Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் பௌலினஸ் ✠(St. Paulinus of Nola)
   
நினைவுத் திருநாள் : (ஜூன் / Juin 22)
✠ புனிதர் பௌலினஸ் ✠(St. Paulinus of Nola)

 நோலா மறைமாவட்ட ஆயர்/ ஒப்புரவாளர் :
(Bishop of Nola and Confessor)

பிறப்பு : கி.பி. 354
போர்டியூக்ஸ், கல்லியா லூக்டெனேன்சிஸ், மேற்கு ரோம பேரரசு
(Bordeaux, Gallia Lugdunensis, Western Roman Empire)

இறப்பு : ஜூன் 22, 431
நோலா, கம்பானியா, இத்தாலி, மேற்கு ரோம பேரரசு
(Nola in Campania, the Praetorian prefecture of Italy, Western Roman Empire)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

நினைவுத் திருநாள் : ஜூன் 22

"போன்டியஸ் மெரோபியஸ் ஏன்ஸியஸ் பௌலினஸ்" (Pontius Meropius Anicius Paulinus) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் பௌலினஸ், ஒரு ரோம மொழி கவிஞரும், எழுத்தாளரும், "செனட்சபை" (Senator) உறுப்பினரும், துணைத் தூதரக பதவிகளைப் பெற்றவரும், "காம்பானிய" (Governor of Campania) ஆளுநருமாவார். ஆனால், "பேரரசர் கிரேஷியனின்" (Emperor Gratian) படுகொலைக்குப் பின்னர், தமது ஸ்பேனிஷ் மனைவி "தெரேஷியாவின்" (Therasia) செல்வாக்கினால் இவர் தமது எதிர்கால தொழில்-வாழ்க்கை முறையை கைவிட்டார். கிறிஸ்தவராக மனம் மாறி திருமுழுக்கு பெற்றார். தமது மனைவி "தெரேஷியாவின்" (Therasia) மரணத்தின் பிறகு நோலா (Nola) மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கபட்டார்.

தமது முன்னோடியான "புனிதர் ஃபெலிக்சை" (St Felix) கௌரவிக்கும் வகையிலும், பேரரசு முழுதுமிருந்த கிறிஸ்தவ தலைவர்களை கௌரவுக்கும் வகையிலும் கவிதைகள் எழுதத் தொடங்கினார். பாரம்பரியப்படி, கிறிஸ்தவ தேவாலயங்களில் ஆராதனைகளின்போது, மணியடிக்கும் முறையை அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சேரும். இவர், திருத்தந்தை "முதலாம் போனிஃபேஸ்" (Pope Boniface I) அவர்களின் தேர்தலிலிருந்த சர்ச்சைகளை நீக்குவதற்கு உதவினார்.

தமது சொத்து சுகங்களை துறப்பதை பகிரங்கமாக அறிவித்தது, தமது சந்நியாச மற்றும் பண்பாட்டு வாழ்க்கைக்கு ஆதரவாக அமைந்ததுடன், புனிதர்கள் "அகஸ்தின்" (Augustine), "ஜெரோம்" (Jerome), "மார்ட்டின்" (Martin) மற்றும் "அம்புரோஸ்" (Ambrose) உள்ளிட்ட இவரது சமகால கிறிஸ்தவ துறவியரிடையே ஒரு முன்மாதிரியாகவும் அமைந்தது.

"போன்டியஸ்", தென்மேற்கு ஃபிரான்ஸ் நாட்டின் "போர்டியூக்ஸ்" (Bordeaux) எனுமிடத்தில் கி.பி. 352ம் ஆண்டு பிறந்தவர் ஆவார். குறிப்பிடத்தக்க செனட்டரிய குடும்பமொன்றைச் சேர்ந்த இவருடைய குடும்பத்தினருக்கு ஃபிரான்ஸின் "அக்குய்டைன்" (Aquitaine province), வடக்கு ஸ்பெயின் (Northern Spain) மற்றும் தெற்கு இத்தாலி (Southern Italy) ஆகிய பிராந்தியங்களில் சொத்துக்களும் தோட்டங்களும் இருந்தன. "போர்டியூக்ஸ்" (Bordeaux) நகரில் கல்வி கற்ற இவரது ஆசிரியர், கவிஞர் "ஒசொனியஸ்" (poet Ausonius) ஆனார். அவரே இவரது நண்பருமானார். தமது சிறு வயதில், நேப்பில்ஸ் (Naples) அருகே, "நோலா" (Nola) நகரிலுள்ள "புனிதர் ஃபெலிக்ஸ்" (St Felix) திருத்தலத்திற்கு அடிக்கடி சென்று வருவார்.

இவரது வாழ்க்கை, ஒரு சாதாரண இளைஞனாக நெடுநாள் நீடிக்கவில்லை. கி.பி. 375ம் ஆண்டு, பேரரசர் "வலென்டீனியனின்" (Valentinian) பின்னர் பதவிக்கு வந்த அவரது சொந்த மகன் "பேரரசர் க்ரேஷியன்" (Emperor Gratian), "போன்டியசை" ரோம தூதரக அதிகாரியாக நியமித்தார். அத்துடன், இத்தாலியின் தென் பிராந்தியமான "கம்பானியாவின்" (Campania) ஆளுநராகவும் நியமித்தார்.

கி.பி. 383ம் ஆண்டு, ஃபிரான்ஸ் நாட்டின் "லியோன்" (Lyon) எனுமிடத்தில் "பேரரசர் க்ரேஷியன்" வஞ்சகமாக படுகொலை செய்யப்பட்டார். அதே நேரத்தில், பௌலினஸ் "அம்புரோஸின்" (Ambrose) பள்ளிக்குச் செல்லுவதற்காக "மிலன்" (Milan) சென்றிருந்தார். 384ம் ஆண்டு சொந்த ஊர் திரும்பிய பௌலினஸ், "பார்சிலோனாவைச்" (Barcelona) சேர்ந்த பிரபுத்துவ கிறிஸ்துவ குடும்பத்தைச் சேர்ந்த ஸ்பேனிஷ் பெண்ணான "தெரேஷியாவை" (Therasia) திருமணம் செய்துகொண்டார். அவரது சகோதரரை கொலை செய்துவிடுவதாகவும், அவரது சொத்துக்களை பறிமுதல் செய்துவிடுவதாகவும் இவர் பயமுறுத்தப்பட்டார்.

"போர்டியூக்ஸ்" ஆயர் "டெல்ஃபினஸ்" (Bishop Delphinus of Bordeaux) என்பவரிடம் திருமுழுக்கு பெற்ற பௌலினஸ், கி.பி. 390ம் ஆண்டு தமது மனைவி தெரேஷியாவுடன் ஸ்பெயின் பயணித்தார். அங்கே, பிறந்து எட்டு நாட்களே ஆன தங்களது ஒரே குழந்தையை தொலைத்தனர். மனம் வெறுத்துப்போன அவர்கள், இவ்வுலக வாழ்வினை வெறுத்து ஒதுங்கிய மத வாழ்க்கை வாழ முடிவு செய்தனர்.

கி.பி. 393 அல்லது 394ம் ஆண்டில் கிறிஸ்து பிறப்பு திருநாளன்று, பௌலினஸின் சில எதிர்ப்பிற்குப் பிறகு, அவர் உள்ளூர் கிறிஸ்தவ சபைகள் (Presbyter) உறுப்பினராக "பார்சிலோனாவின்" ஆயர் (Bishop of Barcelona) "லம்பியஸ்" (Lampius) என்பவரால் அருட்பொழிவு செய்யப்பட்டார்.

பௌலினஸ், பார்சிலோனாவிலேயே தங்குவதற்கு மறுத்துவிட்டார். அவரும் அவரது மனைவியும் ஸ்பெயின் நாட்டிலிருந்து கிளம்பி "கம்போனியாவிலுள்ள" (Campania) "நோலா" (Nola) சென்றனர். அவர் தமது மரணம் வரை அங்கேயே தங்கியிருந்தார்.

தமது மன மாற்றத்தின் மதிப்பினை புனிதர் ஃபெலிக்ஸ் அவர்களுக்கே தந்த பௌலினஸ், வருடா வருடம் அவரை கௌரவிக்கும் வகையில் கவிதை எழுதினர். அவரும் அவரது மனைவியும் இணைந்து புனிதர் ஃபெலிக்சை நினைவுகூறும் ஒரு தேவாலயத்தை மீண்டும் கட்டியெழுப்பினார்கள்.

கி.பி. 408 மற்றும் 410 ஆகிய ஆண்டுகளுக்கிடையே தெரசியா மரணமடைந்தார். அதன் குறுகிய காலத்தின் பின்னர், ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்ட பௌலினஸ், 410ம் ஆண்டு "நோலா" (Nola) மறைமாவட்டத்தை தேர்வு செய்தார். அங்கே அவர் இருபது ஆண்டுகள் சேவையாற்றினார். கி.பி. 431ம் ஆண்டு, ஜூன் மாதம், 22ம் நாளன்று, "நோலா" (Nola) நகரில் பௌலினஸ் மரணமடைந்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா