✠ புனிதர் பெட்ராக் ✠(St.
Petroc) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(ஜூன் / Juin 04) |
✠ புனிதர் பெட்ராக் ✠(St.
Petroc)
* மடாதிபதி : (Abbot)
* பிறப்பு : வேல்ஸ் (Wales)
* இறப்பு : கி.பி. 564
டிரரேவேல், பேட்ஸ்டோவ், கோர்ன்வால், இங்கிலாந்து
(Treravel, Padstow, Cornwall, England)
* ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
* முக்கிய திருத்தலம் :
புனித பெட்ராக் தேவாலயம், போட்மின், கோர்ன்வால், இங்கிலாந்து
(St Petroc's Church, Bodmin, Cornwall, England)
* நினைவுத் திருநாள் : ஜூன் 4
* பாதுகாவல் :
டேவோன் (Devon), கோர்ன்வால் (Cornwall)
புனிதர் பெட்ராக், ஒரு பிரிட்டிஷ் இளவரசரும், கிறிஸ்தவ புனிதரும்
ஆவார். அனேகமாக தெற்கு வேல்ஸ் (South Wales) பிராந்தியத்தில்
பிறந்த இவர், ஆரம்பத்தில் இங்கிலாந்தின் "டேவோன்" (Devon) மற்றும்
"கோர்ன்வால்" (Cornwall) ஆகிய பகுதிகளில் மறை போதனை நிகழ்த்தினார்.
"க்ளிவிஸ்" (Glywys of Glywysing) எனும் அரசனின் மகனாகப் பிறந்த
இவர், அயர்லாந்தில் (Ireland) கல்வி கற்றார். பின்னாளில், அங்கேயே
புனிதர் கெவின் (Saint Kevin) என்பவருக்கு ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.
தம்மை ஆன்மீகத்தில் மென்மேலும் செம்மைப்படுத்தும் நோக்கமாக அவர்
ரோம் நகருக்கு புனித யாத்திரை சென்றார். "கோர்ன்வால்"
(Cornwall) நகருக்கு திரும்பிய இவர், தாமே நிறுவிய துறவு மடத்தில்
தம்மைத்தாமே அடைத்துக்கொண்டார். "போட்மின்" (Bodmin) பகுதியில்
இரண்டாவது துறவு மடத்தினை கட்டிய இவர், அங்கேயே பெரிய தேவாலயம்
ஒன்றினையும் கட்டினார்.
பெட்ராக், "லிட்டில் பேதேறிக் மற்றும் போட்மின்"(Little
Petherick and Bodmin) ஆகிய பகுதிகளிலும் பிரிட்டன், வேல்ஸ் மற்றும்
பிரிட்டனி (Britain, Wales and Brittany) ஆகிய மாநிலங்களின் பல
பகுதிகளிலும் தேவாலயங்களை கட்டினார்.
மான் வேட்டையாடிய மன்னன் "கான்ஸ்டன்டைன்" (Constantine of
Cornwall) என்பவரிடமிருந்து ஒரு மானை இவர் காப்பாற்றியதனால் மன்னன்
கிறிஸ்தவ மதத்திற்கு மனம் மாறியதாக கூறப்படுகிறது.
சுமார் முப்பது வருடங்களின் பின்னர் "பிரிட்டனி" (Brittany) வழியாக
ரோம் நகருக்கு யாத்திரை சென்ற புனிதர் பெட்ராக், "லிட்டில்
பெதேரிக்" (Little Petherick) எனும் இடத்தினருகேயுள்ள "டிரரேவேல்"
(Treravel) எனுமிடத்தில் மரணம் அடைந்தார். |
|
|