✠ புனிதர் பெர்தோல்ட் ✠(St. Berthold of
Calabria) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(மார்ச்/
Mars-
29) |
✠ புனிதர் பெர்தோல்ட் ✠(St.
Berthold of Calabria)
✠ துறவி :
(Hermit)
✠பிறப்பு : தெரியவில்லை
லிமோகெஸ், ஃபிரான்ஸ்
(Limoges, France)
✠இறப்பு : கி.பி. 1195
கார்மேல் மலை
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
✠நினைவுத் திருநாள் : மார்ச் 29
புனிதர் பெர்தோல்ட், ஒரு "நார்மன் ஃபிரெஞ்ச் சிலுவைப் போராளி"
(Norman French Crusader) ஆவார். இவர் கி.பி. 1185ம் ஆண்டு,
"கார்மேல் மலை'யில்" (Mount Carmel) ஒரு துறவியர் காலனியை (Hermit
Colony) நிறுவினார். சற்றேறக்குறைய பதினைந்தாம் நூற்றாண்டில்
"புனிதர் கார்மேல் மலையின் பெர்தோல்ட்" (Saint Berthold of
Mount Carmel) எனும் பெயருடன் "கார்மேல் இலக்கிய'த்திற்கு" (Carmelite
Literature) அறிமுகப்படுத்தப்பட்டார். இவர் "புனிதர்
ப்ரோகார்ட்" (Saint Brocard) என்பவருக்கு முன்னதாக கார்மேல் சபையின்
தலைவராக இருந்ததாக கூறப்படுகிறது.
பெர்தோல்ட், தென்மேற்கு ஃபிரான்ஸின் "மாலிஃபேய்"(Malifaye) எனும்
இடத்தில், "லிமொஜெஸ்"(Limoges) எனும் பிரபுக்கள் குடும்பத்தில்
பிறந்தவர்.
பெர்தோல்ட் உண்மையில் "கலாபிரியா" என்ற ஊரைச் சேர்ந்தவர் அல்லர்.
"கலாபிரியன்" (Calabrian) என்ற சொல், மேற்கத்திய நாடுகளில் பெயர்களின்
முன்னால் சேர்க்கப்படும் ஒரு சமகால அலங்கார சொற்றொடராகும்.
புனித பூமியின் "அந்தியோக்கு"(Antioch) நகரில் "சாராசென்ஸ்"
முற்றுகையின்போது (Siege by the Saracens) பெர்தோல்டு ஒரு
சிலுவைப் போராளியாக அங்கே சென்றார்.
இக்கால கட்டத்தில், இறைவன் இயேசு இவருக்கு திருக்காட்சி தந்து,
போர் வீரர்கள் தீய வழிகளில் செல்வதைக் கண்டித்தார். அக்காலத்தில்,
மேற்கேயிருந்து சிதறிய எண்ணற்ற துறவிகள் பாலஸ்தீனம் முழுதும்
பரவி இருந்தனர்.
1185ம் ஆண்டு, கார்மேல் மலை திரும்பிய பெர்தோல்ட், அங்கே சிறு
தேவாலயம் ஒன்றினைக் கட்டி எழுப்பினார். சிதறுண்ட துரவியர்க்காக
ஒரு சபையைத் தொடங்கினார். அதுவே பின்னாளில் கார்மேல் சபை என்று
அழைக்கப்பட்டது.
இவர் தன்னுடன் பல சகோதரர்களை இணைத்துக் கொண்டு, பல துறவற இல்லங்களை
கட்டினார்.
இவர் பலமுறை திருக்காட்சிகளை பெற்று தீர்க்கதரிசிகளைப் போல
வாழ்ந்தார். இவர் மிக அர்த்தமுள்ள வகையில் தனது துறவற வாழ்வை
வாழ்ந்தார். எப்போதும் இறைவனுடன் ஒன்றித்து செபித்தார். தனது
சபைத் தலைவருக்கு பலவிதங்களிலும் உடனிருந்து உதவினார். இவர்
இறந்தபிறகு இவரின் சபை எருசலேமிலும் பரவியது. தமது சபை பலவித
இன்னல்களை சந்திக்கும்போதெல்லாம் இவர், இறைவனின் அருளால் மிகத்
திறமையுடன் செயல்பட்டு தன் சபையை இக்கட்டுகளிலிருந்து
மீட்டார்.
தாம் நிறுவிய சபையை நாற்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக, தமது
மரணம் வரை தலைமைப் பொறுப்பேற்று நடத்திய இவர், 1195ம் ஆண்டு
மரணமடைந்தார்.
|
|
|