Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் அத்தனாசியஸ் ✠(St. Athanasius of Alexandria )
   
நினைவுத் திருநாள் : (மே/ Mai 02)
✠ புனிதர் அத்தனாசியஸ் ✠(St. Athanasius of Alexandria )

* ஆயர், மறைவல்லுநர் :
(Bishop, Doctor of the Church)

*பிறப்பு : சுமார் கி.பி. 296-298
அலெக்சாந்திரியா, எகிப்து
(Alexandria, Egypt)

*இறப்பு : மே 2, 373 (வயது 7577)
அலெக்சாந்திரியா, எகிப்து
(Alexandria, Egypt)

*ஏற்கும் சமயம் :
கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholicism)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodoxy)
லூதரனியம்
(Lutheranism)
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
(Anglican Communion)
ஓரியண்ட்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodoxy)

*முக்கிய திருத்தலங்கள் :
புனித மாற்கு காப்டிக் மரபுவழி திருச்சபையின் முதன்மைப்பேராலயம், கெய்ரோ, எகிப்து
(Saint Mark Coptic Orthodox Cathedral in Cairo, Egypt)

*நினைவுத் திருவிழா :
2 மே (மேற்கத்திய கிறிஸ்தவம்)
18 ஜனவரி (கிழக்கு மரபுவழி திருச்சபை)

புனிதர் அத்தனாசியஸ், கி.பி. 328ம் ஆண்டு, ஜூன் மாதம், 8ம் தேதி முதல், கி.பி. 373ம் ஆண்டு, மே மாதம், 2ம் நாள்வரை மொத்தம் 45 ஆண்டுகள் அலெக்சாந்திரியா நகரின் 20ம் ஆயராக இருந்தவர் ஆவார். இவரின் பணிக்காலத்தில் மொத்தம் 17 ஆண்டுகள் நான்கு வெவ்வேறு ரோம அரசர்களால் ஐந்து முறை நாடு கடத்தப்பட்டார். இவர் ஒரு சிறந்த இறையியலாளரும், திருச்சபைத் தந்தையர்களுல் ஒருவரும், ஆரியனிய தப்பரைக்கெதிரான திரித்துவம் குறித்த வாதவல்லுநரும், நான்காம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க எகிப்திய தலைவரும் ஆவார்.

அத்தனாசியஸ் கிழக்கின் நான்கு மிகப்பெரும் திருச்சபையின் மறைவல்லுநர்களுல் ஒருவராக கத்தோலிக்க திருச்சபையினால் மதிக்கப்படுகின்றார். கிழக்கு மரபுவழி திருச்சபையில் இவர்,"மரபுகளின் தந்தை" (Father of Orthodoxy) என புகழப்படுகின்றார். சீர்திருத்தத் திருச்சபையினர் பலரும் இவரை விவிலியத் திருமுறையின் தந்தை என புகழ்ந்துள்ளனர். மேற்கத்திய கிறிஸ்தவத்தில் இவரின் நினைவுத் திருவிழா நாள் 2 மே ஆகும், கிழக்கத்திய கிறிஸ்தவத்தில் 18 ஜனவரி ஆகும்.

அலெக்சாந்திரியா நகரில் வசித்த கிறிஸ்தவர்களில் மிகவும் பக்தியான கிறிஸ்தவ பெற்றோர்க்கு மகனாக அத்தனாசியஸ் பிறந்தார். கிரேக்க பள்ளியில் படித்த இவர், இளம் வயதிலிருந்தே அறிவுத்திறன் மிகுந்தவராய் காணப்பட்டார்.

தமது 21ம் வயதிலேயே திருத்தொண்டர் பட்டம் பெற்ற இவர், ஆயர் அலெக்சாண்டரின் செயலராக விளங்கினார். அப்போது மனித அவதாரம் என்ற நூலை எழுதினார். இவர் இளைஞனாக இருந்தபோதிலிருந்தே, பாலைநிலத்தில் தனிமையை தேடி வாழ்ந்து வந்த தவ முனிவர்களுக்கும், சிறப்பாக வனத்து அந்தோணியாருக்கும் மிகவும் அறிமுகமானவராக இருந்தார்.

323ம் ஆண்டு ஆரியுஸ் என்ற கத்தோலிக்க குரு, ஒரு தவறான கொள்கையை உருவாக்கி அதை திருச்சபை முழுவதும் பரப்பி வந்தார். இதனால் ஆயர் அலெக்சாண்டர் இந்த தவறான கொள்கையை பற்றி பேசவேண்டாம் என்று ஆரியுசுக்கு எச்சரிக்கை விடுத்தார். ஆனால் ஆரியுஸ் ஆயருக்கு எதிராக செயல்பட்டு, மேலும் செசாரியா பகுதிக்கு சென்று அங்கும் பரப்பிவந்தார். மக்களை கவரக்கூடிய முறையில் இத்தவறான கொள்கைகளை பாடல்களாக தொகுத்து அவற்றை பாடவைத்தார்.

இந்நிலையில் 325ம் ஆண்டு, மிகவும் புகழ்பெற்ற நீசேயா பொதுசங்கம் கூட்டப்பட்டது. இச்சங்கத்தில் தான் விசுவாசப் பிரமாணம் திருச்சபையில் பயன்படுத்தப்பட வேண்டுமென்று முடிவுசெய்யப்பட்டது. அப்போது ஆரியுசின் தவறான கொள்கையை சுட்டிகாட்டி, அவர்மீது குற்றம் சாட்டி, அவரை சபைக்கு புறம்பாக தள்ளிவைத்தனர்.

அப்போது சங்கம் முடிந்த சில நாட்களிலேயே ஆயர் அலெக்சாண்டர் காலமானார். அப்போது 30 வயதே ஆகியிருந்த அத்தனாசியஸ், அலெக்சாண்டிரியா நகர் ஆயராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு ஆயர் அத்தனாசியஸ், ஆரியுசின் தவறுகளையும், அவருக்கு உதவி செய்த ஆயர்களையும் வன்மையாக கண்டித்தார். இதனால் 5 முறை ஆயர் அத்தனாசியஸ் நாடு கடத்தப்பட்டார். 17 ஆண்டுகள் அவர் ஆயராக வாழ்ந்தார். இருப்பினும் அவர் கிறிஸ்துவின் மீது இடைவிடாத பற்றும், நம்பிக்கையும் கொண்டு வாழ்ந்தார். அவரை துன்புறுத்தியவர்களின் மீது சிறிதும் காழ்ப்புணர்ச்சி கொள்ளாமல் புனிதராகவே வாழ்ந்தார். அவர்மீது கொடுமையாக குற்றம் சாட்டியவர்களையும், பொறுமையோடு ஏற்று, அன்பு செய்தார்.

அப்போது ஆயர் அத்தனாசியசை பழிவாங்கும் நோக்கத்துடன், அலெக்சாண்டிரியா ஆயர்களும், ஆரியூசும் ஒன்று சேர்ந்து, கப்படோசியாவை சேர்ந்த கிரகோரி என்பவரை அலெக்சாண்டிரியாவின் ஆயராக தேர்ந்தெடுத்தனர். இதனால் ஆயர் அத்தனாசியஸ் ரோம் சென்று திருத்தந்தையிடம் நடந்தவைகள் அனைத்தையும் எடுத்துக்கூறினார். பின்னர் திருத்தந்தையின் அனுமதி பெற்று மீண்டும் அலெக்சாண்டிரியாவுக்கு திரும்பினார். அப்போது ஆயராக இருந்த கிரகோரியின் வன்முறைகளை கண்டு அதிர்ச்சியடைந்தார். இவர் திருச்சபைக்கு செய்யும் கொடுமைகளை கண்டு, இவற்றிற்கு நீதி கிடைக்க வேண்டுமென்று இடைவிடாமல் இறைவேண்டலில் ஈடுபட்டார். இதன் விளைவாக ஆயர் கிரகோரியும், அலெக்சாண்டிரியா அரசரும் இறந்துவிட்டனர்.

அதன்பிறகு அரசன் ஜூலியன் அரசனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அரசரானதும் முதலில் ஆயர் அத்தனாசியசை மீண்டும் ஆயர் பதவியில் அமர்த்தினார். ஆனால் ஆரிய வெறியர்கள் இதனால் சீற்றம் கொண்டு, "அமைதியைக் குலைப்பவர் அத்தனாசியஸ்" என்று முத்திரையிட்டு, அரசன் ஜூலியனை நாடு கடத்தினர். அதன்பிறகு பகைவர்களால் அரசன் அம்பெய்து, குத்தி கொல்லப்பட்டார். இதனால் மன்னன் வாலென்ஸ் அரசு பதவியை ஏற்றார். இவர் ஆயர் அத்தனாசியசுக்கு மிக பெரிய உதவிகளை செய்து, திருச்சபையைக் காத்தார். ஏறக்குறைய 50 ஆண்டுகள் பல்வேறு துன்பங்களை தாங்கி கொண்டு, ஆயர் அத்தனாசியஸ் திருச்சபையில் கிறிஸ்துவின் படிப்பினைகளை நிலைநாட்டினார். அலெக்சாண்டிரியாவில் இவர் மரித்தாலும், இவரது உடல் வெனிஸ் நகரில் வைக்கப்பட்டுள்ளது.

=================================================================================
வாழ்க்கை வரலாறு

"தப்பறைக் கொள்கைகளுக்கு மிகப்பெரிய சம்மட்டியாய்" விளங்கிய அத்தனாசியஸ் கி.பி. 295 ஆம் ஆண்டு எகிப்தில் உள்ள அலெக்ஸ்சாந்திரியா என்னும் நகரில் பிறந்தார். இவருடைய பெற்றோர் யார் என்ற குறிப்பு தெளிவாக இல்லை.

அத்தனாசியாரின் காலத்தில் ஆரியஸ் என்னும் குருவானவர் ஆரியபதம் என்னும் தப்பறைக் கொள்கையைப் பரப்பி வந்தார். இக்கொள்கை இயேசு கிறிஸ்துவின் இறைத்தன்மையை மறுத்து வந்தது. அலெக்ஸ்சாந்திரியா நகர ஆயருக்குச் செயரலாக இருந்து, பின்னர் ஆயராகவே உயர்ந்த அத்தனாசியஸ் ஆரிய பதத்தை மிகக் கடுமையாக எதிர்த்து, இயேசு கிறிஸ்துவின் இறைத்தன்மை நிறுவுவதற்குப் பாடுபட்டார். இதற்கிடையில் 325 ஆம் ஆண்டு நைசேயா (Nicaea) சங்கம் கூடியது. இச்சங்கம் ஆரியபதத்தைக் கடுமையாக எதிர்த்தது. மட்டுமல்லாமல் அத்தப்பறைக் கொள்ளையைப் பரப்பி வந்த ஆரியஸ் என்னும் குருவை திருச்சபையிலிருந்து வெளியேற்றியது.

இவ்வாறு திருச்சபையிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆரியஸ் தன்னோடு ஒருசில ஆட்களைச் சேர்ந்துக்கொண்டு ஆயர் அத்தனாசியசுக்கு மிகவும் தொல்லை கொடுத்துக்கொண்டே வந்தார். எந்தளவுக்கு என்றால் ஏறக்குறைய பதினேழு ஆண்டுகள் அவர் அலெக்ஸ்சாந்திரிய நகரில் ஆயராக இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது. அப்படியிருந்தாலும் அத்தனாசியஸ் தன்னுடைய கொள்கையில் மிக உறுதியாக இருந்தார். இப்படி திருச்சபையை எதிரிகளிடமிருந்தும் தப்பறைக் கொள்கைகளிலிருந்தும் காப்பாற்றிய அத்தனாசியஸ் 373 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய அத்தனாசியசின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தை கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. துணிவோடு இருத்தல்

தூய அத்தனாசிடம் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடமே அவரிடம் இருந்த துணிச்சல்தான். அத்தனாசியசைப் பற்றி சொல்லப்படுகின்ற ஓர் சொல்லாடல் "Athanasius Against the World" என்பதாகும். அதாவது தூய அத்தனாசியஸ் இந்த உலகப் போக்கில் வாழவில்லை. உலகம் காட்டுகின்ற நெறிகளுக்கு எதிராகவே வாழ்ந்தார். அதனால் அவர் நிறைய எதிர்ப்புகளைச் சந்தித்தார். அப்படியிருந்தாலும் அவர் இறுதிவரைக்கும் தன்னுடைய கொள்கையில் மிக உறுதியாக இருந்தார். தூய அத்தனாசியசின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து துணிச்சலை கொண்டிருக்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நம்முடைய இந்திய நாட்டை ஆண்ட பிரதமர்களில் "இரும்பு மனுசி"யாக அறியப்படுகின்றவர் திருமதி. இந்திரக் காந்தி அவர்கள். அவர் பல்வேறு காரியங்களை மிகத் துணிச்சலாக செய்துவந்தார். அதனால் அவருக்கு எப்போதும் அச்சுறுத்தல் மற்றும் எதிர்ப்புகள் இருந்துகொண்டே இருந்தன. இதற்கிடையில் ஒருநாள் இந்திரா காந்தி அம்மையார் ஷாந்திநிகேதனில் இருந்த தன்னுடைய "நோய்வாய்பட்டிருந்த" அன்னையைப் பார்ப்பதற்காக தனியாகச் சென்றார். இதைப் பார்த்து ஒருவர் (ரவீந்தரநாத் தாகூர்) அவரிடம், "உங்களுக்குத்தான் நிறைய எதிர்ப்புகள் இருகின்றனவே. எதற்காக இப்படி தனியாகச் செல்கிறீர்கள். துணைக்கு யாரையாவது கூட்டிக்கொண்டு போகலாமே?" என்று கேட்டார். அதற்கு அவர், "என்னுடைய தந்தை என்னை வளர்கின்றபோது துணிச்சலாகவே வளர்த்திருக்கின்றார். அதனால் நான் தனியாகப் பயணிப்பதற்கு குறித்து எனக்குப் பயமில்லை" என்றார். இதைக் கேட்டு ரவீந்தரநாத் தாகூர் மிகவும் மிகவும் வியந்து போனார்.

தூய அத்தனாசியாரிடன், இந்திரா காந்திடம் இருந்த துணிச்சல் நம்மிடம் இருக்கின்றதா என்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்கில் நாம் செய்துவருகின்ற பணியில் ஏதாவது எதிர்ப்போ அல்லது ஆபத்தோ வந்தால் பின்வாங்குகின்றோம். ஆனால் அத்தனாசியார் அப்படியில்லை. அவருக்கு தன்னுடைய பனிக்காலம் முழுவதும் எதிர்ப்புகள் வந்தன. ஆனாலும் தன்னுடைய கொள்கையில் மிக மிக உறுதியாக இருந்தார். தூய அத்தனாசியாரிடம் இருந்த துணிச்சலை நம்மிடமும் வளர்த்துக்கொள்ளவேண்டும்.

யோசுவா புத்தகத்தில் முதல் அதிகாரத்தில் வருகின்ற ஒரு நிகழ்வு. யோசுவா ஆண்டவராகிய கடவுளைப் பார்த்து, இஸ்ரயேல் மக்களை எப்படி வழிநடத்துவது என்று கேட்கும்போது ஆண்டவராகிய கடவுள் அவரிடம், "வீறுகொள்! துணிந்து நில்! அஞ்சாதே! கவலைப்படாதே! ஏனெனில், உன் கடவுளும் ஆண்டவருமானா நான் நீ செல்லும் இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன்" (1:9) என்பார். அதன்பிறகு யோசுவா இஸ்ரயேல் மக்களை நல்ல விதமாய் வழிநடத்திச் செல்வார். யோசுவாக்குச் சொன்ன அதே ஆறுதல் மொழிகளைத்தான் இறைவன் நமக்கு சொல்கின்றார். நாமும் துணிவுள்ள மக்களாக வாழ முயற்சிப்போம்.

ஆகவே, தூய அத்தனாசியாரின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று விசுவாசத்தை உறுதியாகக் காத்துக்கொள்ள துணிவுள்ளவர்களாய் வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.



Saint of the Day : (02-05-2018)
St. Athanasius


He was born in the year 298 A.D. in Alexandria, Egypt. He was educated under Alexander, who later became the bishop of Alexandria. Athanasius spent some time in the desert with St. Anthony the Great. He later became a deacon in 319 A.D., when Alexander became the bishop of Alexandria. As deacon he actively took part in the fight against the Arian heresy (a Christian sect following the preaching of Arius, a priest of Alexandria that denied divinity of Jesus Christ). He took part at the first council of Nicaea in the year 325 as secretary to Bishop Alexander of Alexandria, when Arianism was condemned by the council, in the presence of Emperor Constantine-I the Great. He declared at the council of Nicaea that 'Jesus that I know as my redeemer, cannot be less than God'. After the death of Bishop Alexander, Athanasius was elected the 20th bishop of Alexandria on June 8, 328. He became a severe opponent of Arianism that denied divinity of Jesus. When he was bishop, he was exiled five times by four different Emperors for his staunch opposition to Arianism. He was exiled by Emperor Constantine-I the Great for about two and a half years to Trier, by Emperor Constantius-II for two times for about 14 years (7 years to Rome and 6 years to the Egyptian desert), by Apostate Emperor Julian for about 10 months to Egyptian desert and by Emperor Valens for about 4 months, when Athanasius took refuge near his fathers tomb. It is also said about him that Athanasius was the first to identify the 27 books of the New Testament that are in use today. He wrote the biography of St. Anthony the Great. He died peacefully in his house on May 2, 373 after consecrating Peter-II, one of his presbyters as his successor as the bishop of Alexandria. 

His belief and preaching was, worshiping God in Trinity. He said 'We worship in one God in Trinity and Trinity is unity. Father the God, Son the God and Holy Spirit the God not three Gods but one God. Father the Almighty, Son the Almighty and Holy Spirit the Almighty, not three Almighties but one Almighty. Father the eternal, Son the eternal and Holy Spirit the eternal, not three eternal persons but one eternal'.

---JDH---Jesus the Divine Healer---
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா