✠ புனிதர் ஆக்னெஸ் ✠ (St. Agnes of Bohemia) |
|
|
|
நினைவுத் திருநாள் :
மார்ச் 2 |
✠ புனிதர் ஆக்னெஸ் ✠ (St. Agnes of Bohemia)
*இளவரசி,
பரோபகாரி, மடாதிபதி :
(Princess, Philanthropist and Abbess)
*பிறப்பு : ஜூன் 20, 1211
ப்ராக், பொஹேமியா (Prague, Bohemia)
*இறப்பு : மார்ச் 2, 1282
ப்ராக், பொஹேமியா (Prague, Bohemia)
*ஏற்கும் சமயம் : ரோமன் கத்தோலிக்க
திருச்சபை
(புனித க்ளேர் சபை, செக் குடியரசு)
(Roman Catholic Church (Order of St. Clare and the Czech
Republic)
*முக்திபேறு பட்டம் : 1874
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் (Pope Pius IX)
*புனிதர் பட்டம் : நவம்பர் 12,
1989
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் (Pope John Paul II)
*முக்கிய திருத்தலம் :
புனிதர் ஆக்னெஸ் மடாலயம், ப்ராக், செக் குடியரசு
(Monastery of St. Agnes, Prague, Czech Republic)
*பாதுகாவல் : செக் குடியரசு (Czech
Republic)
புனிதர் ஆக்னெஸ், தொண்டு வாழ்க்கையில் தம்மை அர்ப்பணித்துக்கொண்ட
போஹெமியா நாட்டின் மத்தியகால இளவரசி (Medieval Bohemian
Princess) ஆவார். சொகுசான வாழ்க்கை வாழ்வதற்கான வசதிகள் இருந்தும்,
இவர் தமது பக்தி முயற்சியாகவும், அன்பின் வாழ்க்கைக்காகவும்,
தம்மைத்தாமே வருத்திக்கொண்டார். மரித்த உடனேயே வணக்கத்துக்கு
உரியவராக அறிவிக்கப்பட்டாலும், சுமார் எழுநூறு வருடங்கள்வரை
முக்திபேறு மற்றும் புனிதராக அருட்பொழிவு செய்யப்படாமலேயே இருந்தார்.
ஆக்னெஸ், போஹெமியா அரசர் "முதலாம் ஒட்டோகர்" (King Ottokar I
of Bohemia) மற்றும் அரசி "கான்ஸ்டன்ஸ்" (Queen Constance) ஆகியோரின்
மகள் ஆவார்.
ஆக்னெஸுக்கு எட்டு வயதாகையில், அவருக்கு தூய ரோமப் பேரரசர் (Holy
Roman Emperor) இரண்டாம் ஃபிரெடெரிக்கின் (Frederick II) மகனான
ஏழாம் ஹென்றி'யுடன் (Henry VII) மொழி
செய்ய நிச்சயம் நடந்தது.
ஹென்றிக்கு அப்போது பத்து வயதாகியிருந்தது. அவர் அப்போதுதான்
ஜெர்மனியின் அரசனாக (King of Germany) முடி சூடப்பட்டிருந்தார்.
அக்காலத்தைய பாரம்பரியங்களின்படி, மொழி
நிச்சயமான பெண் எதிர்கால
கணவரின் (Court) எனப்படும் அரண்மனையிலேயே தங்கவேண்டும். அதன்படி,
மொழி
நிச்சயமான ஆக்னெஸ், தமது எதிர்கால கணவரின் (Court)
எனப்படும் அரண்மனையிலே தங்கவேண்டும். ஆனால், பேரரசர்
ஃபிரெடெரிக்கின் (Court) "பலெர்மோ" (Palermo) நாட்டில் இருந்தது.
அவரது மகனான ஜெர்மனி நாட்டின் அரசன் ஹென்றி, "கொலோன்"
(Cologne) நகரிலிருந்த பேராயர் ஈஞ்சல்பெர்ட்'டின் (Archbishop
Engelbert) அரண்மனையில் தங்கியிருந்தார்.
ஆக்னெஸ் "பபென்பெர்க்" (Babenberg) நகரின் பிரபுவான "ஆறாம்
லியோபால்டி'ன் (Leopold VI) (Court)ல் தங்குவதற்கு அனுப்பப்பட்டார்.
"லியோபால்ட்," எப்படியாவது ஜெர்மனியின் அரசனான இளம் ஹென்றிக்கு
தமது மகளான "மார்கரெட்"டை மணமுடிக்க எண்ணினார். ஹென்றிக்கும்
ஆக்னெஸுக்குமான திருமண ஒப்பந்தம் ஆறு வருடங்களின் பிறகு முறிந்தது.
ஆக்னெஸின் தந்தை ஒட்டோகர், ஆக்னெசை இங்கிலாந்தின் மூன்றாம்
ஹென்றிக்கு (Henry III of England) மணமுடிக்க திட்டமிட்டார்.
ஆனால் ஆக்னெசை தாமே மொழி
செய்துகொள்ள நினைத்த பேரரசர் இரண்டாம்
ஃபிரெடெரிக் (Frederick II) அதனை முறியடித்தார். இதனால், ஆக்னெஸ்,
திருத்தந்தை ஒன்பதாம் கிரகொரியிடம் (Pope Gregory IX) உதவிக்காக
விண்ணப்பித்தார். திருத்தந்தை தமது நாவன்மையினால் பேரரசரிடம்
பேசி அதனை ஒரு முடிவுக்கு கொண்டுவந்தார்.
அதன் பின்னர் அரசியல் காரணங்களுக்காக ஏற்பாடு செய்யப்படும்
திருமணங்களை மறுத்த ஆக்னெஸ், தொண்டு வாழ்க்கையில் தம்மை அர்ப்பணித்துக்கொண்டார்.
மத காரியங்களிலும் செபங்களிலும் தொடர்ந்து ஈடுபாடு காட்டினார்.
தமது சகோதரர் தமக்கு தந்த நிலத்தில் ஏழை மக்களுக்காக
மருத்துவமனை (Hospital of St. Francis) ஒன்றினை கட்டினார்.
ஃபிரான்சிஸ்கன் துறவியருக்காக (Franciscan Friars) இரண்டு
துறவு மடங்களைக் கட்டினார்.
இதனிடையே "அசிசியின் கிளாரா" (Clare of Assisi) மற்றும் அவரது
"எளிய பெண்களின் சபை" (Order of Poor Ladies) ஆகியனபற்றி
கற்றறிந்த ஆக்னெஸ், "கிளாராவுடன்" கடித தொடர்பு கொண்டார்.
சுமார் இருபதாண்டுகள் நடந்த இந்த கடிதத் தொடர்பின் விளைவாக,
"கிளாரா" அசிசியிலுள்ள தமது துறவு மடத்திலிருந்து ஐந்து
அருட்சகோதரியினரை அனுப்பி வைத்தார். ஆக்னெஸ், அவர்களுடன்
இணைந்து புதியதொரு "எளிய பெண்களின் சபை" (Order of Poor
Ladies) கட்டினார்.
செபம், கீழ்படிதல், பணிவு, தம்மைத்தானே துன்புறுத்தல்
ஆகியவற்றினால் பிரசித்தி பெற்ற ஆக்னெஸ், திருத்தந்தையின்
வற்புறுத்தலால் அவர் நிறுவிய மடங்களின் தலைவியாக
பொறுப்பேற்றார். தாம் தலைவியெனினும், தம்மை ஒரு "மூத்த சகோதரி"
(Senior Sister) என்றே அழைக்க வேண்டினார். பிற
அருட்சகோதரிகளுக்காக உணவு சமைத்தல், தொழு நோயாளிகளின் ஆடைகள்
பொருந்தச்செய்தல் போன்ற பணிகளை அவரே செய்தார். பிற
துறவியரிடம் அன்பு காட்டிய ஆக்னெஸ், துறவு மடத்தின்
சட்டதிட்டங்களில் கண்டிப்பானவராக விளங்கினார். தமது சகோதரர்கள்
துறவற மடங்களுக்காக தந்த மானியங்களையும் வாங்க மறுத்தார்.
தமது வாழ்க்கையின் 45 ஆண்டு காலம் துறவு மடங்களில் செலவிட்ட
ஆக்னெஸ், 1282ம் ஆண்டு, மார்ச் மாதம், இரண்டாம் நாளன்று,
மரணமடைந்தார். |
|
|