| 
				
					
				| 
						
            
				| ✠ புனிதர் ஜான் ஃபிரான்சிஸ் ரெஜிஸ் ✠(St. 
					John Francis Regis) |  
				|  |  |  |  
				| நினைவுத் திருநாள் : 
					
					
					(ஜூன் / Juin 16) |  
				| ✠ புனிதர் ஜான் ஃபிரான்சிஸ் ரெஜிஸ் ✠(St. 
					John Francis Regis) 
 ✠ ஃபிரெஞ்ச் குரு, ஒப்புரவாளர் :
 (French Priest, Confessor)
 
 ✠பிறப்பு : ஜனவரி 31, 1597
 ஃபோன்ட்கௌவர்ட், ஔட், ஃபிரான்ஸ்
 (Fontcouverte, Aude, France)
 
 ✠இறப்பு : டிசம்பர் 31, 1640 (வயது 43)
 லலௌவேஸ்க், அர்டேச், ஃபிரான்ஸ்
 (Lalouvesc, Ardèche, France)
 
 ✠ஏற்கும் சமயம் :
 ரோமன் கத்தோலிக்க திருச்சபை
 (Roman Catholic Church)
 
 ✠முக்திபேறு பட்டம் : மே 18, 1716
 திருத்தந்தை பதினோராம் கிளமென்ட்
 (Pope Clement XI)
 
 ✠புனிதர் பட்டம் : ஏப்ரல் 5, 1737
 திருத்தந்தை பன்னிரெண்டாம் கிளமென்ட்
 (Pope Clement XII)
 
 ✠முக்கிய திருத்தலம் :
 லலௌவேஸ்க், ஃபிரான்ஸ்
 (Lalouvesc, France)
 
 ✠நினைவுத் திருநாள் : ஜூன் 16
 
 ✠பாதுகாவல் :
 ரெஜிஸ் பல்கலைகழகம் (Regis University), ரெஜிஸ் உயர்நிலை பள்ளி 
					(Regis High School), நியு யார்க் நகரம் (New York City), 
					ரெஜிஸ் இயேசுசபை உயர்நிலை பள்ளி (Regis Jesuit High School), 
					ஔரோரா (Aurora), கொலோரோடோ (COLORODO), பின்னலாடை தயாரிப்பாளர் 
					(Lacemakers)
 
 புனிதர் ஜான் ஃபிரான்சிஸ் ரெஜிஸ், ஓரு ஃபிரெஞ்ச் இயேசுசபையைச் 
					சேர்ந்த கத்தோலிக்க குருவும், ஒப்புரவாளருமாவார்.
 
 "ஜீன்-ஃபிரான்காய்ஸ் ரெஜிஸ்" (Jean-Franois Rgis) எனும் 
					இயற்பெயர் கொண்ட இப்புனிதர், 1597ம் ஆண்டு, ஜனவரி மாதம், 31ம் 
					தேதி, தென் ஃபிரான்ஸ் (Southern France) நாட்டின் "லாங்கிடோக்" 
					(Languedoc) எனும் முன்னாள் பிராந்தியத்தின் "ஃபோன்ட்கௌவர்ட்" 
					(Fontcouverte) எனுமிடத்தில் பிறந்தார். இவரது தந்தையார், 
					"ஜீன் ரெஜிஸ்" (Jean Rgis) ஆவார். தாயார், பிரபுக்கள் 
					குடியைச் சேர்ந்த "மார்கரெட் டி குகுன்ஹன்" (Marguerite de 
					Cugunhan) ஆவார். இவர், "பெசியர்ஸ்" (Bziers) நகரிலுள்ள 
					இயேசுசபை (Jesuit College) கல்லூரியில் கல்வி பயின்றார். 
					1616ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 8ம் தேதியன்று, "டௌலோஸ்" 
					(Toulouse) எனும் நகரிலுள்ள இயேசுசபையின் புகுமுக (Jesuit 
					novitiate) பயிற்சியில் இணைந்தார். இரண்டு வருடங்களின் பிறகு, 
					தமது உறுதிப் பாடுகளை ஏற்றார்.
 
 தென்மேற்கு ஃபிரான்சின் "கஹோர்ஸ்" (Cahors) எனும் நகரில் 
					"சொல்லாட்சி அணியிலக்கணம்" (Rhetoric) பயின்ற இவர், கி.பி. 
					1619ம் ஆண்டு முதல் கி.பி. 1628ம் ஆண்டு வரை, பல்வேறு 
					கல்லூரிகளில் இலக்கணம் கற்பிக்க அனுப்பப்பட்டார். அதேவேளையில், 
					தாமும் "டோர்னானில்" (Tournon) உள்ள "பல்லுயிரியத்தில்" 
					(Scholasticate) தத்துவ பாடங்களில் (Philosophy) படிப்பைத் 
					தொடர்ந்தார். விசுவாசத்தை பிரசங்கிக்கும் போதனைக்கும், ஆழ்ந்த 
					அன்பின் காரணமாகவும், ஆன்மாக்களை காப்பாற்றும் தமது 
					பேரார்வத்தாலும், ரெஜிஸ் 1628ம் ஆண்டு, "டௌலோஸ்" (Toulouse) 
					நகரில் இறையியல் கற்க தொடங்கினார். இரண்டு வருடங்களுக்குள்ளே, 
					கி.பி. 1630ம் ஆண்டு, இவர் குருத்துவ அருட்பொழிவு பெற்றார். 
					அடுத்த ஆண்டு, தமது படிப்புகளை முடித்த ரெஜிஸ், தனது மூன்றாவது 
					உறுதிப்பாடுகளை ஏற்றார்.
 
 ரெஜிஸ் இப்போது தனது வாழ்வாதாரத்திற்காக முழுமையாக 
					தயார்படுத்தப்பட்டு, 1631ம் ஆண்டு கோடையில் தமது அப்போஸ்தல 
					வாழ்க்கையில் நுழைந்தார். ஒரு சளைக்காத பணியாளரான இவர், தமது 
					வாழ்நாளின் பெரும்பகுதியை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 
					சேவையாற்றுவதில் செலவிட்டார். புதிதாய் ஞானஸ்நானம் 
					பெற்றிருந்த இவர், "டௌலோஸ்" (Toulouse) நகரில், கொடூரமான 
					பிளேக் (Bubonic plague) நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை 
					செய்தார். 1632ம் ஆண்டு, மே மாதம் முதல், 1634ம் ஆண்டு, 
					செப்டம்பர் மாதம் வரை, "மான்ட்பெல்லியரின்" இயேசுசபை கல்லூரியை 
					(Jesuit College of Montpellier) தமது தலைமையகமாகக் கொண்டு 
					பணியாற்றினார். இங்கே அவர் "ஹுகெனோட்ஸ்" (Huguenots) இன 
					மக்களின் மன மாற்றத்திற்காக உழைத்தார். மருத்துவமனைகளுக்கு 
					வருகை தந்தார். அவசியத்திலுள்ள மக்களுக்கு உதவிகள் செய்தார். 
					களங்கப்பட்ட, ஏறுமாறான பாதைகளிலுள்ள பெண்களை 
					நல்வழிப்படுத்தினார். ஏழைகளுக்கும் சிறுவர்களுக்கும் 
					கத்தோலிக்க கோட்பாடுகளை உற்சாகமாகவும், ஆர்வத்துடன் 
					பிரசங்கித்தார். ரெஜிஸ், அபாயகரமான பெண்கள் மற்றும் 
					அனாதைகளுடன் பணிபுரிவதில் பிரசித்தி பெற்றவர். அவர்களுக்கு 
					பாதுகாப்பான இல்லங்களை நிறுவியதுடன், அவர்களுக்கு 
					வேலைவாய்ப்புகளையும் ஏற்பாடு செய்து தந்தார். அடிக்கடி 
					நற்கருணை அருட்சாதன ஸ்தாபன ஏற்பாடு செய்து, 
					பணக்காரர்களிடமிருந்து ஏழை மக்களுக்கு வேண்டிய உணவு, உடைகள் 
					மற்றும் பணம் வசூலிப்பதற்கான ஏற்பாடுகள் செய்தார்.
 
 அவர் விபச்சாரிகளுக்கு பல விடுதிகளை நிறுவினார். 
					அப்பெண்களுக்கு பின்னலாடைகள் தயாரிக்கும் பணிகளை 
					பயிற்சியளித்தார். இது அவர்களுக்கு நிலையான வருமானத்தை தந்தது. 
					பிறரின் சுரண்டல் மற்றும் அச்சுறுத்தல்களிலிருந்து தங்கள் குல 
					பெண்களை பராமரிப்பதற்கான ஒரு வாய்ப்பாக இது இருந்தது.
 
 கி.பி. 1633ம் ஆண்டு, உள்ளூர் ஆயர் "மோன்சிக்னோர்" (Monsignor 
					Louis II de la Baume de Suze) என்பவரது அழைப்பின் பேரில், 
					ரெஜிஸ் "விவியர்ஸ் மறைமாவட்டத்திற்கு" (Diocese of Viviers) 
					சென்றார். மறைமாவட்டம் முழுதும் பரவலாக மறைப்பணியாற்ற அவர் 
					கேட்டுக்கொள்ளப்பட்டார். கி.பி. 1633-40 ஆண்டுகளில், தென் 
					கிழக்கு ஃபிரான்சின் (South-East of France) "விவாரிஸ்" 
					(Vivarais) பிராந்தியம், ஃபிரான்சின் முன்னாள் பிராந்தியமான 
					"ஃபோரேஸ்" (Forez) மற்றும் கிழக்கு ஃபிரான்சின் "வேலே" (Velay) 
					ஆகிய பிராந்தியங்களிலுள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 
					மறைப் பணியாற்றினார். ரெஜிஸ், குருவாகவும் பொதுநிலையினராகவும் 
					உழைத்தார். அவரது பிரசங்க முறைகள், எளிமையாகவும் மற்றும் 
					நேரடியானதாகவும் இருந்ததாக கூறப்படுகிறது. கல்வியறிவற்ற 
					விவசாயிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்ததன் காரணமாக, எண்ணற்ற 
					மக்கள் கிறிஸ்தவர்களாக மனம் மாறினார்கள். ரெஜிசின் உழைப்பு 
					முழுதும் கிறிஸ்தவ மனமாற்றங்களாக அருவடையாயின.
 
 எனினும், அவரது தைரியம் - சில சந்தர்ப்பங்களில் கர்வம் என 
					கருதப்பட்டது  வேறு சில குருக்களுடன் மோதலுக்கு வழிவகுத்தது. 
					உள்ளூர் ஆயருடன் பதட்டமான ஒரு காலமும் உருவாகியிருந்தது. 
					அவரால் கண்டிக்கப்பட்ட பலரால் வன்முறை அச்சுறுத்தல்களும் 
					நேரிட்டிருந்தன. அவர் கனடா நாட்டின் ஆதிவாசி மக்களை மனமாற்றம் 
					செய்வதற்கான மறைப்பணிகளுக்காக ஏங்கிக்கொண்டிருந்தாலும், அவர் 
					தமது வாழ்நாள் முழுதும் ஃபிரான்ஸ் நாட்டிலேயே இருந்தார்.
 
 பயணங்கள் கடினமாக இருந்த கடினமான மலைப்பகுதிகளில் - குறிப்பாக 
					குளிர்காலத்தில் கூட, அவர் ஒரு நகரிலிருந்து வேறொரு நகருக்கு 
					வெறும் கால்களுடன் நடந்தே சென்றார்.
 
 1640ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 31ம் தேதி, நாற்பத்துமூன்று 
					வயதான ரெஜிஸ், நிமோனியா (Pneumonia) நோயால் மரித்தார்.
 
 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
 தூய யோவான் பிரான்சிஸ் ரெஜிஸ் (ஜூன் 16)
 
 "நாமோ அழகான, ஜோடனை நிறைந்த வார்த்தைகளால் மறையுரை கொடுக்க 
					நினைக்கின்றோம். இவரோ மிகவும் எளிய, சாதாரண வார்த்தைகளில் 
					மறையுரை கொடுக்கின்றார். மக்களும் இவருடைய மறையுரையைக் கேட்க 
					சாரை சாரையாக வருகிறார்கள்"
 - யோவான் பிரான்சிஸ் ரெஜிசைக் குறித்து அவருடைய நண்பர் கூறிய 
					வார்த்தைகள்
 
 வாழ்க்கை வரலாறு
 
 இன்று நாம் நினைவுகூரும் யோவான் பிரான்சிஸ் ரெஜிஸ் 1597 ஆம் 
					ஆண்டு ஜனவரி திங்கள் 31 ஆம் நாள், பிரான்ஸ் நாட்டில் இருந்த 
					ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார். இவர் தன்னுடைய தொடக்கக் 
					கல்வியை தனது சொந்த ஊரிலே கற்றார். அதன்பின் இவர் தன்னுடைய 
					மேற்படிப்பை இயேசு சபைத் துறவிகள் நடத்தி வந்த கல்லூரியில் 
					கற்றார். அப்போது அங்கே இருந்த துறவிகளுடைய வாழ்க்கையால் 
					தொடப்பட்டு, தானும் ஒரு துறவியாக மாறவேண்டும் என்னும் 
					ஆசைகொண்டார் இவர். ஆசை கொண்டதும் மட்டுமல்லாமல் 1631 ஆம் ஆண்டு 
					குருவாகவும் அருட்பொழிவு செய்யப்பட்டார்.
 
 யோவான் பிரான்சிஸ் ரெஜிஸ் குருவாக மாறிய பின்பு ஆண்டவரின் 
					நற்செய்தியை மக்களுக்கு எடுத்துரைத்து, ஆன்மாக்களை அறுவடை 
					செய்யும் பணியில் மிக மும்முரமாக ஈடுபட்டார். மிகச் சிறந்த 
					மறைபோதகராக விளங்கிய இவர், தன்னுடைய போதிக்கும் திறமையால் 
					பலரையும் கிறிஸ்துவுக்குள் கொண்டு வந்து சேர்த்தார்.
 
 இதற்கிடையில் இவர் இருந்த தூலூஸ் நகரில் பிளேக் நோய் பரவத் 
					தொடங்கியது. இந்த நோய் பரவி பலரது உயிரையும் எடுத்துக்கொண்டது. 
					இந்தச் சூழ்நிலையில் யோவான் பிரான்சிஸ் ரெஜிஸ் மிகச் சிறப்பான 
					முறையில் பணிகளைச் செய்து, நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 
					உதவி புரிந்து வந்தார். இவர் நோயாளிகள்மீது அதிகமான அக்கறை 
					எடுத்துக்கொண்டு அவர்களுக்குப் பணிசெய்து வந்தார். நோயாளிகள் 
					மட்டுமல்லாது கைவிடப்பட்டோர், விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு 
					வந்தோர் மறுவாழ்வு பெறுவதற்காகவும் பாடுபட்டார். அவர்களுக்காக 
					விடுதி ஒன்றைக் கட்டி எழுப்பி, அதில் அவர்களை அமர வைத்து, 
					அதன்மூலம் அவர்களுக்குச் சேவைகள் புரிந்து வந்தார்.
 
 இதன்பிறகு இவர் விவியர்ஸ் நகர் சென்று, அங்கு நற்செய்தியை 
					அறிவிக்கத் தொடங்கினார். இவர் ஆற்றிய நற்செய்திப் பணியினால் 
					பலரும் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார்கள். இப்படி பல்வேறு 
					பணிகளைச் செய்து வந்த யோவான் பிரான்சிஸ் ரெஜிஸ் நிமோனியாக் 
					காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அந்த நோய் இவரைக் கடுமையாகத் 
					தாக்கவே இவர் தன்னுடைய 43 ஆம் வயதில் அதாவது 1640 ஆம் ஆண்டு, 
					டிசம்பர் 30 ஆம் நாள், இறையடி சேர்ந்தார். இவருக்கு 1737 ஆம் 
					ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.
 
 கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
 
 தூய யோவான் பிரான்சிஸ் ரெஜிசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், 
					அவரிடம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் 
					பார்த்து நிறைவு செய்வோம்.
 
 1. எளியரிடத்தில் இரக்கம்
 
 தூய யோவான் பிரான்சிஸ் ரெஜிசின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் 
					பார்க்கின்றபோது அவர் எல்லா மக்களிடத்திலும் அதிலும் குறிப்பாக 
					எளியவரிடத்தில் கொண்டிருந்த இரக்கம்தான் நம்முடைய நினைவுவுக்கு 
					வந்து போகின்றது. அவர் யாரிடத்திலும் எந்தவொரு வேறுபாடும் 
					பார்க்காமல் எல்லாரிடத்திலும் அன்போடும் இரக்கத்தோடும் சகோதர 
					நேசத்தோடும் இருந்தார். அவர் கொண்டிருந்த அன்பும் இரக்கமும் 
					நம்மிடத்தில் இருக்கின்றதா? என்று சிந்தித்துப் 
					பார்க்கவேண்டும்.
 
 பல நேரங்களில் நாம் சமூகத்தில் வலுத்தவர் என்றால் அவரை ஒரு 
					மாதிரியாகவும் வறியவர் என்றால், அவரை ஒரு மாதிரியாகவும் 
					நடத்துகின்றோம். இத்தகைய போக்கு திருச்சபையின் தொடக்க 
					காலக்கட்டத்திலும் நிலவியது. அதைத்தான் தூய யாக்கோபு தன்னுடைய 
					திருமுகத்தில், "சகோதர சகோதரிகளே, மாட்சிமிக்க நம் ஆண்டவர் 
					இயேசு கிறிஸ்துவினிடம் நம்பிக்கை கொண்டுள்ள நீங்கள் 
					ஆள்பார்த்து செயல்படாதீர்கள்" என்று (யாக் 2:1). ஆகையால், 
					ஆள்பார்த்து செயல்படுவதை நம்மிடத்தில் இருந்து தவிர்த்து 
					எல்லாரையும் சகோதர சகோதரிகளாகப் பார்க்கக்கூடிய பக்குவத்தில் 
					நாம் வளரவேண்டும். ஏனென்றால், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, 
					யாரையும் ஏழை என்றும் பணக்காரர் என்றும் பிரித்துப் பார்த்து 
					பழகவில்லை. அவர் வழியில் நடக்கும் நாம், அவரைப் போன்று 
					எல்லாரையும் சகோதர சகோதரிகளாக பாவித்து நடத்துவதே மிகச் 
					சிறப்பான ஒரு செயலாகும்.
 
 ஆகவே, தூய யோவான் பிரான்சிஸ் ரெஜிசின் நினைவுநாளை கொண்டாடும் 
					நாம், அவரைப் போன்று ஏழை எளியவரிடத்தில் மிகுந்த அன்போடும் 
					இரக்கத்தோடும் வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் 
					பெறுவோம்.
 
 
 St. John Francis Regis
 
 He was born on January 31, 1597 in Fontcouverta, Aude in 
					France. His father was Jean Regis and mother Marguerite de 
					Cugunhan. He was a French priest of the Society of Jesus and 
					was ordained a priest when he was 31 years old. He studied 
					theology to fulfill his desire of preaching gospel and 
					teaching the faith to others. When the bubonic plague broke 
					out he worked to help the plague victims in Toulouse. When 
					working at the college of the Jesuits at Montpellier, he 
					worked hard for the conversion of Haguenots (members of the 
					Protestant Reformed Church of France inspired by the 
					writings of John Calvin in 1530s) to catholic faith. He 
					established confraternities of the Blessed Sacrament and 
					that organization, organized charitable collections of money 
					and food from wealthy people for distribution to poor. He 
					also established hostels for prostitutes who wished to leave 
					the business, called 'Daughters of Refuge' and trained them 
					as lace makers for making income. St. Francis Regis lived on 
					apples, black bread and whatever else came to his hand. He 
					died of pneumonia at the age of 43 years at Lalouvesc on 
					December 30, 1640. The place where he died has been 
					transformed into a mortuary chapel and the water of the 
					fresh water spring near the chapel gives miraculous cures, 
					as per the devotees of St. Regis.
 
 He was beatified on May 18, 1716 by pope Clement-XI and 
					canonized by pope Clement-XII on April 5, 1737. St. John 
					Francis Regis is venerated as the patron saint of lace 
					makers.
 |  |  |