Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ ரோச்செஸ்டர் நகர் புனிதர் வில்லியம் ✠(St. William of Rochester)
   
நினைவுத் திருநாள் : (மே / Mai- 23)

✠ ரோச்செஸ்டர் நகர் புனிதர் வில்லியம் ✠(St. William of Rochester)
மறைசாட்சி:  (Martyr)

பிறப்பு: கி.பி 12ம் நூற்றாண்டு
பெர்த், ஸ்காட்லாந்து
(Perth, Scotland)

இறப்பு: கி.பி 1201
ரோச்செஸ்டர், இங்கிலாந்து
(Rochester, England)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

புனிதர் பட்டம்: கி.பி 1256
திருத்தந்தை நான்காம் அலெக்சாண்டர்
(Pope Alexander IV)

நினைவுத் திருநாள்: மே 23

பாதுகாவல்: தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள்

ரோச்செஸ்டர் நகர் வில்லியம் (Saint William of Rochester) என்றும் அழைக்கப்படும் பெர்த் நகர் புனிதர் வில்லியம் (Saint William of Perth), இங்கிலாந்தில் மறைசாட்சியாக மறைந்த ஒரு ஸ்காட்டிஷ் துறவி ஆவார். அவர் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாவலர் ஆவார்.

அக்காலத்தில், ஸ்காட்லாந்து (Scotland) நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான பெர்த் (Perth) நகரில் பிறந்த இவர், இளமையில், ஓரளவு முரட்டுத்தனமாக இருந்தார். ஆனால், வளர வளர, அவர் கடவுளின் சேவைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். வர்த்தக ரீதியாக ஒரு ரொட்டி தயாரிக்கும் (Baker) தொழில் செய்து வந்த இவர், (சில ஆதாரங்கள் அவர் ஒரு மீனவர் என்று கூறுகிறார்கள்), தாம் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு பத்தாவது ரொட்டியையும் ஏழைகளுக்காக ஒதுக்குவது அவருக்குப் பழக்கமாக இருந்தது.

வில்லியம் தினம்தோறும் காலை திருப்பலி காண ஆலயம் செல்லும் வழக்கம் கொண்டிருந்தார். ஒரு நாள், வெளிச்சம் கூட சரியாக விடிகாலை வேளை, தேவாலயத்தின் வாசலில் ஒரு கைவிடப்பட்ட குழந்தையைக் கண்டு, அதனை தத்தெடுத்தார். குழந்தைக்கு டேவிட் எனும் பெயர் சூட்டிய அவர், தமது தொழிலான ரொட்டி தயாரிக்கும் பணியையும், வர்த்தகத்தை கற்பித்தார். சில காலத்தின் பின்னர், அவர் புனித திருத்தலங்களைப் பார்வையிட திட்டமிட்டார். மேலும், புனிதப்படுத்தப்பட்ட பணப்பையையும் (உண்டியல் பணம்), தமது வளர்ப்புப் பிள்ளையான டேவிட்டையும், ஊழியர்களையும் அழைத்துக்கொண்டு, திருயாத்திரை புறப்பட்டார்.

அவர்கள் ரோச்செஸ்டர் (Rochester) நகரில் மூன்று நாட்கள் தங்கியிருந்தனர். அடுத்த நாள் கேன்டர்பரி (Canterbury) நகருக்கு எண்ணினர். அங்கிருந்து ஜெருசலேம் (Jerusalem) நகருக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதற்கு பதிலாக, டேவிட் வேண்டுமென்றே தனது வரர்ப்புத் தந்தையை வேண்டுமென்றே ஒரு குறுக்கு வழியில் தவறாக வழிநடத்தினான். வழியில், அவர்கள் வழிச்செலவுக்கும், காணிக்கைகளுக்குமாக சேமித்து வைத்திருந்த உண்டியல் பணம் முழுதையும் கொள்ளையடித்தான். தமது வளர்ப்புத் தந்தையான வில்லியமை தலையில் அடித்து கீழே தரையில் வீழ்த்திய அவன், அவரது தொண்டையை அறுத்து அவரை கொலை செய்தான்.

அவரது உடல், மனநோயாளி பெண்மணி ஒருத்தியால் கண்டெடுக்கப்பட்டது. அப்பெண்மணி, "ஹனிசக்கிள்" (Honeysuckle) என்றழைக்கப்படும் மலர்களாலான ஒரு மலர்மாலை பின்னி, அதனை வில்லியமின் உடலின் தலையருகே வைத்தாள். (இந்த "ஹனிசக்கிள்" வகை மலர்கள், வட அமெரிக்கா (North America) மற்றும் யூரேசியா (Eurasia) நாடுகளில் காணப்படுகிறது.) ஒரு மலர்மாலையை தனது தலையிலும் சூடிக்கொண்டாள். அக்கணமே, அவளை பிடித்திருந்த மனநோய் அவளை விட்டகன்றது.

நடந்த சம்பவங்களை கேட்டறிந்த ரோச்செஸ்டர் நகர (Monks of Rochester) துறவிகள், வில்லியமின் உடலை ஆலயத்திற்கு கொண்டு சென்று அங்கேயே அடக்கம் செய்தனர். அவர் புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை சென்ற காலத்தில் மரித்ததாலும், மனநோயாளி பெண்மணி குணமான காரணத்தினாலும், அவர் மறைசாட்சியாக கௌரவிக்கப்பட்டார். மனநோயாளி பெண்மணி குணமான அதிசயத்தின் விளைவாகவும், அவரது மரணத்திற்குப் பிறகு அவரது பரிந்துரையில் செய்யப்பட்ட மற்ற அற்புதங்களின் விளைவாகவும், அவர் மக்களால் ஒரு புனிதர் என்று வணங்கப்பட்டார்.

ரோச்செஸ்டர் (Rochester) நகரில் இவரது பெயரில் அர்ப்பணிக்கப்பட்ட ஆலயமும் (The shrine of St William of Perth), இவரது பெயரால் நிறுவப்பட்ட தொடக்கப்பள்ளியும் (St William of Perth Primary School) உள்ளன.

 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா