Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் போட்வுல்ஃப் ✠(St. Botwulf of Thorney)
   
நினைவுத் திருநாள் : (ஜூன் / Juin 17)
✠ புனிதர் போட்வுல்ஃப் ✠(St. Botwulf of Thorney)

 
மடாதிபதி :(Abbot)

பிறப்பு : கி.பி. 7ம் நூற்றாண்டு

இறப்பு : கி.பி. 680

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
மரபுவழி திருச்சபை
(Orthodox Church)
லூதரன் திருச்சபை (குறிப்பாக, டென்மார்க் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளில்)
(Lutheran Church (Particularly in Denmark & Sweden)

நினைவுத் திருநாள் : ஜூன் 17

பாதுகாவல் : பயணிகள் மற்றும் விவசாயம்

புனிதர் போட்வுல்ஃப், ஒரு ஆங்கிலேய மடாதிபதியும் கிறிஸ்தவ புனிதரும் ஆவார். இவர் பயணிகள் மற்றும் விவசாயிகளின் பாதுகாவலருமாவார்.

சந்தேகமான விவரங்களைத் தவிர்த்து, புனிதர் போட்வுல்ஃப் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றின விவரங்கள் சிறிதளவே இருந்தன. அவர் மரணமடைந்து நானூறு வருடங்களின் பின்னர் "ஃபோல்கார்ட்" (Folcard) என்ற துறவி எழுதிய சரித்திர விவரங்களே இருந்தன.

கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் ஜெர்மனியிலிருந்து இங்கிலாந்து நாட்டுக்கு புலம்பெயர்ந்து சென்ற மக்கள் "ஏங்கில்ஸ்" (Angles) என்றழைக்கப்பட்டனர். இவர்கள் "மெர்சியா", "நார்த்ஊம்ப்ரியா" மற்றும் "கிழக்கு ஏங்க்ளியா" (Mercia, Northumbria, and East Anglia) ஆகிய அரசுகளை நிறுவி அதற்கு இங்கிலாந்து மற்றும் ஆங்கிலேய பெயர்களை அளித்தனர்.

காலக்கிரமமாகத் தொகுக்கப்பட்ட 653ம் வருடத்தின் ஆங்கிலோ-சாக்சன் நிகழ்ச்சிக் குறிப்புகள் (The Anglo-Saxon Chronicle records for the year 653), மேற்சொன்ன மத்திய "ஏங்கில்ஸ்" (Angles) "எர்ல்டோர்மன் பீடா" (Earldorman Peada) என்பவரின் வழிகாட்டுதலில் உண்மையான விசுவாசத்தைப் பெற்றதாக குறிப்புகள் உள்ளன.

அரசன் "அன்னா" (King Anna) கொல்லப்பட்டான். போட்வுல்ஃப் "இகான்ஹோவில்" (Ikanho) தேவாலயமொன்றினை கட்டியெழுப்ப தொடங்கினார். "ஸஃப்போல்க்" (Suffolk) என்னுமிடத்தில் துறவு மடமொன்றை நிறுவினார்.

"இகான்ஹோவில்" (Ikanho) அவர் கட்டிய ஆலயத்தின் அஸ்திவாரத்தினருகே அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார். பல ஆங்கிலேய தேவாலயங்கள் அவர் பெயரில் அர்ப்பணிக்கப்பட்டன. பண்டைய "புனிதர்களின் ஆக்ஸ்ஃபோர்ட் அதிகாரத்தில்" அவர் பெயரில் அர்ப்பணிக்கப்பட்ட பழமையான ஆலயங்களின் எண்ணிக்கை 64 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், பிந்தைய ஆய்வுகள், அவர் பெயரில் அர்ப்பணிக்கப்பட்ட ஆலயங்களின் எண்ணிக்கை 71 என்றது.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா