியான இவரது அத்தை, "அன்டோனியா க்ருமெல்லி" (Antonia Grumelli), இக்னேஸியா மத சேவைகளில் ஈடுபடுவார் என்றும், எதிர்காலத்தில், பரிசுத்த பிள்ளைகளின் தாயாக கடவுளே விதித்திருக்கிறார் என்றும் தீர்க்கதரிசனமாக முன்மொழிந்தார். இக்னேஸியாவின் சகோதரரான "கிரலமோ வெர்செரி" (Girolamo Verzeri), 1850ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 30ம் நாளன்று, "பிரேசியா" (Bishop of Brescia) ஆயரானார்.

"பெர்கமோ" மறைமாவட்டத்தின் தலைமை குருவான (Vicar General of Bergamo) "கேனன் ஜியோசெப் பெனக்லியோ" (Canon Giuseppe Benaglio) அவர்களின் மேற்பார்வையில் கல்வி கற்ற இக்னேஸியா, பின்னர் பெர்கமோவிலுள்ள "தூய க்ராடா" (Santa Grata) துறவு மடத்தின் பெனடிக்டைன் பெண் துறவியருடன் கல்வி கற்றார்.

ஒரு பக்தியுள்ள, மற்றும் அறிவார்ந்த குழந்தையான இக்னேஸியா, கடவுளுக்கு அடிமையாக வாழ்வதைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்று நினைத்தார். வாழ்க்கையின் பணிகளைப் பற்றின அச்சம் தொடக்கத்தில் இருந்தாலும், தமது வாழ்க்கையை ஆன்மீக பாதையில் இட்டுச் சென்றார்.

1831ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 8ம் நாளன்று, பெனக்லியோவின் உதவியுடன், "இயேசுவின் திருஇருதயத்தின் மகள்கள்" (Daughters of the Sacred Heart of Jesus) எனும் கத்தோலிக்க நிறுவனத்தை நிறுவினார். இச்சபை, பெண்களின் வாழ்க்கையில், குறிப்பாக அவர்களது கல்வியில் கவனம் செலுத்தும் குழுவாகும் குறிக்கோளுடன் நடத்தினார்.

சபையை தனியாக நடத்தும் பொறுப்புகளை இக்னேஸியாவிடம் விட்டுவிட்டு, பெனக்லியோ 1836ம் ஆண்டு, மரித்துப் போனார். அயராது உழைத்த இக்னேஸியா, பல்வேறு அநாதை இல்லங்களை நிறுவினார். முதியோர் மற்றும் நோயுற்ற மக்களுக்கு பல வழிகளில் உதவி புரிந்தார்.

இக்னேஸியா வெர்செரி, 1852ம் ஆண்டு, மார்ச் மாதம், மூன்றாம் நாளன்று, வட இத்தாலியின் "லொம்பார்டி" (Lombardy) பிராந்தியத்திலுள்ள "பிரேசியா" (Brescia) நகரில் மரித்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா