Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் ஃபிலிப்போ ஸ்மால்டோன் ✠ (St. Filippo Smaldone)
   
நினைவுத் திருநாள் : (ஜூன் / juin- 04)

✠ புனிதர் ஃபிலிப்போ ஸ்மால்டோன் ✠ (St. Filippo Smaldone)
குரு, நிறுவனர்:

பிறப்பு: ஜூலை 27, 1848
நேபிள்ஸ், இரண்டு சிசிலிகளின் இராச்சியம்
(Naples, Kingdom of the Two Sicilies)

இறப்பு: ஜூன் 4, 1923 (வயது 74)
லெக்ஸ், இத்தாலி இராச்சியம்
(Lecce, Kingdom of Italy)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திப்பேறு பட்டம்: மே 12, 1996
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

நியமனம்: அக்டோபர் 15, 2006
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
(Pope Benedict XVI)

நினைவுத் திருநாள்: ஜூன் 4

பாதுகாவல்:
திருஇருதய சலேசியன் அருட்சகோதரியர்
(Salesian Sisters of the Sacred Hearts)
காது கேளாத மக்கள்
வாய் பேச இயலாத மக்கள்

புனிதர் ஃபிலிப்போ ஸ்மால்டோன், ஒரு இத்தாலிய ரோமன் கத்தோலிக்க குருவும், "திருஇருதய சலேசியன் அருட்சகோதரியர்" (Salesian Sisters of the Sacred Hearts) சபையின் நிறுவனரும் ஆவார். ஸ்மால்டோன் தனது வாழ்நாளில் காது கேளாதோருடனான விரிவான பணிகளுக்காக மிகவும் பிரபலமானவர். அருட்தந்தை ஸ்மால்டோன் ஒரு திறமையான போதகராக இருந்தார். அவர் அனாதைகள் மற்றும் ஊமை மக்களை சரியான முறையில் கவனிப்பதிலும், பராமரிப்பதிலும் அர்ப்பணிப்புடன் அறியப்பட்டார். இது அவருக்கு குடிமை அங்கீகாரத்தைப் பெற்றது.

ஃபிலிப்போ ஸ்மால்டோன், கி.பி. 1848ம் ஆண்டில் நேபிள்ஸ் (Naples) நகரில் வசித்துவந்த அன்டோனியோ ஸ்மால்டோன் (Antonio Smaldone) மற்றும் மரியா கான்செட்டா டி லூகா (Maria Concetta De Luca) ஆகியோரது ஏழு குழந்தைகளில் முதல் குழந்தையாகப் பிறந்தார். அவர் கி.பி. 1858ல், தனது முதல் நற்கருணை (First Communion) பெற்ற இவர், கி.பி. 1862ம் ஆண்டு, தனது உறுதிப்பூசுதல் (Confirmation) அருட்பிரசாதத்தையும் பெற்றார்.

தமது படிப்புக்காக அப்போஸ்தலப் பணிகளை கைவிட விரும்பாத இவர், இளம் சபைக்கான தேர்வில் கிட்டத்தட்ட தோல்வியடைந்தார். நேபிள்ஸ் கார்டினல் பேராயர் (Cardinal Archbishop of Naples) வணக்கத்துக்குரிய சிஸ்டோ ரியாரியோ ஸ்ஃபோர்ஸ் (Venerable Sisto Riario Sforz) அனுமதியுடன் கி.பி. 1876ம் ஆண்டில் அவர் நேபிள்ஸுக்குத் திரும்பினார். ரோசானோ-கரியாட்டி (Archdiocese of Rossano-Cariat) மறைமாவட்டத்தில் கல்வி கற்ற காலத்திற்குப் பிறகு, அவர் கி.பி. 1870ம் ஆண்டு, ஜூலை மாதம், 31ம் தேதியன்று, ஒரு துணை திருத்தொண்டராக (Subdeacon) நியமிக்கப்பட்டார். கி.பி. 1871ம் ஆண்டு, மார்ச் மாதம், 27ம் தேதியன்று, ஒரு திருத்தொண்டராக அருட்பொழிவு செய்யப்பட்டார்.
ஸ்மால்டோன், கி.பி. 1871ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 23ம் நாளன்று, குருத்துவ அருட்பொழிவு பெற்றார். தனது இறையியல் கல்வியின்போது நேபிள்ஸின் காது கேளாத மக்களுக்கு உதவுவதற்கான முயற்சிகளைத் தொடங்கினார். மேலும் நோயுற்றவர்களுடன் பணியாற்றினார். ஆனால் ஒரு கட்டத்தில் தனது ஊமையாக இருந்த மாணவர்கள் மீது விரக்தியடைந்த இவர், மனச்சோர்வடைந்தார். வெளிநாட்டு மறைப்பணிகளுக்குச் செல்வதற்காக கற்பித்தல் பணியை கைவிட அனுமதி கேட்டார். ஆனால் அவரை சமாதானப்படுத்திய அவரது ஆன்மீக இயக்குனர், அவரை அங்கேயே நிலைத்திருக்கவும், தனது வேலையைத் தொடரவும் அறிவுறுத்தினார்.

கி.பி. 1884ம் ஆண்டில், அவர் வாழ்ந்த பகுதி, காலரா நோயால் பாதிக்கப்பட்டபோது, அந்நோயால் தாக்குண்ட ஸ்மால்டோன் கிட்டத்தட்ட இறக்கும் நிலைக்குப் போய் உயிர் பிழைத்தார். மேலும், அன்னை மரியாளின் கருணையாலேயே தாம் உயிர் பிழைத்ததாக உறுதியாக நம்பினார். கி.பி. 1885ம் ஆண்டில், மார்ச் மாதம், 25ம் நாளன்று, காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதோருக்காக "லெஸ்" (Lecce) நகரில், தந்தை லோரென்சோ அப்பிசெல்லா மற்றும் பல கன்னியாஸ்திரிகளின் உதவியுடன் ஒரு சபையை நிறுவினார். அதனை தனது பராமரிப்பில் வைத்திருந்த அவர், கி.பி. 1897ம் ஆண்டில் ரோம் (Rome) மற்றும் பாரி (Bari) இரண்டு நகரங்களிலும் தனது சபையின் பல கிளைகளைத் திறந்தார். கி.பி. 1912ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 18ம் தேதி, அவரது சபை, ஃபிரான்சிஸ்கன் சபையுடன் (The Order of Friars Minor) ஒருங்கிணைக்கப்பட்டது. கி.பி. 1915ம் ஆண்டு, நவம்பர் மாதம், 30ம் தேதி, திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட் (Pope Benedict XV) அவர்களிடமிருந்து பாராட்டுக்கான ஆணையை பெற்ற இவரது சபை, கி.பி. 1925ம் ஆண்டு, ஜூன் மாதம், 21ம் தேதி, ஸ்மால்டோன் இறந்த பின்னர் திருத்தந்தை பதினோராம் பயஸ் (Pope Pius XI) அவர்களிடமிருந்து முழு அங்கீகாரத்தையும் பெற்றது.

ஸ்மால்டோன், நற்கருணை பக்தியை பரப்பும் நோக்கில், "நற்கருணை ஆராதனைக்கான குருக்களின் குழு" (Eucharistic League of Priest Adorers) மற்றும், "நற்கருணை ஆராதனைக்கான மகளிர் குழு" (Eucharistic League of Women Adorers) ஆகிய இரண்டு குழுக்களை நிறுவினார். தூய ஃபிரான்சிஸ் டி சலேஸ் மறைப்பணியாளர்களின் (Missionaries of Saint Francis de Sales) தலைமைப் பொறுப்பில் அவர் ஒரு குறுகிய காலத்திற்கு பணியாற்றினார். அவரை லெஸ் பேராலயத்தில் பொறுப்பாளராக நியமனம் செய்த திருச்சபை அதிகாரிகளைப் போலவே, குடிமை அதிகாரிகளும் அவரைப் பாராட்டி அங்கீகரித்தனர். கி.பி. 1880ம் ஆண்டில், மிலன் (Milan) நகரில் நடந்த காது கேளாதோருக்கான ஆசிரியர்களின் மாநாட்டில் ஒரு நிபுணராக பங்கேற்க அனுப்பப்பட்டார்.

நீரிழிவு தொடர்பான சிக்கல்களாலும், இருதய நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்த ஸ்மால்டோன், கி.பி. 1923ம் ஆண்டு, ஜூன் மாதம், 4ம் தேதி, இரவு 9:00 மணிக்கு இறந்தார். அவரது மீபொருட்கள், பின்னர் 1942ம் ஆண்டு, சபையின் தலைமை இல்லத்திற்கு மாற்றப்பட்டன. 2005ம் ஆண்டில், இவரது சபையின் கிளைகள், ருவாண்டா (Rwanda), மால்டோவா (Moldova) போன்ற நாடுகளில் 398 மறைப்பணியாளர்களுடன், மொத்தம் 40 இல்லங்கள் இருந்தன.
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா