✠ புனிதர் குயிரினஸ் ✠(St.
Quirinus of Sescia) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(ஜூன் / Juin 04) |
✠ புனிதர் குயிரினஸ் ✠(St.
Quirinus of Sescia)
*ஆயர், மறைசாட்சி :(Bishop and martyr)
*பிறப்பு : தெரியவில்லை
*இறப்பு : கி.பி. 309
சபரியா, பன்னோனியா, ரோம பேரரசு
(Sabaria, Pannonia, Roman Empire)
*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
*முக்கிய திருத்தலம் :
சேன் செபஸ்டினோ பேராலயம், ஃபுயோரி லெ முரா, ரோம், இத்தாலி
(Basilica of San Sebastiano fuori le mura, Rome, Italy)
*நினைவுத் திருநாள் : ஜூன் 4
*பாதுகாவல் :
சிசக், குரோஷியா
(Sisak, Croatia)
புனிதர் குயிரினஸ், குரோஷியா (Croatia) நாட்டின் "சேசியா" (Sescia)
மறைமாவட்டத்தின் ஆதிகால ஆயர் ஆவார். இது, தற்போதைய "சிசக்"
(Sisak) மறைமாவட்டம் ஆகும். இவர், "செசரியாவின் யூசிபியஸ்" (Eusebius
of Caesarea) மூலமாக குறிப்பிடப்படுகிறார்.
இவர், கி.பி. 309ம் ஆண்டு, "டயக்லேஷியன்" துன்புருத்தல்களின்போது
(Persecutions of Diocletian) கொல்லப்பட்டதாக ஒரு நம்ப இயலாத
குறிப்பும் உள்ளது. தப்பி ஓட முயன்ற குயிரினஸ், கைது செய்யப்பட்டு
சிறையிலடைக்கப்பட்டார். சிறையில், தமது சிறை அதிகாரியான
"மார்செல்லஸ்" (Marcellus) என்பவனை கிறிஸ்தவ மதத்திற்கு மனம்
மாற்றினார்.
மூன்று நாட்களின் பின்னர், "பன்னோனியா பிறிம்" மாநில ஆளுநரான
(The Governor of Pannonia Prim) "அமன்ஷியஸ்" (Amantius) என்பவன்
"சபரியா" (Sabaria) என்ற இடத்திற்கு கொண்டுசெல்ல உத்தரவிட்டான்.
இந்த இடம் தற்போது ஹங்கேரி நாட்டிலுள்ள "ச்ஸோம்பதெளி" (Present-day
Szombathely, Hungary) ஆகும். அங்கே அவருடைய விசுவாசத்தைக்
கெடுக்கும் முயற்சிகள் நடந்தன. பின்னர், ஆயரது கழுத்தில் ஒரு
மைல்கல்லை கட்டி, உள்ளூரிலுள்ள "ஜியோன்ஜியோஸ்" (Gyngys
River) ஆற்றில் எறிந்தனர்.
உள்ளூரான "சவரியாவின்" (Savaria) கிறிஸ்தவர்கள் அவரது உடலை
மீட்டு "ஸ்காரபடியஸ்" (Scarabateus) என அறியப்படும் வாயிற்கதவருகே
அடக்கம் செய்தனர். |
|
|