Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் பென்னோ ✠(St. Benno of Meissen)
   
நினைவுத் திருநாள் : (ஜூன் / Juin 16)
✠ புனிதர் பென்னோ ✠(St. Benno of Meissen)

 
ஒப்புரவாளர் மற்றும் மெய்ஸ்ஸன் மறைமாவட்ட ஆயர் :
(Confessor and Bishop of Meissen)

பிறப்பு : கி.பி. 1010
ஹில்ட்ஷெய்ம், ஸாக்சனி
(Hildesheim, Duchy of Saxony)

இறப்பு : ஜூன் 16, 1106
மெய்ஸ்ஸன் (Meissen)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

புனிதர் பட்டம் : மே 31, 1523
திருத்தந்தை ஆறாவது அட்ரியான்
(Pope Adrian VI)

பாதுகாவல் : மீனவர்/ நெசவாளர்

நினைவுத் திருநாள் : ஜூன் 16

"ஹில்ட்ஷெய்ம்" (Hildesheim) நகரின் வசதி வாய்ப்புள்ள பிரபுக்கள் குடும்பத்தின் வாரிசாகப் பிறந்த புனிதர் பென்னோவின் வாழ்க்கை வரலாறு பற்றின தகவல்கள் சிறிதளவே உள்ளன. உள்ளூரிலுள்ள புனிதர் மைக்கேல் துறவு மடத்தில் (St. Michael's monastery) கல்வி கற்ற இவர், கோஸ்லர் அத்தியாய (Canon of the Goslar chapter) நியாயஸ்தராக இருந்தார். இவர், கி.பி. 1066ம் ஆண்டு, அரசன் நான்காம் ஹென்றியால் (King Henry IV) "மெய்ஸ்ஸன்" நகரின் ஆயரவை அதிகாரமுள்ளவராக (Episcopal see of Meissen) நியமிக்கப்பட்டார்.

கி.பி. 1073ம் ஆண்டு, பென்னோ சாக்ஸன் நகர கலகத்தின் (Saxon Rebellion) ஆதரவாளராக தோன்றினார். இருப்பினும், "லம்பெர்ட்" (Lambert of Hersfeld) எனும் வரலாற்றாசிரியரும் சமகால அதிகாரிகளும் தங்கள் பங்குக்கு அவர்மீது மேலும் சிறிதளவு சாட்டினார்கள். அரசன் நான்காம் ஹென்றி கி.பி. 1075ம் ஆண்டு, பென்னோவை நாடு கடத்தினான். ஆனால் மறு வருடமே அவரை திரும்பி வர அனுமதித்தான்.

பட்டம் மற்றும் பதவியளிக்கும் கடுமையான சர்ச்சைகளில் பென்னோ திருத்தந்தை ஏழாம் கிரகோரிக்கு (Pope Gregory VII) ஆதரவளித்தார். மேலும், கி.பி. 1077ம் ஆண்டு, அரசனுக்கு எதிரான "ரூடோல்ஃப்" (Election of Antiking Rudolf of Rheinfelden) என்பவரது தேர்தலில் பங்கெடுத்ததாக கூறப்பட்டது.

எதிர் திருத்தந்தை மூன்றாம் கிளமென்ட்டுக்கு (Antipope Clement III) எதிரானவர் என்ற காரணத்தால் "ரவென்னா" உயர்மறை மாவட்ட பேராயர் "கில்பர்ட்" (Archbishop Guibert of Ravenna) அவர்களுக்கு ஆதரவளித்தார். இதற்கு அரசன் நான்காம் ஹென்றியும் ஆதரவளித்தான்.

தமது செல்வாக்கினை "சாக்ஸன்" (Saxons) மக்களின் அமைதிக்காக உபயோகிப்பதாக பென்னோ வெளிப்படியாக வாக்குறுதியளித்திருந்தார். ஆனால் அதை அவரால் நிறைவேற்ற இயலாமல் போனது. 1097ல் திருத்தந்தையர் விருந்திற்கு வந்து திரும்புகையில் "இரண்டாம் அர்பன்" (Urban II) அவர்களை சரியான திருத்தந்தையாக அடையாளம் கண்டார். இத்துடன் அவர் நம்பத்தகுந்த வரலாற்றிலிருந்து மறைந்து போனார். ஆயினும் தமது மறை மாவட்டத்திற்கு அதிக சேவையாற்றியிருந்தார்.

அதன்பின்னர் அவரது மறைப்பணிகளைப்பற்றியோ திருச்சபையை கட்டி எழுப்புவதற்கான ஆர்வம் பற்றியோ யாதொரு ஆதாரங்களும் கிடைக்கவில்லை. 1106ம் ஆண்டு, ஜூன் மாதம், 16ம் நாளன்று, பென்னோ இயற்கையாக மரணம் எய்தினார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா