✠ புனிதர் ஜான் ஃபிஷர் ✠(St. John Fisher) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(ஜூன் / Juin 22) |
✠ புனிதர் ஜான் ஃபிஷர்
✠(St. John Fisher)
✠ கர்தினால் மற்றும் ரோச்செஸ்டர்
மறைமாவட்ட ஆயர் :
(Cardinal and Bishop of Rochester)
✠பிறப்பு : அக்டோபர் 19, 1469
பெவெர்லி, யோர்க்ஷயர், இங்கிலாந்து அரசு
(Beverley, Yorkshire, Kingdom of England)
✠இறப்பு : ஜூன் 22, 1535 (வயது
65)
டவர் ஹில், லண்டன், இங்கிலாந்து அரசு
(Tower Hill, London, Kingdom of England)
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
இங்கிலாந்து திருச்சபை
(Church of England)
ஆங்கிலிக்கன் சமூகத்தின் சில பிற திருச்சபைகள்
(Some of the other Churches in the Anglican Communion)
✠முக்திபேறு பட்டம் : டிசம்பர்
29, 1886
திருத்தந்தை எட்டாம் லியோ
(Pope Leo XIII)
✠புனிதர் பட்டம் : மே 19, 1935
திருத்தந்தை பதினோராம் பயஸ்
(Pope Pius XI)
✠பாதுகாவல் :
ரோச்செஸ்டர் மறைமாவட்டம் (Diocese of Rochester)
✠நினைவுத் திருநாள் : ஜூன் 22
புனிதர் ஜான் ஃபிஷர், ஒரு ஆங்கிலேய கத்தோலிக்க ஆயரும் (English
Catholic Bishop), கர்தினாலும் (Cardinal), இறையியலாளரும் (Theologian),
மறைசாட்சியுமாவார் (Martyr). சிறந்த கல்வியாளருமான இவர், இறுதியில்
"கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தின்" (University of Cambridge)
வேந்தருமாவார் (Chancellor).
ஆங்கில சீர்திருத்த (English Reformation) காலத்தில், "அரசன்
எட்டாவது ஹென்றியை" (King Henry VIII) இங்கிலாந்து திருச்சபையின்
பிரதம தலைவராக (Supreme Head of the Church of England) ஏற்றுக்கொள்ள
மறுத்த காரணத்தாலும், திருத்தந்தையின் மேலாதிக்கம் (Papal
Supremacy) கொண்ட கத்தோலிக்க திருச்சபையின் கோட்பாடுகளை (Catholic
Church's Doctrine) ஆதரித்ததாலும், அரசன் எட்டாம் ஹென்றியின்
ஆணைப்படி அவர் தூக்கிலிடப்பட்டார். கத்தோலிக்க திருச்சபையால்
அவர் ஒரு மறைசாட்சியாகவும் புனிதராகவும் மதிக்கப்படுகின்றார்.
இவருடையதும், புனிதர் தாமஸ் மோர் ஆகிய இருவரதும் நினைவுத்
திருநாள், ஜூன் மாதம், 22ம் நாள் நினைவுகூறப்படுகின்றது.
இவர், கி.பி. 1469ம் ஆண்டு, வடக்கு இங்கிலாந்தின் (Northern
England) யோர்க்ஷையர் (Yorkshire) மாகாணத்தின் வரலாற்று சந்தை
நகரான பெவர்லியில் (Beverley) பிறந்தவர் ஆவார். இவரது தந்தையார்,
பெவர்லியின் பெரும் வளமான வணிகரான "ராபர்ட் ஃபிஷர்" (Robert
Fisher) ஆவார். இவரது தாயார் பெயர் "அக்னேஸ்" (Agnes) ஆகும்.
தமது பெற்றோரின் நான்கு குழந்தைகளில் ஒருவரான இவருக்கு எட்டு
வயதாகையில் இவரது தந்தை மரித்துப் போனார். இவரது தாயார்,
"வில்லியம் ஒயிட்" (William White) என்பவரை இரண்டாவதாக மறுமணம்
செய்துகொண்டார். அவர்களுக்கும் ஐந்து குழந்தைகள் பிறந்தன. ஃபிஷர்,
தனது வாழ்நாள் முழுவதும் தனது நீண்ட குடும்பத்துடன் நெருக்கமான
தொடர்புகளை வைத்திருந்ததாக தெரிகிறது. தமது சொந்த ஊரிலுள்ள
தேவாலயத்துடன் இணைக்கப்பட்ட பள்ளியில் ஆரம்ப கல்வி பயின்றார்.
கி.பி. 700ம் ஆண்டு தொடங்கப்பட்ட பழமையான பள்ளியான பெவர்லி இலக்கணப்
பள்ளியிலும் (Beverley Grammar School) கல்வி பயின்றார். இவரை
கௌரவிக்கும் விதமாக இப்பள்ளியின் இல்லங்களில் ஒன்றுக்கு இன்றளவும்
இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
1484ம் ஆண்டில் இருந்து "கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில்" (University
of Cambridge) பிஷர் படித்தார். அவர் "வில்லியம் மெல்டன்"
(William Melton) எனும் ஆங்கிலேய குருவின் செல்வாக்கின் கீழ்
"மைக்கேல்ஹவுஸ்" (Michaelhouse) கல்லூரியிலிருந்து வந்தார்.
வில்லியம் மெல்டன், மறுமலர்ச்சியிலிருந்து எழும் படிப்புகளில்
புதிய சீர்திருத்தத்திற்கு திறந்த மனோபாவமுள்ள ஒரு தத்துவவாதி
ஆவார். 1487ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பைப் பெற்ற ஃபிஷர்,
1491ம் ஆண்டில், முதுகலை பட்டம் பெற்றார். 1491ம் ஆண்டிலேயே,
அனுமதிக்கப்பட்ட வயதுக்குட்பட்டவராக இருந்த போதிலும்,
குருத்துவ படிப்பில் நுழைய திருத்தந்தையால் அனுமதிக்கப்பட்டார்.
1491ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 17ம் தேதியன்று, கத்தோலிக்க மதகுருவாக
குருத்துவ அருட்பொழிவு பெற்றார். அதே ஆண்டில் அவரது கல்லூரியின்
ஒரு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்துடன், அவர்
"நார்த்தல்லர்டன்" (Northallerton) நகரின் "விகார்" (Vicar)
ஆகவும் நியமனம் பெற்றார். 1494ம் ஆண்டு, அவர் பல்கலைக்கழகத்தின்
ஒழுங்கு நிலைநாட்டும் அதிகாரி (Proctor) பதவிக்காக, தமக்கு வருமானம்
தரும் பதவிகளை ராஜினாமா செய்தார். மூன்று வருடங்களுக்குப் பின்னர்,
பல்கலையின் விவாத மேடைகளின் தலைவராக (Master Debator) நியமிக்கப்பட்டார்.
அதே நாளில், அவர் கத்தோலிக்க சிற்றாலய குருவாகவும் (Chaplain),
அரசன் ஏழாம் ஹென்றியின் (King Henry VII) தாயாரும்,
"ரிச்மொன்ட்"
"டெர்பி" ஆகிய இடங்களின் கோமாட்டியுமான (Countess
of Richmond and Derby) "மார்கரெட் பியூஃபோர்ட்" (Margaret
Beaufort) என்பவரது ஒப்புரவாளராகவும் (Confessor) நியமனம்
பெற்றார். 1501ம் ஆண்டு, தூய இறையியலின் மறைவல்லுநராகவும் (Doctor
of Sacred Theology) நியமனம் பெற்றார். பத்து நாட்களின் பின்னர்,
பல்கலையின் துணை வேந்தராக (Vice-Chancellor of the University)
ஃபிஷர் தேர்வு பெற்றார்.
ஃபிஷரின் வழிகாட்டுதலின்பேரில், கோமாட்டி மார்கரெட் (Margaret
Beaufort), கேம்ப்ரிட்ஜ் பல்கலை கழகத்தில் (University of
Cambridge) "செயின்ட் ஜான் மற்றும்
கிறிஸ்து" கல்லூரிகளை (St
John's and Christ's Colleges) நிறுவினார். அத்துடன், "லேடி
மார்கரெட் ஆன்மீக பேராசிரியர்" எனும் பதவியை "ஆக்ஸ்ஃபோர்ட்" (University
of Oxford) மற்றும் "கேம்ப்ரிட்ஜ்" (University of Cambridge)
ஆகிய இரண்டு பல்கலைகழகங்களிலும் உருவாக்கினார்.
"கேம்ப்ரிட்ஜ்" பல்கலை கழகத்தின் முதல் பேராசிரியராக ஃபிஷர் பதவி வகித்தார்.
கி.பி. 1505 முதல், 1508ம் ஆண்டு காலத்தில், "குயின்ஸ் கல்லூரியின்"
(President of Queens' College) தலைவராக பதவி வகித்தார்.
"கேம்ப்ரிட்ஜ்" பல்கலை கழகத்திற்கு நிதி ஆதாரங்களை சேகரிப்பதுவும்,
பாரம்பரிய இலத்தீன் மற்றும் கிரேக்க ஆசிரியர்கள் மட்டுமல்லாது,
எபிரேயம் மொழிகளையும் கற்பிக்கும் ஐரோப்பாவின் முன்னணி கல்வியாளர்களை
ஈர்ப்பதுவும் ஃபிஷரின் ராஜதந்திரமாக இருந்தது.
அரசன் ஏழாம் ஹென்றியின் (Henry VII) தனிப்பட்ட வலியுறுத்தல் காரணமாக,
1504ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 14ம் தேதி, ரோச்செஸ்டர் மறைமாவட்ட
ஆயராக (Bishop of Rochester) நியமிக்கப்பட்டார். அக்காலத்தில்,
ரோச்செஸ்டர், இங்கிலாந்தின் மிகவும் வறிய மறைமாவட்டமாக இருந்தது.
பொதுவாக, இதுவே ஃபிஷரின் திருச்சபை வாழ்க்கையின் முதல் படியாக
பார்க்கப்பட்டது. ஆயினும்கூட, 31 ஆண்டுகளாக, ஃபிஷர் தனது மீதமுள்ள
வாழ்நாள் முழுவதும், தனது விருப்பப்படி, அங்கேயே தங்கினார். அதே
சமயத்தில், பிற ஆங்கில ஆயர்களைப் போன்று, ஃபிஷர் சில மாநில கடமைகளை
கொண்டிருந்தார். குறிப்பாக, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில்
அவர் ஆர்வம் காட்டினார். 1504ம் ஆண்டு, அவர் பல்கலைக்கழக வேந்தராக
(Chancellor) தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து பத்து வருடங்களாக,
வருடாவருடம் தேர்வு செய்யப்பட்ட அவர், பின்னர் வாழ்நாள் வேந்தராக
தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையே, ஃபிஷர் இளவரசர் ஹென்றியின்
(Prince Henry) (பின்னாள் அரசன் எட்டாம் ஹென்றி (King Henry
VIII) ஆசிரியராகவும் இருந்தார். கி.பி. 1509ம் ஆண்டு, அரசன் ஏழாம்
ஹென்றி மற்றும் அவரது தாயார் லேடி மார்கரெட் இருவரும் மரித்தனர்.
என்னதான் நாவன்மையும் புகழும் இருப்பினும், அவருடைய முன்னாள்
மாணவரும், இந்நாள் புதிய அரசனுமாகிய எட்டாவது ஹென்றியுடன்
(King Henry VIII) மோதல் இருந்தது. அரசனின் பாட்டியான லேடி
மார்கரெட், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கு விட்டுச் சென்ற நிதிகளின்மேல்
பிரச்சினைகளும் விவாதங்களும் எழுந்திருந்தன.
கி.பி. 1512ம் ஆண்டு, அப்போதைய "ஐந்தாம் இலாத்தரன் ஆலோசனை சபைக்கான"
(Fifth Council of the Lateran) ஆங்கிலேய பிரதிநிதியாக ஃபிஷர்
நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், ரோம் நகருக்கு பயணிக்க
வேண்டிய அவரது பயணம் தள்ளி வைக்கப்பட்டது. இறுதியாக கைவிடப்பட்டது.
அரசி கேதரினின் (Queen Catherine of Aragon) பாதுகாப்பு:
அரசன் எட்டாம் ஹென்றி, அரசி கேதரினை விவாகரத்து செய்ய முயற்சித்தபோது,
ஃபிஷர் அரசியின் பிரதான ஆதரவாளராக ஆஜரானார். திருத்தந்தை பிரதிநிதியின்
நீதிமன்றத்தில் (Legates' court) அரசியின் சார்பில் அவர் ஆஜரானபோது,
அங்கு தனது மொழியின் வழிகாட்டுதலால் பார்வையாளர்களை திடுக்கிடவைத்த
அவர், புனிதர் திருமுழுக்கு யோவானைப் (St John the Baptist) போலவே,
திருமணத்தின் தனித்துவமின்மையின் சார்பாக இறக்க தயாராக இருப்பதாக
அறிவித்தார். இதைக் கேட்ட அரசன் எட்டாம் ஹென்றி, மிகவும் கோபமாக
எழுந்து, இலத்தீன் மொழியினாலான நீண்ட உரையை திருத்தந்தை பிரதிநிதியின்
நீதிமன்றத்தில் (Legates' court) சமர்ப்பித்தார். ஃபிஷரின் இதனுடைய
நகல் அவரது கையெழுத்துப் பிரதிகளுடன் இன்னமும் உள்ளது. அவர்
அரச கோபத்துக்கு எவ்வளவு அஞ்சுகிறார் என்பதனை இது விளக்கும்.
அகற்றப்பட்ட ரோமிற்கான காரணம், ஃபிஷரின் தனிப்பட்ட முடிவுகளை
முடிவுக்கு கொண்டுவந்தது. ஆனால், அவர் செய்த காரியத்திற்காக,
அரசன் அவரை எப்போதும் மன்னிக்கவில்லை.
கத்தோலிக்க திருச்சபையின் மீதான அரசனின் தாக்குதல்:
கி.பி. 1529ம் ஆண்டு, நவம்பர் மாதம், ஹென்றி ஆட்சியின் "நீண்ட
பாராளுமன்றம்" கத்தோலிக்க திருச்சபையின் தனிச்சட்டங்களின் மீது
ஆக்கிரமிக்கத் தொடங்கியது. ஃபிஷர், மேல் சபையின் உறுப்பினராக
இருப்பதால், "பிரபுக்கள் சபை" (House of Lords) அத்தகைய நடவடிக்கைகளால்
இங்கிலாந்தில் கத்தோலிக்க திருச்சபை முற்றிலும் அழிக்கப்படுவதற்கு
முடிவு செய்யப்படலாம் என்று பாராளுமன்றத்தை (Parliament) எச்சரித்தது.
பொது உறுப்பினர்கள், ஃபிஷர் பாராளுமன்றத்தை அவமதித்துவிட்டதாக,
தமது சபாநாயகர் மூலம் அரசனிடம் முறையிட்டனர். அரசனோ, அவர்களை
மறைமுகமாக திரைக்கு பின்னால் தள்ளினார். வாய்ப்புகளை இழந்துவிடவில்லை.
ஹென்றி, தமக்கு முன் ஃபிஷரை வரவழைத்து, விளக்கம் கேட்டார். விளக்கம்
கொடுக்கப்பட, ஹென்றி, தமக்கு திருப்தி என்று அறிவித்தார். ஆனால்,
பொது உறுப்பினர்களோ, விளக்கம் போதுமானதாகவும் திருப்தியளிப்பதாகவும்
இல்லை என்று அறிவித்தனர். ஆகவே, ஹென்றி ஒரு பெரிய இறையாண்மை
கொண்டவராக தோன்றினார்.
கி.பி. 1535ம் ஆண்டு, மே மாதம், புதிதாய் பதவியேற்ற திருத்தந்தை
மூன்றாம் பவுல் (Pope Paul III) ஃபிஷரை நான்கு புனிதர்களின்
பேராலய கர்தினாலாக (Cardinal Priest of San Vitale) உயர்த்தினார்.
உண்மையில், ஃபிஷர் மீதான நடவடிக்கைகளை எளிதாக்குவதற்காக
ஹென்றியை ஊக்குவிப்பதற்கான நம்பிக்கையின் வெளிப்படையாக இது இருந்தது.
ஆனால் இதன் விளைவு துல்லியமாக தலைகீழாக இருந்தது. கர்தினால்
தொப்பியை இங்கிலாந்து கொண்டுவர ஹென்றி தடை விதித்தார். அதற்கு
பதிலாக, ஃபிஷரின் தலையை ரோம் நகருக்கு அனுப்புவேன் என்று அறிவித்தார்.
ஜூன் மாதம், ஃபிஷர் விசாரணைக்காக சிறப்பு ஆணையம் அமைக்கப்பட்டது.
மற்றும் ஜூன் 17ம் நாளன்று, அவர் கைது செய்யப்பட்டு,
வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் (Westminster Hall) நிறுத்தப்பட்டார்.
"அரசன் எட்டாவது ஹென்றியை" (King Henry VIII) இங்கிலாந்து
திருச்சபையின் பிரதம தலைவராக (Supreme Head of the Church of
England) ஏற்றுக்கொள்ள மறுத்ததாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.
ரோச்செஸ்டர் ஆயர் (Bishop of Rochester) பதவியிலிருந்து அவர்
இறக்கப்பட்டிருந்த காரணத்தால் அவர் ஒரு சாதாரண பிரஜையாகவே நடத்தப்பட்டார்.
ஃபிஷர் குற்றவாளி என்று தீர்மானித்த நீதிபதிகள், அவருக்கு
தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர். ஃபிஷர் "டிபர்ன்" (Tyburn)
எனுமிடத்தில் தூக்கிலிடப்பட்டார்.
|
|
|