Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் ரூம்போல்ட் ✠(St. Rumbold of Mechelen)
   
நினைவுத் திருநாள் : (ஜூன் / Juin 24)
✠ புனிதர் ரூம்போல்ட் ✠(St. Rumbold of Mechelen)

கிறிஸ்தவ மறைப்பணியாளர்/ மறைசாட்சி :
(Christian missionary/ Martyr)

பிறப்பு :
அயர்லாந்து அல்லது ஸ்காட்லாந்து
(Ireland or Scotland)

இறப்பு :
மெச்சலென்
(Mechelen)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

முக்கிய திருத்தலம் :
புனித ரூம்போல்ட் ஆலயம், மெச்சலென்
(St Rumbold's Cathedral, in Mechelen)

நினைவுத் திருநாள் : ஜூன் 24

பாதுகாவல் :
மெச்சலென்; ஹம்பீக்
(Mechelen and Humbeek)

புனிதர் ரூம்போல்ட்டின் சொந்த தாய் நாடு எதுவென்ற தகவல்கள் இல்லையெனினும், அவர் அயர்லாந்து அல்லது ஸ்காட்லாந்து நாட்டின் மறைப்பணியாளர் ஆவார். பின்னாளில், இரண்டு நபர்களின் தீய வழிகளைக் கண்டனம் செய்த காரணத்தால், அவர்களிருவரும் ரூம்போல்ட்டை "மெச்சலென்" (Mechelen) என்ற இடத்தினருகே துன்புறுத்திக் கொன்றனர்.

இவரது நினைவுத் திருநாள் ஜூன் மாதம், 24ம் தேதி, ரோமன் கத்தோலிக்க திருச்சபை, மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகளால் கொண்டாடப்படுகின்றது. அயர்லாந்து நாட்டில் 3ம் தேதி கொண்டாடப்படுகின்றது. இவர் "மெச்சலென்; ஹம்பீக்" (Mechelen and Humbeek) ஆகிய இடங்களின் பாதுகாவலர் ஆவார்.

ரூம்போல்ட், ரோமில் ஒரு பிராந்திய ஆயராக அருட்பொழிவு செய்விக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இவர் அயர்லாந்தில் (Ireland) பிறந்ததாகவும், "டப்ளின்" (Bishop of Dublin) ஆயராக பணியாற்றியதாகவும், இவர் ஒரு ஸ்காட்லாந்து அரசனின் (Scottish king) மகன் என்றும், புனிதர் "ஹிமெலின்" (St. Himelin) இவரது சகோதரர் என்றும், புனிதர் "வில்லிபோர்டின்" (St. Willibrord) மேற்பார்வையில் "நெதர்லாந்து" (Hinterlands) மற்றும் "ப்ரபன்ட்" (Brabant) ஆகிய நாடுகளில் பணியாற்றியதாகவும், புனிதர் "கம்மாராஸ்" (St. Gummarus) மற்றும் பிரசங்கிக்கும் துறவி "ஃபிரெட்கன்ட்" (Fredegand van Deurne) ஆகியோரின் நெருங்கிய துணையாளர் என்றும் வாதங்கள் வைக்கப்படுவதுண்டு.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா