✠ புனிதர் அகஸ்டின் ✠(St. Augustine of
Canterbury) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(மே/ May 27) |
✠ புனிதர் அகஸ்டின் ✠(St. Augustine of
Canterbury)
* காண்டர்பரி பேராயர் :
(Archbishop of Canterbury)
*பிறப்பு : ஆறாம் நூற்றாண்டு
இத்தாலி (Italy)
*இறப்பு : மே 26, 604
காண்டர்பரி, கென்ட், இங்கிலாந்து
(Canterbury, Kent, England)
*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் திருச்சபை
(Anglican Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
*நினைவுத் திருநாள் : மே 27
புனிதர் அகஸ்டின் ஒரு
"பெனடிக்டைன்" சபைத் (Benedictine monk)
துறவி ஆவார். இவர், கி.பி. 597ம் ஆண்டு, காண்டர்பரி உயர்மறை மாவட்டத்தின்
முதல் பேராயர் (Archbishop of Canterbury) ஆனார். இவர் ஆங்கிலேயர்களின்
அப்போஸ்தலர் (Apostle to the English) என்றும், ஆங்கிலத்
திருச்சபையை தோற்றுவித்தவர் (Founder of the English Church)
என்றும் கருதப்படுகின்றார்.
அகஸ்டின் இங்கிலாந்து நாட்டின் பாதுகாவலர் ஆவார். 596ம் ஆண்டு,
ரோம் நகரின் துறவு மடத்திலிருந்து, இவரது தலைமையில் திருத்தந்தை
பெரிய கிரகோரியார் (Pope Gregory the Great) 40 துறவிகளை இங்கிலாந்து
நாட்டின் "ஆங்கிலோ-சாக்ஸன்" (Anglo-Saxons) பிரஜைகளை கிறிஸ்தவத்திற்கு
மனம் மாற்றுவதற்காக மறைபரப்பு பணிக்காக அனுப்பிவைத்தார்.
மிகவும் கடினமாகப் பயணித்து "கௌல்" (Gaul) சென்றடைந்த அவர்கள்,
"ஆங்கிலோ-சாக்ஸன்" (Anglo-Saxons) மக்களின் முரட்டுத்தனம் பற்றிய
கதைகள் அவர்களை பயமுறுத்தின. "ஆங்கிலேய கால்வாயை" (English
Channel) தாண்டிச் செல்வதும் அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை.
திருத்தந்தையின் அறிவுறுத்தல்களை அறிந்துகொள்வதற்காக, அகஸ்டின்
ரோம் நகருக்கு திரும்பிச் சென்றார். தங்களுக்கு மறைபோதக பணியை
ஆற்றுவதற்கு 'சாக்சென்' மொழி தெரியாதென்பதையும் சுட்டிக்காட்டினர்.
இதனால் இங்கிலாந்தில் மறைபரப்பு பணி செய்ய வேண்டாமென்றும்
தெளிவுப்படுத்தி சொன்னார்கள்.
வதந்திகளையும் பயமுறுத்தல்களையும் கண்டு அஞ்சவேண்டாம் என அறிவுறுத்திய
திருத்தந்தை, இறைவனில் முழு நம்பிக்கைகொள்ளுமாறும், தியாகங்கள்
செய்யுமாறும், என்ன நடந்தாலும் அவற்றை இறைவன் கொடுத்த கொடை என்று
ஏற்றுக் கொள்ளுமாறும் அறிவுரை கூறி அனுப்பினார். திருத்தந்தை
கொடுத்த அறிவுரையின்படி, அவர்கள் தைரியம் கொண்டு, மறைபோதக பணியை
செய்யத் தயாரானார்கள்.
இம்முறை "ஆங்கிலேய கால்வாயை" (English Channel) கடந்த அவர்கள்,
கென்ட் பிரதேசத்தில் (Territory of Kent) இறங்கினார்கள்.
கென்ட் (Kent) பிரதேசம், "பாகனிய" (Pagan) மதத்தைச் சேர்ந்த
அரசன் "ஈதல்பெர்ட்" (King Ethelbert) என்பவனின் ஆட்சியின் கீழ்
இருந்தது. அவனது மனைவி, கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த பெண்ணாவார்.
அவரது பெயர், "பெர்தா" (Bertha) ஆகும். அவர்களை அன்புடன் வரவேற்ற
அரசன் "ஈதல்பெர்ட்" (King Ethelbert) காண்டர்பரி (Canterbury)
நகரில் அவர்கள் தங்குவதற்கான வசதிகளையும் செய்து கொடுத்தான்.
ஒரு வருட காலத்திலேயே, (597ம் ஆண்டு) தூய ஆவியின் திருநாளன்று
(Pentecost Sunday) அரசன் "ஈதல்பெர்ட்" திருமுழுக்கு பெற்று
கிறிஸ்தவனாக மெய்மறையில் மனம் மாறினான். அங்கிருந்தோரும், அரசனுடன்
இருந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கிறிஸ்து பிறப்பு விழாவன்று
மனம்திரும்பி புதிதாய் திருமுழுக்கு பெற்றனர்.
ஃபிரான்ஸ் (France) நாட்டில் ஆயர் ஒருவருக்கு அருட்பொழிவு
செய்வித்துவிட்டு காண்டர்பரி (Canterbury) திரும்பிய அகஸ்டின்,
1070ம் ஆண்டு, புதிதாய் தொடங்கப்பட்ட பேராலயத்தின் அருகே, அப்போதைய
ஆலயம் ஒன்றையும், துறவு மடம் ஒன்றினையும் கட்டினார்.
மக்களிடையே கிறிஸ்தவ விசுவாசம் அதிசயிக்கத்தக்க வகையில் பரவியது.
ஆகவே, "லண்டன் மற்றும் ரோச்செஸ்டர்" (London and Rochester) ஆகிய
இடங்களிலும் புதிய மறை மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
அதேபோல, அகஸ்டினின் பணிகள் சில நேரம் மெதுவாக ஊர்ந்தன. அதேபோல,
அவர் எப்போதுமே வெற்றியையே சந்திக்கவுமில்லை. ஒரு காலத்தில்,
ஆங்கிலோ-சாக்சன் படையெடுப்பாளர்களால் மேற்கத்திய இங்கிலாந்து
(Western England) நோக்கி விரட்டப்பட்ட அசல் பிரிட்டன் கிறிஸ்தவர்கள்
(Original Briton Christians) ஆகிய இரு பிரிவினரையும் சமாதானப்படுத்த
முயன்ற இவரது பிரயத்தனங்கள் மோசமான தோல்வியைச் சந்தித்தன.
சில செல்டிக் பழக்கங்களை (Celtic customs) கைவிடுமாறும், ரோம்
நகருடனான வேறுபாடுகளை களையவும், பழைய கசப்பான அனுபவங்களை மறக்கவும்,
பிரிட்டன் கிறிஸ்தவர்களை சமாதானப்படுத்த முயன்ற அவரது முயற்சிகள்
அனைத்தும் வீணாயின.
பொறுமையாக போராடியதாலும், கடின உழைப்பாலும், மிஷனரி கொள்கைகளை
ஞானமுடன் செவிமடுத்ததாலும், திருத்தந்தை கிரகோரி அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட
சில மாற்று நடவடிக்கைகளாலும், குறிப்பாக - பாகன் ஆலயங்களையும்
அவர்களது சடங்குகளையும் இடிப்பதைத் தவிர்த்து அவற்றை கிறிஸ்தவ
ஆலயங்களாக மாற்றவும், பாகனிய விழாக்களை நிறுத்துவதை விடுத்து,
அவற்றை கிறிஸ்தவ விழாக்களாக கொண்டாடவும் ஆரம்பித்தனர். இதன் காரணங்களால்,
இங்கிலாந்து வந்து குறுகிய எட்டு வருடங்களிலேயே சிறிதளவேயானாலும்
பெரும் வெற்றியை அடைந்தார். ஆகவே, அவரை இங்கிலாந்தின் அப்போஸ்தலர்
என அழைப்பது சாலச் சிறந்ததுவேயாகும்.
கி.பி. 604ம் ஆண்டு மரித்த அகஸ்டின்,
"காண்டர்பரியிலுள்ள"
புனித அகஸ்டின் துறவு மடத்தில் (St Augustine's Abbey,
Canterbury) அடக்கம் செய்யப்பட்டார்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கண்டற்பெரி நகர தூய அகஸ்டின் (மே 27)
இயேசு அவர்களை நோக்கி, "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம்
நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப்
பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத்
தீர்ப்புப் பெறுவர். நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச்
செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப்
பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக்
குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல்
நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்" என்று
கூறினார். (மாற் 16:15 - 18)
வாழ்க்கை வரலாறு
இன்று நாம் நினைவுகூறும் தூய அகஸ்டின் பிறந்து வளர்ந்தது எல்லாம்
உரோமையில்தான். இவர் எப்போது பிறந்தார், இவருடைய குழந்தைப் பருவம்
எப்படி இருந்தது என்பது பற்றிய தகவல்கள் நமக்குக் கிடைக்கவில்லை.
ஆனால் இவர் ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்தார் என மிக உறுதியாகச்
சொல்லலாம்.
இவர் உரோமையில் உள்ள தூய ஆன்ட்ரு துறவுமடத்தில் தலைவராக இருந்து
பணிகளைச் செய்துகொண்டிருந்த தருணத்தில், திருத்தந்தை முதலாம்
கிரகோரியார் இவரை அழைத்து, "நீங்கள் இங்கிலாந்து சென்று நற்செய்திப்
பணியாற்ற வேண்டும்" என்று கேட்டார். தொடக்கத்தில் திருத்தந்தை
சொன்னதற்கு மறுப்புச் சொன்ன, அகஸ்டின் அதன்பின் அதனை இறைத்
திருவுளமாக நினைத்துக்கொண்டு நாற்பதுக்கும் மேற்பட்ட அருட்பணியாளர்களை
தன்னோடு சேர்த்துக்கொண்டு இங்கிலாந்து நாட்டிற்கு நற்செய்தி அறிவிக்கச்
சென்றார்.
அவர் சென்ற நேரம் கெண்டில் எதல்பர்ட் அரசராக இருந்தார். அவரிடத்தில்
சென்ற அகஸ்டின் தான் வந்ததன் நோக்கத்தை எடுத்துச் சொன்னார். தொடக்கத்தில்
தயங்கிய அரசர், அரசியின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க அகஸ்டினையும்
அவரோடு வந்த அருட்பணியாளர்களையும் நற்செய்தி அறிவிக்க
முழுமையான சம்மதத்தைத் தெரிவித்தார். இதனால் அகஸ்டின் தன்னோடு
வந்த அருட்பணியாளர்களின் உதவியோடு இங்கிலாந்து நாடு முழுக்க நற்செய்தி
அறிவிக்கத் தொடங்கினார். அவர் அறிவித்த நற்செய்தியினால் அரசர்
உட்பட ஏராளமான பேர் மனமாற்றம் அடைந்தார்கள். அரசரும் தாமாகவே
முன்வந்து ஓர் ஆலயத்தை திருச்சபைக்காகத் தந்தார்.
அகஸ்டின் இங்கிலாந்து நாட்டில் நற்செய்தி அறிவித்த சமயங்களில்
நிறைய பிறமதக் கோவில்களை அர்ச்சித்து கிறிஸ்தவக் கோவில்களாக
மாற்றினார். பலரை கிறிஸ்தவ மதத்தில் இணைக்க அரும்பாடு பட்டார்.
அவருடைய அயராத உழைப்பு வீண்போகவில்லை. ஏராளமான பேர் கிறிஸ்தவத்தை
தழுவினார்கள். இதற்கிடையில் அவர் கண்டர்பெறி ஆயராகவும் உயர்த்தப்பட்டார்.
இப்படி இங்கிலாந்து மக்களுக்கு நற்செய்தி அறிவிக்க தன் உடல்
பொருள் ஆவி அத்தனையயும் கொடுத்த அகஸ்டின் 604 ஆம் ஆண்டு இறையடி
சேர்ந்தார். இவர் "இங்கிலாந்து நாட்டின் பாதுகாவலர்" எனவும் அழைக்கப்படுகின்றார்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய அகஸ்டினின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து
என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து
நிறைவு செய்வோம்.
1. நற்செய்தி அறிவிப்பதில் ஆர்வம்
தூய அகஸ்டினிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான
பாடம், நாம் அனைவரும் நற்செய்தி அறிவிப்பில் ஆர்வமுள்ளவர்களாக
இருக்கவேண்டும் என்பதுதான்.
தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய மடலில் கூறுவார், "நற்செய்தி
அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு" என்று. ஆம், நற்செய்தி அறிவிப்பது
நம் ஒவ்வொரின் கடமை, அந்தக் கடமையை நாம் நிறைவேற்றவில்லையென்றால்
அது நமக்குக் கேடுதான்.
இன்றைக்குப் பலர் தங்களுடைய வாழ்க்கையை ஏனோதானோ என்று வாழ்ந்து
கொண்டிருக்கின்றார்கள். கிறிஸ்துவின் போதனையின் மீதும், அவர்
நமக்கு விடுத்த அழைப்பான, "உலகெங்கும் சென்று
படைப்பிற்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கவேண்டும் என்பதின்
மீதும் ஆர்வமில்லாமல் இருக்கின்றார்கள். அன்றைக்கு எத்தனையோ
புனிதர்கள், மறைசாட்சிகள் கடல்கடந்து வந்து, ஆண்டவர் இயேசுவின்
நற்செய்தியை நம் முன்னோர்களுகுக் அறிவித்தார்கள். அதனாலேயே
நாம் கிறிஸ்தவர்களாக, நம்முடைய வாழ்க்கையில் பல படி உயர்ந்து
வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதற்கு நன்றிக் கடனாக நாம்
கிறிஸ்தவை அறியாத மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அப்போதுதான்
நமது கிறிஸ்தவ வாழ்வானது முழுமை பெறும். இல்லையென்றால் நாம்
நன்றி மறந்தவர்கள் என்றே அழைக்கப்படுவார்கள் ஆவோம்.
ஆகவே, தூய அகஸ்டினின் நினைவு நாளில் அவரைப் போன்று மிக
ஆர்வத்தோடு அதே நேரத்தில் மனவுறுதியோடு ஆண்டவரின் நற்செய்தி
அறிவிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
|
|
|