Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ அருளாளர் ஜான் ✠(Blessed John of Parma)
   
நினைவுத் திருநாள் : மார்ச் 21
 ✠ அருளாளர் ஜான் ✠ (Blessed John of Parma)

*ஃபிரான்சிஸ்கன் சபையின் ஏழாவது தலைவர் :
(Seventh Minister General of Franciscan Order)

*பிறப்பு : கி.பி. 1209
பார்மா சமூகம், தூய ரோம அரசு
(Commune of Parma, Holy Roman Empire)

*இறப்பு : மார்ச் 19, 1289
கமரினோ, அன்கோனா, திருத்தந்தையர் மாநிலம்
(Camerino, March of Ancona, Papal States)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(இளம் துறவியர் சபை)
(Roman Catholic Church)
(Order of Friars Minor)

*முக்திபேறு பட்டம் : 1781
திருத்தந்தை ஆறாம் பயஸ்
(Pope Pius VI)

அருளாளர் ஜான், ஒரு இத்தாலிய ஃபிரான்சிஸ்கன் துறவியும் (Italian Franciscan Friar), ஃபிரான்சிஸ்கன் இளம் துறவியர் சபையின் ஏழாவது தலைமைப் பொறுப்பாளரும் ஆவார் (Ministers General of the Order of Friars Minor). புனிதர் அசிசியின் ஃபிரான்சிஸ் (Saint Francis of Assisi) மரித்ததன் பின்னர், ஃபிரான்சிஸ்கன் சபையின் (Franciscan Order) முன்னிருந்த எளிமையும், பணிவும் நிறைந்த நிலையினை திரும்ப கொண்டுவர அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைவரும் அறிந்ததே. இவர், தாம் வாழ்ந்த காலத்தின் குறிப்பிடத்தக்க இறையியலாளரும் (Theologian) ஆவார்.

சுமார் 1209ஆண்டு, வடக்கு இத்தாலியின் பிராந்தியமான "பார்மா" (Parma) நகரில் பிறந்த ஜான், அங்குள்ள புனித லாசரஸ் ஆலயத்தின் (Church of St. Lazarus at Parma) அருட்பணியாளரான தமது மாமனின் ஆதரவில் கல்வி கற்றார். கற்றலில் இவருக்கு இருந்த ஆர்வமும் வேகமும், இவர் விரைவிலேயே "தத்துவ ஞான சாஸ்திர"(Philosophy) ஆசிரியராக உதவின.

ஒரு கத்தோலிக்க குருவாக குருத்துவ அருட்பொழிவு செய்யப்பட்ட இவர், "பொலொக்னா"(University of Bologna) மற்றும் "நேப்ள்ஸ்"(University of Naples) சர்வகலாசாலைகளில் "தத்துவ ஞான சாஸ்திரம்"கற்பித்தார். இறுதியில், "பாரிஸ் பல்கலைகழகத்தில்"(University of Paris) "பீட்டர் லொம்பார்ட்"அவர்களின் வார்த்தைப் பாடுகளை (Sentences of Peter Lombard) கற்பித்தார்.

1245ம் ஆண்டு, திருத்தந்தை "நான்காம் இன்னொசென்ட்" (Pope Innocent IV) ஃபிரான்ஸ் (France) நாட்டின் லியோன்ஸ் (Lyons) நகரில் பொது மாநாடு ஒன்றினை கூட்டினார். அதில் பங்குபெற வேண்டிய, அப்போது தலைமைப் பொறுப்பிலிருந்த துறவி "க்ரெசென்ஷியஸ்" (Crescentius of Jesi) நோய்வாய்ப்பட்டிருந்த காரணத்தால் செல்ல இயலவில்லை. அவரது பிரதிநிதியாக செல்ல ஜான் நியமிக்கப்பட்டார். அம்மாநாட்டில், அங்கு கூடியிருந்த திருச்சபையின் அனைத்து தலைவர்களிலும் இவர் ஆழ்ந்த தாக்கத்தினை ஏற்படுத்தினார்.

இரண்டு வருடங்களின் பின்னர் ஃபிரான்சிஸ்கன் சபையின் தலைமைப் பொறுப்பிற்கு நடந்த தேர்தலில் தலைமை தாங்கிய அதே திருத்தந்தை "நான்காம் இன்னொசென்ட்" (Pope Innocent IV), இரண்டு வருடத்தின் முன்னர் நடந்த போது மாநாட்டின் நிகழ்வுகளை நினைவில் இருத்தி, துறவி ஜான் அந்த பதவிக்கும் பொறுப்பிற்கும் பொருத்தமானவர் என்று ஜானையே தேர்ந்தெடுத்தார்.

தலைமைப் பொறுப்பினை ஏற்ற ஜான், சபையின் அனைத்துப் பிரிவுகளுக்கும் நடை பயணமாகவே சென்றார். அவரது தாழ்ச்சி மற்றும் பணிவு காரணமாக பல மடங்களில் அவரை அங்குள்ள துறவியர் அடையாளம் காணவேயில்லை. ஓரிரு நாட்கள் அங்கே தங்கியிருந்து அங்குள்ள நடவடிக்கைகளை கண்காணிப்பார்.

ஜானுக்குப் பிறகு, புனிதர் "பொனவென்ச்சுரா" (Saint Bonaventure) சபையின் தலைமைப் பொறுப்பினை ஏற்றார். தமது இறுதி காலத்தில் குருத்துவப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர், "க்ரேஸ்ஸியோ"(Greccio) நகரில் உள்ள ஆசிரமத்தில் தமது ஜெப வாழ்வைத் தொடர்ந்தார். 1274ம் ஆண்டு, மரபுவழி (Orthodox) கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவ ஒற்றுமைக்கு எதிராக செயல்பட ஆரம்பித்த காரணத்தால், என்பது வயதான ஜான், தமது இறுதி சக்தி முழுவதையும் கிறிஸ்தவ ஒற்றுமைக்காக உழைக்க முடிவெடுத்தார். திருத்தந்தை "நான்காம் நிகோலஸ்" (Pope Nicolas IV) அவர்களின் அனுமதி பெற்று, கிரீஸ் (Greece) பயணமானார். ஆனால், அவரால் "கமேரினோ" (Camerino) வரை மட்டுமே பயணிக்க முடிந்தது. தீவிர நோய்வாய்ப்பட்ட அவர், அங்கேயுள்ள துறவிகள் மடத்தில், 1289ம் ஆண்டு, மார்ச் மாதம், 19ம் நாளன்றும், மரணமடைந்தார்.

ஜான், 1781ம் ஆண்டு, "திருத்தந்தை ஆறாம் பயஸ்"(Pope Pius VI) அவர்களால் அருளாளராக முக்திபேறு பட்டமளிக்கப்பட்டார்
.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா