Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் முதலாம் யோவான் ✠(St. John I)
  Limage contient peut-tre : 1 personne  
நினைவுத் திருநாள் : (மே/ May 18)
✠ புனிதர் முதலாம் யோவான் ✠(St. John I)

 *53ம் திருத்தந்தை, மறைசாட்சி :
(53rd Pope, Martyr)

*பிறப்பு : கி.பி. 470
துஸ்கானி, இத்தாலி
(Tuscany, Italy)

*இறப்பு : மே 18, 526
ரவென்னா
(Ravenna)

*ஏற்கும் சபை :
கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

*நினைவுத் திருவிழா : மே 18

திருத்தந்தை புனிதர் முதலாம் யோவான், கத்தோலிக்க திருச்சபையின் 53ம் திருத்தந்தையாக 523ம் ஆண்டு முதல் 526ம் ஆண்டு வரை ஆட்சி செய்தவர் ஆவார். சியன்னா நகரில் (Siena) பிறந்த இவர், திருத்தந்தையான போது மிகவும் நலிவுற்று இருந்தார்.

இவர் ஹார்மிஸ்தாஸ் (Hormisdas) என்ற திருத்தந்தைக்கு அடுத்தப்படியாக 523ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 13ம் நாள், திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கான்ஸ்டண்டினோபிள் (Constantinople) நகரில், தூதுவராக காலடி எடுத்து வைத்த முதல் திருத்தந்தை இவரேயாவார்.

இவர் திருத்தந்தையாக இருந்தபோது, ஆரிய மதத்தை சேர்ந்த சேர்ந்த அரசன் முதல் தியோடரிக் (Theoderich) ரோம் நகரை ஆட்சி செய்து வந்தான். அப்போது கான்ஸ்டாண்டினோபிளில் இருந்த மன்னர் ஜஸ்டினோஸ் (Justinos) அந்நகரிலிருந்த ஆரிய மதத்தை சார்ந்த முதலாம் ஜஸ்டினோஸ் என்பவரை கொடுமைப்படுத்துகிறான் என்பதைப்பற்றி கேள்விப்பட்டான். இதனால் மன்னர் ஜஸ்டினோஸிடம் இப்பிரச்சனைகளைப்பற்றி பேசவும், மீண்டும் சமாதானத்தை ஏற்படுத்தவும் வேண்டி, அரசர் தியோடரிக், திருத்தந்தையை தூதுவராக கான்ஸ்டாண்டினோபிளுக்கு அனுப்பி வைத்தான். திருத்தந்தையை அன்புடன் நடத்துமாறு அந்நாட்டு மன்னருக்கு தூதுவிட்டான்.

அப்போது திருத்தந்தை, மன்னர் ஜஸ்டினோஸிடம் மிகவும் அன்பாகவும், ஞானத்தோடும், பேசி எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்துவைத்து, நல்லதோர் உறவை ஏற்படுத்தி, சமாதான உடன்படிக்கை செய்து வைத்துவிட்டு, மீண்டும் திருத்தந்தை இத்தாலி நாட்டிற்கு திரும்பினார். நடந்தவைகள் அனைத்தையும் அரசர் தியோடரிடம் எடுத்து கூறினார் திருத்தந்தை.

திருத்தந்தை ரோம் திரும்பிய சில மாதங்களிலேயே கான்ஸ்டாண்டினோபிள் மன்னன், அவரை சந்தித்து பேச ரோம் வந்தான். இவர்கள் இருவருக்கும் நல்லதோர் உறவு ஏற்பட்டது. திருச்சபையையும், நாட்டையும் நல்வழியில் வழிநடத்த ஒருவர் மற்றவர்க்கு உதவி செய்தனர். இவர்களின் நல்லுறவை கண்ட அரசர் தியோடரிக், பொறாமை கொண்டு பயமுற்றான். அவர்கள் இவனுக்கெதிராக சதித்திட்டம் தீட்டுவதாக எண்ணினான். இதனால் தியோடரிக் ஆத்திரம்கொண்டு மன்னன் ஜஸ்டினின் ஆட்களில் ஒருவரான பொயித்தியஸ் (Poithias) என்பவரைக் கொன்றான். அதன்பின் திருச்சபைக்கெதிராக பல அநியாயங்களை செய்தான். பிறகு ரவென்னா நகரில் திருத்தந்தையைச் சிறையிலிட்டான். அங்கு அவர் சொல்லொண்ணாத் துயரங்களை அடைந்தார். கொடிய வேதனைக்குப்பின் உயிர்நீத்தார். அவர் இறந்த சில நாட்களுக்குப்பின் தியோடரிக்கும் இறந்தார். ஆனால் அவன் இறப்பதற்கு முன் தனக்குப்பிடித்த ஒருவரை திருத்தந்தையாக தேர்ந்தெடுத்துவிட்டு இறந்தார்.

இவரது மீபொருட்கள் பின்னர் ரோமில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
முதலாம் யோவான் (மே 18)

அதற்குப் பேதுருவும் திருத்தூதர்களும், "மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கு அல்லவா கீழ்படிய வேண்டும்" என்றார்கள். (திப 5: 29)

வாழ்க்கை வரலாறு

யோவான், தஸ்கனி என்னும் இடத்தில் பிறந்தார். இவர் வளர்ந்து இளைஞனானபோது திருத்தந்தை சிமாக்கூஸ் என்பவரிடத்தில் முதன்மைத் திருத்தொண்டராக பணி செய்து வந்தார். 523 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த ஹார்மித்தாஸ் என்பவர் இறந்தபிறகு, திருத்தந்தைக்கான போட்டி நடைபெற்றது. அதில் யோவான் ஏகமனதாக திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

யோவான் திருத்தந்தையாக உயர்ந்த பிறகு சந்தித்த முதல் சவால் ஆரியபதம் என்ற தப்பறைக் கொள்கைதான். இது இயேசுவின் இறைத்தன்மையை மறுத்து வந்தது. "தந்தைக் கடவுளும் இயேசுவும் ஒரே இயல்பை அல்ல, ஒத்த இயல்பைக் கொண்டிருக்கிறார்கள்" என்று இந்தத் தப்பறை கொள்கை சொல்லி வந்தது. இதனை கொன்ஸ்டண்டிநோபிளில் ஆயராக இருந்த ஜஸ்டின் என்பவர் மிகக் கடுமையாக எதிர்த்து வந்தார். இதைக் கேள்விப்பட்ட இத்தாலியில் அரசராக இருந்த தியோடரிக் என்ற மன்னன், திருத்தந்தையைக் கூப்பிட்டு, ஜஸ்டின் ஆரிய பதத்தைப் பின்பற்றுவோரை ஒடுக்குவதை நிறுத்தச் சொன்னார். திருத்தந்தை யோவானும் அரசன் சொன்னதைக் கேட்டு, கொன்ஸ்டண்டிநோபிளில் இருந்த ஜஸ்டினைச் சந்தித்து மன்னன் சொன்னதைச் சொன்னார். இதனால் ஆயர் ஜஸ்டின் ஆரியபதத்தைப் பின்பற்றுவோரை ஒடுக்குவதை ஓரளவுக்கு நிறுத்திக் கொண்டார்.

பிரச்சனையை ஓரளவுக்கு முடித்துவிட்டு, திருத்தந்தை யோவான் உரோமை நகருக்கு வந்தபோது, மன்னன் தியோடரிக்கோ திருத்தந்தை அவர்களும் ஆயர் ஜஸ்டினும் தனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுகிறார்கள் எனத் தவறாகப் புரிந்துகொண்டு அவரை சிறையில் அடைத்து பலவாறாகச் சித்ரவதை செய்தான். அத்தகைய தருணங்களில் திருத்தந்தை அவர்கள் மனந்தளராமல், அதே நேரத்தில் அவன் சொன்னதைக் கேட்டு நடக்காமல், இறைவனுக்கு மட்டுமே கீழ்ப்படிந்து வாழ்ந்து வந்தார். இதனால் அவர் 526 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய முதலாம் யோவானின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

இறைவனுக்குக் மட்டுமே கீழ்ப்படிந்து நடத்தல்

தூய முதலாம் யோவானின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பாரக்கும்போது அவர் அரசனுக்கு அல்ல, இறைவனுக்கு மட்டுமே கீழ்ப்படிந்து நடந்தார் என்பதை அறிந்துகொள்ளலாம். அரசன் அவரை எவ்வளவோ தனக்கு இணங்க வைக்க முயன்றபோதும் அவர் ஆண்டவர் ஒருவருக்கு மட்டுமே கீழ்ப்படிந்து நடந்தது நம்முடைய சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. தூய முதலாம் யோவானின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று இறைவனுக்கு கீழ்ப்படிந்து நடக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள்வேண்டி விளம்பரம் செயதிருந்தார். விளம்பரத்தை பார்த்துவிட்டு இளைஞர்கள் பலர் வந்தனர். இரண்டு நாட்கள் அவர் சொன்ன வேலையை செய்தனர். மறுநாளோ ஆட்கள் வருவதை நிறுத்தி கொண்டனர். இறுதியில் ஒரு வாலிபன் மட்டும் வேலைக்கு வந்தான் அவனிடம் அந்த செல்வந்தர் அங்கு கிடந்த ஜல்லிக்கற்களை எடுத்து சற்று தொலைவில் போய் கொட்ட சொன்னார். மறுநாள் அதை அள்ளி ஏற்கனவே இருந்த இடத்திற்கு வந்து போட சொன்னார். அவ்வாறு ஒரு வாரம் முழுவதும் நடைபெற்றது. ஞாயிறு உனக்கு விடுமுறை என்றார். ஒரு வாரத்திற்கான கூலியையும் கையில் கொடுத்தார்.
.
திங்கட்கிழமை அவர் சற்றும் அந்த வாலிபனை எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் அவ்வாலிபனோ திங்கட்கிழமை காலை, சொன்ன நேரத்திற்கு வேலைக்கு வந்து நின்றான். ஏன் எதற்கு என்று எந்த கேள்வியுமின்றி எஜமானின் கட்டளைக்கு அப்படியே உண்மையாய் கீழ்ப்படிந்த வாலிபனுக்கு அவன் படிப்பிற்கும் திறமைக்கும் ஏற்ற உயர்ந்த வேலையை கொடுத்தார். பல இலட்ச ரூபாய் கணக்கு வழக்குகளை பார்க்கவும், முக்கியமான பொறுப்புகளை அவனிடம் கொடுத்து இரகசியம் காக்கவும அவனை நியமித்தார். அதனால் அவன் உயிருள்ள வரை அவருடைய குடும்பத்தாருக்கு மெய்காப்பாளானாக இருந்தான்.

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் வாலிபன் தன் எஜமானன் என்ன சொன்னாரோ அதற்கு அப்படியே கீழ்படிந்து நடந்தான். அதனால் அவன் தன் வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைந்தான். நாமும் இறைவனுக்கு எப்போதும் கீழ்படிந்து நடக்கின்றபோது வாழ்வில் உயர்வது உறுதி.

ஆகவே, தூய முதலாம் யோவானின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று, இறைவனுக்கு மட்டும் கீழ்படிந்து நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


- மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா