Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் கொத்தார்ட் ✠(St. Gotthard of Hildesheim)
   
நினைவுத் திருநாள்: (மே/ May 05)
✠ புனிதர் கொத்தார்ட் ✠(St. Gotthard of Hildesheim)

* ஹில்டஷீம் ஆயர் : (Bishop of Hildesheim)

*பிறப்பு : கி.பி. 960
ரைச்சர்டோர்ஃப், பவேரியா
(Reicherdorf, Bavaria)

*இறப்பு : மே 5, 1038

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

*புனிதர் பட்டம்: கி.பி. 1131
திருத்தந்தை இரண்டாம் இன்னொசென்ட்
(Pope Innocent II)

*நினைவுத் திருநாள் : மே 05

*பாதுகாவல் :
பயணம் செய்யும் வியாபாரிகள், காய்ச்சல், வீக்கம், குழந்தைப் பருவ நோய்கள், பெருங்கல் மழை, பிரசவ வேதனை, கீல்வாதம், கடல் ஆபத்துகள்.

புனிதர் கொத்தார்ட், ஓர் "ஆங்கிலோ-ஜெர்மன் ஆயர்" (Anglo-German Bishop) ஆவார்.

இவரது தந்தை "ராட்மன்ட்" (Ratmund) ஒரு ஏழை பண்ணைத் தொழிலாளி ஆவார். இவர் மனிதநேயம் மற்றும் இறையியல் கற்றார்.

"சல்ஸ்பர்க்" (Salzburg) உயர்மறை மாவட்ட இல்லத்திலேயே தங்கிய கொத்தார்ட், திருச்சபை நிர்வாகியாக பணியாற்றினார். இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பயணித்த பின்னர், "பஸ்ஸாவு" (Passau) எனும் இடத்திலுள்ள பேராலய பள்ளியில் தமது மேல்படிப்பை நிறைவு செய்தார்.

மத கூட்டங்கள் மற்றும் சந்திப்புகளுக்காக உபயோகப்படுத்தப்பட்ட கட்டிடங்களை பவரியா அரசன் இரண்டாம் ஹென்றி (Henry II of Bavaria) பெனடிக்டைன் மடமாக (Benedictine monastery) மாற்றியபோது, கொத்தார்ட் அங்கே புகுநிலை துறவியாக இருந்தார். கி.பி. 993ம் ஆண்டு, குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்டார். கி.பி. 996ம் ஆண்டு, மடாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட கொத்தார்ட், "குளுனியா சீர்திருத்தம்" (Cluniac reform) எனும் சீர்திருத்தத்தை தமது மடத்தில் அறிமுகப்படுத்தினார்.

1022ம் ஆண்டு, டிசம்பர் மாதம், இரண்டாம் நாளன்று, "ஹில்டஷீம்" மறைமாவட்ட ஆயராக (Bishop of Hildesheim) "மெய்ன்ஸ்" (Mainz) உயர்மறைமாவட்ட பேராயர் (Archbishop) "அரிபோவால்" (Aribo) திருநிலைபடுத்தப்பட்டார். ஆயராக தமது பதினைந்து வருட கால ஆட்சியில், முப்பதுக்கும் மேற்பட்ட ஆலயங்களை கட்டினார். தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட இவர் தமது 78 வயதில், 1038ம் ஆண்டு, மே மாதம், நான்காம் நாளன்று, மரித்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா