✠ புனிதர் ஃபெலிக்ஸ் ✠(St.
Felix of Cantalice) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(மே/ May 18) |
✠ புனிதர் ஃபெலிக்ஸ் ✠(St.
Felix of Cantalice)
*கப்புச்சின் துறவி :
(Capuchin Friar)
*பிறப்பு : மே 18, 1515
கேன்டலிஸ், இத்தாலி
(Cantalice, Italy)
*இறப்பு : மே 18, 1587
ரோம், இத்தாலி
(Rome, Italy)
*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
*அருளாளர் பட்டம் : அக்டோபர்
1, 1625
திருத்தந்தை எட்டாம் அர்பன்
(Pope Urban VIII)
*புனிதர் பட்டம் : 1712
திருத்தந்தை பதினொன்றாம் கிளமென்ட்
(Pope Clement XI)
*நினைவுத் திருவிழா : மே
18
*சித்தரிக்கப்படும் வகை :
கப்புச்சின் திருவுடையில்
குழந்தை இயேசுவை கரங்களில் தாங்கி
*பாதுகாவல் :
ஸ்பெல்லோ நகர் (Spello)
புனிதர் ஃபெலிக்ஸ், மத்திய இத்தாலி நாட்டின் "லாஸியோ" (Lazio)
பிராந்தியத்தின், "கேன்டலிஸ்" (Cantalice) என்ற நகரில் 1515ம்
ஆண்டு, ஒரு விவசாய கூலி குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். "ஸன்ட்டி"
மற்றும் "ஸன்ட்டா பொர்ரி" (Santi and Santa Porri) ஆகிய
பெற்றோரின் நான்கு ஆண் மகவுகளில் மூன்றாவதாகப் பிறந்தவர்.
வறுமையின் காரணமாக "சிட்டாடுகேல்" (Cittducale) நகருக்கு அருகிலுள்ள
ஒரு பண்ணை வீட்டில் தமது பத்து வயதிலிருந்தே கால்நடைகளை மேய்ப்பவராகவும்
பண்ணைப் பணியாளாகவும் வேலை செய்தார். தமது பணி நேரத்தின்போது
செபிக்க கற்றுக்கொண்ட ஃபெலிக்ஸ், அங்கு வரும் கப்புச்சின் சபை
துறவிகளின் வாழ்வால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தமது 28 வயது
வரை அதே கால்நடைகளை மேய்க்கும் மற்றும் பண்ணைப்பணிகளைச் செய்துவந்தார்.
1543ம் ஆண்டு, இலையுதிர் காலம் முடிவடையும் சமயத்தில் புதிதாக
தொடங்கப்பட்டிருந்த கப்புச்சின் துறவு இல்லத்தில் "பொதுநிலை சகோதரராக"
(Lay Brother) இணைந்தார். எழுத படிக்க தெரியாத ஃபெலிக்ஸ், செபங்களை
மனப்பாடம் செய்துகொண்டு செபத்தில் தன்னை இணைத்து இறைமனிதனாக
வாழ்ந்தார். 1547ம் ஆண்டு, ரோம் நகருக்கு அனுப்பப்பட்ட
ஃபெலிக்ஸ், தமது வாழ்வின் மீதமுள்ள சுமார் நாற்பது வருட காலத்தை
அங்கேயே கப்புச்சின் துரவியரின் உணவு மற்றும் இதர தேவைகளுக்காக
யாசகம் செய்து கழித்தார். யாசகத்திற்காக செல்லும் இவர் காலணிகள்
அணிவதில்லை. மாறாக, தமது தோள்களில் ஒரு பெரிய சாக்குப் பையை சுமது
செல்வார்.
இந்த எளிய துறவியின் வாழ்வில் புனிதம் நிறைந்து கிடப்பதைக் கண்ட
மக்கள், இவரின் செபங்களுக்காக, ஆசீர்க்காக ஓவ்வொரு நாளும்
காத்துக்கிடந்தனர்.
இவர் தனது இனிய குரலால் பாடி சிறுவர் சிறுமிகளை தன்பால் ஈர்த்து
அவர்களுக்கு ஞான அறிவை ஊட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
படிப்பறிவு இல்லாத ஃபெலிக்ஸ் தனது இறை ஞானத்தால் பெரும் அறிஞராக
திகழ்ந்தார்.
பலவிதமான மக்களின் பிரச்சனைகளுக்கு சாதுரியமான முடிவை அள்ளித்தந்து
ரோம் நகர தெருக்களின் ஞானி எனப் போற்றப்பட்டார்.
ஒளிவு மறைவின்றி பேசும் வழக்கமுள்ள சகோதரர் ஃபெலிக்ஸ், புனிதர்
சார்லஸ் போரோமியோ (Charles Borromeo), புனிதர் பிலிப் நேரி
(St. Philip Neri) மற்றும் சில கர்தினால்களின் அறிமுகமானதுடன்
நண்பராகவும் ஆனார்.
புனிதர் பதுவை அந்தோணியாரைப் போல, இவரும் குழந்தை இயேசுவை கரத்தில்
ஏந்துவதைப் போன்று ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டிருந்தார். ஒருமுறை
இவருக்கு காட்சியளித்த இறை அன்னை அதிதூய கன்னி மரியாள் இவரது
கைகளில் குழந்தை இயேசுவை தந்தார் என்பர்.
சகோதரர் ஃபெலிக்ஸ் 1587ம் ஆண்டு, தமது 72 வயதான பிறந்த தினத்தன்றே
தமது இவ்வுலக வாழ்வை விட்டு அகன்றார்.
ஃபிரான்சிஸ்கன் சபையின் ஒரு கிளையாக 1528ம் ஆண்டு, அங்கீகரிக்கப்பட்ட
கப்புச்சின் சபையின் முதல் புனிதராக 1712ம் ஆண்டு, சகோதரர்
ஃபெலிக்ஸ் உயர்த்தப்பட்டார். |
|
|