Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் அன்டோனியோ மரிய கியனேல்லி ✠
(St. Antonio Maria Gianelli)
   
நினைவுத் திருநாள் : (ஜூன் / Juin 07)
✠ புனிதர் அன்டோனியோ மரிய கியனேல்லி ✠ (St. Antonio Maria Gianelli)
 *ஆயர்/ நிறுவனர் :
(Bishop/ Founder)

 *பிறப்பு : ஏப்ரல் 12, 1789
செரெட்டா, மான்ட்டுவா, மிலன்
(Cereta, Mantua, Duchy of Milan)

 *இறப்பு : ஜூன் 7, 1846 (வயது 57)
பியசென்ஸா, எமிலியா-ரோமாக்னா, பார்மா
(Piacenza, Emilia-Romagna, Duchy of Parma)

 *ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

 *முக்திபேறு பட்டம் : ஏப்ரல் 19, 1925
திருத்தந்தை பதினோராம் பயஸ்
(Pope Pius XI)

 *புனிதர் பட்டம் : அக்டோபர் 21, 1951
திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ்
(Pope Pius XII)

 *நினைவுத் திருநாள்: ஜுன் 07

 *பாதுகாவல் :
போப்பியோ மறைமாவட்டம் (Diocese of Bobbio), வல் டி வர (Val di Vara)

புனிதர் அன்டோனியோ மரிய கியனேல்லி, இத்தாலியின் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஆயரும், "தோட்ட அன்னையின் மகள்கள்" (Daughters of Our Lady of the Garden) மற்றும் "புனித அல்போன்சஸ் மறைப்பணியாளர்கள்" (The Missionaries of Saint Alphonsus) ஆகிய சபைகளை நிறுவியவரும் ஆவார்.

கி.பி. 1789ம் ஆண்டு, விவசாயிகளின் கிராமமொன்றில் பிறந்த அன்டோனியோ மரிய கியனேல்லியின் தந்தை பெயர் "கியாகொமோ" (Giacomo) ஆகும். இவரது தாயார் பெயர் "மரிய கியனேல்லி" (Maria Gianelli) ஆகும். ஐந்து சகோதரர்களுடன் பிறந்த இவர் ஒரு விதிவிலக்கான மாணவர் ஆவார். இவரது குடும்பத்தினர் தங்கியிருந்து பணியாற்றிய பண்ணையின் உரிமையாளரே இவரது குருத்துவ படிப்புக்காக செலவு செய்தார்.

1807ம் ஆண்டு, நவம்பர் மாதம், தமது 18 வயதில் "இறையியல் சித்தாந்தம்" மற்றும் "புனித வழிபாட்டு முறை" ஆகியவற்றை கற்க ஆரம்பித்து முனைவர் பட்டம் வென்றார். 1812ம் ஆண்டு, மார்ச் மாதம், "ஜெனோவாவின் கர்தினால் பேராயர்" (Cardinal Archbishop of Genoa) "கியுசெப் மரிய ஸ்பினா" (Giuseppe Maria Spina) அவர்களால் திருத்தொண்டராக அருட்பொழிவு செய்விக்கப்பட்ட இவர், அதே 1812ம் வருடத்திலேயே அதே கர்தினால் பேராயராலேயே குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்டார். முறையான வயதாகாத காரணத்தால் இவருக்கு சிறப்பு ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. குருத்துவம் பெற்ற இவர், "மான்ட்டுவா" (Mantua) என்ற பங்கில் பங்குத்தந்தையாக நியமனம் பெற்று பணியாற்றினார்.

1826ம் ஆண்டு, "சியாவாரியின்" (Chiavari) தலைமை குருவாக நியமிக்கப்பட்டார். 1837ம் ஆண்டு வரை பதினோரு வருடங்கள் அதே பதவியிலிருந்தார். ஆண்களுக்கான "புனித அல்போன்சஸ் மறைப்பணியாளர்கள்" (The Missionaries of Saint Alphonsus) என்ற சபையை 1827ம் ஆண்டு நிறுவினார். அந்த சபை 1848ம் ஆண்டு வரை நீடித்தது. 1829ம் ஆண்டு, ஜனவரி மாதம், 12ம் நாளன்று, "தோட்ட அன்னையின் மகள்கள்" (Daughters of Our Lady of the Garden) என்ற பெண்களுக்கான சபையை நிறுவினார். ஏழைப் பெண்களுக்கு கல்வி கற்பிக்கவும் நோயாளிகளுக்கு சேவை செய்வதற்காகவும் இந்த சபை பணியாற்றுகிறது. இதன் சேவைகள், இன்றும் ஐரோப்பா, ஆசியா மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் (Europe, Asia and the United States of America) ஆகிய உலக நாடுகளில் தொடர்ந்து நடைபெறுகிறது. இவர் மரித்து பல வருடங்களின் பின்னர் 1882ம் ஆண்டு, ஜூன் மாதம், 7ம் நாளன்று, திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ (Pope Leo XIII) இச்சபைக்கு முறையாக அங்கீகாரமளித்தார்.

திருத்தந்தை பதினாறாம் கிரகோரி (Pope Gregory XVI) அவர்கள் இவரை "போப்பியோ" மறைமாவட்ட ஆயராக (Bishop of Bobbio) 1837ம் ஆண்டு, நியமித்தார்.

சுமார் ஒரு வருட காலம் நோய்வாய்ப்பட்டிருந்த இவர், ஜூன் 1846ம் ஆண்டு, ஜூன் மாதம், 7ம் நான்று, மரித்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா