Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ அருளாளர்: யோலந்தா ✠(Blessed Yolanda)
   
நினைவுத் திருநாள் : (ஜூன் / Juin 12)
✠ அருளாளர் யோலந்தா ✠(Blessed Yolanda)
 
பிறப்பு : கி.பி. 1235
எஸ்டர்காம்
(Esztergom)

இறப்பு : கி.பி. 1298
க்நீஸ்னோ
(Gniezno)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

அருளாளர் பட்டம் : கி.பி. 1827
திருத்தந்தை 12ம் லியோ
(Pope Leo XII)

நினைவுத் திருநாள் : ஜூன் 12

அருளாளர் யோலந்தா, ஹங்கேரியின் அரசர் "நான்காம் பேலா" மற்றும் "மரிய லஸ்கரினா" (King Bla IV of Hungary and Maria Laskarina) ஆகியோரின் மகளாவார். இவர், "புனிதர் ஹங்கேரியின் மார்கரெட்" (Saint Margaret of Hungary) மற்றும் "புனிதர் "கிங்கா" (Saint Kinga (Cunegunda) ஆகியோரின் சகோதரியுமாவார். புகழ்பெற்ற ஃபிரான்சிஸ்கன் "புனிதர் ஹங்கேரியின் எலிசபெத்" (Elizabeth of Hungary) இவரது தந்தை வழி அத்தை ஆவார்.

போலந்து நாட்டின் பிரபுவைத் அருட்சாதனம் செய்திருந்த யோலந்தாவின் தமக்கை கிங்காவின் மேற்பார்வையில் கல்வி கற்பதற்காக யோலந்தா போலந்து அனுப்பப்பட்டார். அங்கே, அவர் "போலஸ்லா" (Bolesław the Pious) என்பவரைத் அருட்சாதனம் செய்ய அறிவுறுத்தப்பட்டார். 1257ம் ஆண்டு, அவர்களது அருட்சாதனம் நடந்தது. அவர்களுக்கு பின்வரும் மூன்று பெண்குழந்தைகள் பிறந்தன:

1. 1263ம் ஆண்டு, பிறந்த எலிசபெத் (Elisabeth of Kalisz) (இவர் பின்னாளில் "லெக்னிகாவின்" பிரபு "ஹென்றி" (Henry V, Duke of Legnica) என்பவரை அருட்சாதனம் செய்துகொண்டார்.)
2. 1266ம் ஆண்டு, பிறந்த ஹெட்விக் (Hedwig of Kalisz) (இவர் பின்னாளில் போலந்தின் மன்னன் "முதலாம் விளாடிஸ்லாவ்" (Władysław I the Elbow-high, King of Poland) என்பவரை அருட்சாதனம் செய்துகொண்டார்.)
3. 1278ம் ஆண்டு, பிறந்த அன்னா (Anna of Kalisz) (இவர் பின்னாளில் "க்நீஸ்னோ" நகரில் அருட்சகோதரியாக (Nun in Gniezno) துறவறம் பெற்றார்.)

யோலந்தா, தமது திருமணத்தின்போதே எதிர்காலத்தில் ஏழைகளுக்கும் வீடற்றவர்களுக்கும் உதவும் எண்ணம் கொண்டார். இதற்கு அவரது கணவரான "போல்ஸ்லா"வும் துணை நின்றார். அதன் காரணமாகவே அவருக்கு "நல்லோர்" (The Pious) எனும் பட்டப்பெயரும் கிடைத்தது.

"சண்டேஸ்" (Sandez) என்னுமிடத்தில் யோலந்தாவின் தமக்கை கிங்கா, ஏழைகளுக்கான (Poor Clare monastery) துறவு மடம் ஒன்றினை நிறுவினார்.

1279ம் ஆண்டு, யோலந்தாவின் கணவர் "போல்ஸ்லா" மரணமடைந்தார். விதவையான யோலந்தா, தமது பெண்களில் ஒருவரான அன்னாவுடன் (Anna) இணைந்து தமக்கையின் "ஏழை கிளாரா" (Poor Clare monastery) என்ற துறவு மடத்தினை நிர்வகிக்க ஆரம்பித்தார். ஆனால், அங்கே நடந்த ஆயுதப் போரின் காரணமாக துறவு மடத்தை அங்கிருந்து அகற்ற வற்புறுத்தப்பட்டார்கள்.

யோலந்தா "க்நீஸ்னோ" (Gniezno) என்னுமிடத்தில் புதிய துறவு மடம் ஒன்றினை நிறுவினார். 63 வயதான யோலந்தா, 1298ம் ஆண்டு, மரணமடைந்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா