Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் கேதரின் ✠(St. Catherine of Bologna)
   
நினைவுத் திருநாள் : (மார்ச் / Mars- 28)
✠ புனிதர் கேதரின் ✠(St. Catherine of Bologna)

 மறைப்பணியாளர்/ அருட்கன்னியர் :
     (Religious/ Virgin)

பிறப்பு : செப்டம்பர் 8, 1413
   போலோக்னா, இத்தாலி
   (Bologna, Italy)

இறப்பு : மார்ச் 9, 1463 (வயது 49)
   போலோக்னா, இத்தாலி
   (Bologna, Italy)

ஏற்கும் சமயம் :
   ரோமன் கத்தோலிக்க திருச்சபை
   (Roman Catholic Church)

முக்திபேறு பட்டம் : 1524
   திருத்தந்தை ஏழாம் கிளமென்ட்
   (Pope Clement VII)

புனிதர் பட்டம் : மே 22, 1712
    திருத்தந்தை பதினொன்றாம் கிளமென்ட்
   (Pope Clement XI)

நினைவுத் திருவிழா : மார்ச் 28

பாதுகாவல் :
  போலோக்னா (Bologna), சோதனைகளுக்கு எதிராக, கலைஞர்கள், உதாரண கலைகள்

புனிதர் கேதரின், இத்தாலி நாட்டின் "எளிய கிளாரா" சபையைச் சேர்ந்த அருட்கன்னியரும் (Italian Poor Clare nun), எழுத்தாளரும், ஆசிரியையும், கலைஞரும், ஆத்ம பலம் கொண்ட உள்ளுணர்வாளரும், புனிதருமாவார்.

வடக்கு இத்தாலியின் (Northern Italy) "எமிலியா ரோமாக்னா" (Emilia-Romagna Region) மாகாணத்தின் தலைநகரும், பெரிய நகருமான போலோக்னாவின் (Bologna) உயர்மட்ட குடும்பமொன்றினைச் சேர்ந்த கேதரினுடைய தந்தை, "பென்வெனுட்டா மம்மொலினி" (Benvenuta Mammolini) ஆவார். இவர், பத்திரங்களுக்குச் சட்டபூர்வ அங்கீகாரமளிக்கும் சான்று அலுவலர் (Notary) ஆவார். இவர், ஃபெர்ராரா மற்றும் மொடேனா" ஆகிய பெரு நிலங்களின் பிரபுவான (Duke of Ferrara and of Modena) "மூன்றாம் நிக்கோலோ டி எஸ்ட்" (Niccol III d'Este) என்பவருடைய அரசவையில் பணியாற்றியவருமாவார். கேத்தரினின் தாயார் "ஜியோவன்னி விக்ரி" (Giovanni Vigri) ஆவார். மூன்றாம் நிக்கொலோவின் அரண்மனையில் வளர்ந்த கேதரின், நிக்கொலோவின் மகளான "மார்கரிட்டாவின்" (Margherita) வாழ்நாள் சிநேகிதியானார். இக்காலகட்டத்தில், அங்கே எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்ட இவர், வரைதல், சங்கீதம், பாடுதல் மற்றும் சாத்தியமான வெளிச்சம் ஆகியவற்றை கற்றார்.

1426ம் ஆண்டு, மூன்றாம் நிக்கொலோவின் அரண்மனையை விட்டு வெளியேறிய கேதரின், உறுதிமொழி பிரமாணங்கள் எடுத்துக்கொள்ளாத, அகுஸ்தீனிய விதிகளை (Augustinian Rule) பின்பற்றும் ஒரு ஆன்மீக சமூகத்தில் இணைந்தார். 1431ம் வருடம், இச்சமூகத்தின் இல்லம், "கார்பஸ் டோமினியின் எளிய கிளாரா கான்வன்ட்" (Poor Clare convent of Corpus Domini) விதிமுறைகளை பின்பற்றும் அமைப்பாக மறு-சீரமைக்கப்பட்டது. 12 பெண்களுடன் தொடங்கப்பட்ட இவ்வமைப்பானது, நூற்றாண்டின் இறுதியில் 144 பெண்களின் அமைப்பாக வளர்ந்தது.

ஃபெர்ராராவிலுள்ள (Ferrara) "கார்பஸ் டோமினி" (Corpus Domini) இல்லத்திலேயே தங்கியிருந்த கேதரின், புதுமுக பயிற்சி துறவியரின் (Mistress of Novices) தலைவராகவும் இருந்தார். யாருமில்லாமலேயே ரொட்டி சுடப்படும் அற்புதத்தை அனுபவித்த கேதரின், பலமுறை கிறிஸ்து இயேசு, அன்னை மரியாள் மற்றும் தூய சூசையப்பர் ஆகியோரின் அற்புத தரிசனம் கிட்டும் பாக்கியம் பெற்றார். நடக்க இருக்கும் முக்கிய சம்பவங்களை முன்னறிவிக்கும் அற்புத சக்தியும் பெற்றிருந்தார். 1453ம் ஆண்டு, "கான்ஸ்டண்டிநோபில்" (Fall of Constantinople) வீழ்ச்சி, இவர் முன்னறிவித்ததேயாம்.

1456ம் ஆண்டு, ஃபிரான்சிஸ்கன் துறவியரும், போலோக்னா ஆளுநர்களும், போலோக்னாவில் "கார்பஸ் டோமினி" (Corpus Domini) எனும் பெயரில் புதிதாய் நிறுவப்படும் கான்வென்ட் பள்ளிக்கு தலைமைப் பொறுப்பேற்க வருமாறு கேதரினை அழைத்தனர். பன்னிரெண்டு பெண் துறவியருடன் ஃபெர்ராராவை (Ferrara) விட்டு கிளம்பிய கேதரின், தமது மரணம் வரை அங்கேயே இருந்தார். 1463ம் ஆண்டு, மார்ச் மாதம், ஒன்பதாம் நாளன்று அவர் மரித்தபோது, அவர் பள்ளியின் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டார். பதினெட்டு நாட்கள் கழித்து, ஒரு இனிமையான நறுமணம் கல்லறையில் இருந்து வெளிப்பட்டது. அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டபோது, அது கெட்டுப்போகாமல் இருந்தது. போலோக்னாவில் உள்ள எளிய கிளாராக்களின் (Chapel of the Poor Clares in Bologna) சிற்றாலயத்தில் மறு அடக்கம் செய்யப்பட்டது.

புனிதர் கேதரின் எழுதிய "ஆன்மீக யுத்தத்துக்கு அவசியமான ஏழு ஆன்மீக ஆயுதங்கள்" (Seven Spiritual Weapons Necessary for Spiritual Warfare) உள்ளிட்ட அநேகம் ஆன்மீக இலக்கியங்கள் இன்றளவும் நடைமுறையில் உள்ளன. இவர் எழுதிய 2000க்கும் மேற்பட்ட, பல புதிய இலக்கிய படைப்புகள் சமீப காலங்களில் கண்டுபிடிக்கப்பட்டு, இத்தாலிய மொழியில் அச்சிடப்பட்டு போலாக்னாவில் வெளியிடப்பட்டுள்ளன.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா